பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1/ அயோத்திதாசர் சிந்தனைகள்

நிறைவு செய்ய முன் வந்தவர்கள் சென்னையில் டி.பி. கமலநாதன், எஸ்.வி. ராஜதுரை, பெங்களூரில் ஐ. உலகநாதன், வேலூரில் டி.குப்புசாமி, எஸ். பெருமாள், கோலார் தங்கவயலில் ஐ. லோகநாதன் ஆகியோர் இவர்களனைவருக்கும் என் நன்றி.

தொகுப்புப் பணிகளுக்கிடையே ஏற்படும் அயர்வு, தளர்வுகளை நீக்கி, ஆலோசனைகள் பல அளித்து ஊக்குவித்து வந்த நண்பர்குழாம் மிகப்பெரியது. அவர்களுள் சிலரையே இங்கு குறிப்பிட முடியும், தில்லியில் கஜேந்திரன், லட்சுமணன், மற்ற தமிழ் நண்பர்கள், சென்னையில் வ.கீதா, மனுவேல் அல்போன்ஸ், எம்.எஸ்.எஸ்.பாண்டியன், பாளையங்கோட்டையில் தே.லூர்து, த.தருமராஜ், திருநெல்வேலியில் ஆ.இரா.வேங்கடாசலபதி, பெங்களூரில் எஸ்பி. லாசர், திருச்சியில் அந்தோணி டி குருஸ் முதலியோர்.

அச்சுக் கோக்கும் பணியைக் கவனமுடனும், பொறுமையுடனும் நிறைவேற்றியவர்கள் சரஸ்வதியும், ஹரிநாராயணனும். இவர்கள் பணிபுரியும் நிறுவனம் SVA Computer Centre, சென்னை. இவர்களுக்கும் என் நன்றி.

அயோத்திதாசர் சிந்தனைகளை அச்சேற்றி, அரங்கேற்றி, உலகறியச் செய்யும் அரும்பணியை ஏற்றுக் கொண்டவர் பாளையங்கோட்டை, புனித சவேரியார், கல்லூரியில் அமைந்துள்ள நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மைய இயக்குநர் பிரான்சிஸ் ஜெயபதி. அவர்களுக்கும் தமிழகம் நன்றிக் கடன்பட்டுள்ளது. என்னளவில் வடிவமைத்து இறுதிப் படிவம் எடுத்துவிட்ட போதிலும் வடிவமைப்பில் நுட்பமான மாற்றங்கள் செய்த சி.மோகனுக்கும், அம்மாற்றங்களை கணினியில் செம்மையாக நிறைவேற்றிய நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையக் கணினியாளர் காட்வினுக்கும், அச்சுப் பணியை அழகுடன் ஆக்கித் தந்த ஹேமமாலா சிண்டிகேட் அச்சகத்தாருக்கும் நன்றி.

பல்வேறு பணிகளுக்கிடையே நடைபெற்று வந்த இந்தத் தொகுப்புப் பணி இரண்டாண்டு காலமாக நீடித்தது. இந்த நீண்ட காலத்தில் தன்னலம் பாராது உறுதுணையாய் நின்றவர் துணைவி ஜோஸ்னா. அவர்களது ஒத்துழைப்பு பணியின் பளுவை வெகுவாய் குறைத்தது. என் நன்றி உரித்தாகுக.

தமிழகத்தின், தமிழரின், தமிழின் நலனில் அக்கறை கொண்ட யாவரும் இத்தொகுப்புகளை ஆவலுடனும் ஆர்வமுடனும் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை. இருபத்திபொன்றாம் நூற்றாண்டிலாவது, சாதிபேதமில்லா தமிழ்ச் சமுதாயத்தை - தமிழ் தேசத்தை - படைக்கத்துடிக்கும் தமிழ் இளைஞர்களுக்கு இத்தொகுப்புகள் அர்ப்பணம்.

புது தில்லி ஞான. அலாய்சியஸ்