பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

442 / அயோத்திதாசர் சிந்தனைகள்

ஜெனரலும் மற்றும் கவர்னர்களும் தேசத்தோர் செயல்களைக் கண்டே காரியாதிகளை நடத்துவார்களென்று நம்புகிறோம். ஐரோப்பியர்களுக்குள்ள ஒற்றுமெயும், ஐரோப்பியர்களுக்குள்ளத் திட்டமும், ஐரோப்பியர்களுக்குள்ள கருணையும், ஐரோப்பியர்களுக்குள்ள நீதிநெறியும், ஐரோப்பியர்களுக்குள்ள வித்தை புத்தி யீகை சன்மார்க்கமும் இந்திய தேச சாதிபேதமுள்ளோருக்கு உண்டாகுமாயின் அப்போதுதான் ஐரோப்பியருக்குள்ள சுதந்திரம் பொருந்துமேயன்றி மற்ற ஒருபோதும் பொருந்தாவாம். நமது கருணைமிகுத்த சக்கிரவர்த்தியார் இந்தியக் குடிகளை அன்பில் மிகுத்த விசாரிணைப் புரிந்தபோதிலும் இந்தியருக்குள்ள சாதிபேத வூழலும், சமய பேத பொறாமெயும், குறுக்குபூசு நெடுக்குபூசு முறுமுறுப்புக்கொண்டு ஒற்றுமெயற்ற வாழ்க்கையிலிருப்பது ஒன்றையும் அறியார். இவ்விவேகமற்ற சூழல்கள் யாவையும் வெள்ளெனவிளக்கி காங்கிரஸ் கமிட்டியாரையும் மகாஜன சபையோரையும் நோக்கி உங்களுக்குள்ள உள்ளூழல்களை முன்பு நீக்கி சீர்திருத்தி செவ்வைபடுத்திக்கொண்டு பின்னர் ஐரோப்பியர்களைப் போன்ற சுதந்திரங்களைக் கேட்கவைக்கும்படி செய்வதே பேருபகாரமும் நமது கருணைதங்கிய சக்கிரவர்த்தியாரின் ஆனந்த அரசாட்சியுமாகும்.

- 6:29; டிசம்பர் 25, 1912 -


281. நமது கவர்னர் ஜெனரலுக்கு நேர்ந்த அபாயமும் சென்னை சிவில் செர்விஸ் கமிஷனும்

கல்கத்தாவில் நேர்ந்துவந்த மனத்தாங்கல் யாவற்றையும் நமது சக்கிரவர்த்தியார் வந்து டெல்லியில் பட்டங் கட்டிக்கொண்டபோது கல்கத்தாவாசிகளுக்கு எதனால் மனத்தாங்கல் உண்டாயுள்ளதென்று ஆராய்ந்து தேசபிரிவினைகளை ஒன்றுபடுத்தி சகலருக்குள்ள மனத்தாங்கல்களையும் அகற்றி ஆனந்தவாழ்க்கையில் இருக்கச் செய்ததுமன்றி மற்றுமுள்ளக் குறைகளையும் அகற்றி சுகவாழ்க்கைப் பெறச்செய்வதற்கே சிலகாலங்களுக்குமுன் கல்கத்தாவிற்கு கவர்னர் ஜெனரலாய் இருந்தவருடைய பெளத்திரர் ஒருவரையே கவர்னர் ஜெனரலாக உறுதிப்படுத்தி காரியாதிகளை நடாத்திவரும்படி செய்துவிட்டுப்போய்விட்டார். இக்கவர்னர் ஜெனரல்லவர்களின் முழுநோக்கமும் செயலும் எவற்றை நாடியிருந்தாரென்னில் தேசக்குடிகள் யாவருங் கல்விகற்று அறிவுபெருக வேண்டுமென்பதேயாம். அஃதேதெனில் சகல மக்களுங் கல்விகற்று அறிவுபெருகி நிற்பார்களாயின் அவர்களுக்கு சுயராட்சிய பாரமளிக்கினும் சுகவாழ்க்கையே அடைவார்களென்பதேயாம். மற்றப்படி குடிகளுக்கு யாதோர் இடஞ்சலும் இக்கட்டும் நிகழ்ந்ததன்று. அவர்கள் நன்னோக்கங்களையும் செயல்களையும் கண்ணுற்றுவரும் அவரது பத்தினியாரும் அதே நன்னோக்கத்தைப் பின்பற்றி பல பெண்கள் கூட்டங்களுக்குஞ் சென்று பெண்களுக்கும் கல்வி விருத்தி செய்விக்க வேண்டுமென்னும் வேண நன்முயற்சிகளை செய்து வருகின்றார்கள். அத்தகைய நன்னோக்கமும் நன்முயற்சியுமுள்ள கவர்னர் ஜெனரலும் அவரது பத்தினியாரும் வீதியில் வருங்கால் வீணாம் ராஜ துரோகப் படுபாவிகள் வெடிகுண்டெரிந்து அவர்களைக் கொல்லும்படி எத்தனித்தார்கள். அவ்வெடிகுண்டு தவறி அருகில் பாதுகாப்பாளராகச் சென்ற ஓர் ஜமேதாரைக் கொன்றுவிட்டதுமன்றி கவர்னர் ஜெனரல் புஜத்தில் மட்டுங் காயப்படுத்திவிட்டதாம். அக்குண்டானது கவர்னர் ஜெனரலுக்கும் அவரது பத்தினியாருக்கும் மத்தியில் விழுந்திருக்குமாயின் இருவரும் இறந்தேபோயிருப்பார்கள்.

அவ்விருவரும் அத்தேசத்தோருக்குச் செய்துவந்த நல்வினைப்பயனே அவர்களுயிரைக் காத்ததென்பதற்கு அறிகுறியேயாம்.

அத்தகைய நற்குணமும் நற்செயலும் அமைந்த கவர்னர் ஜெனரலைக் கொல்ல உத்தேசித்த படும்பாவ ராஜதுரோகிகள் எத்தகைய வஞ்சினமும் பொறாமெயும் வைத்திருந்தார்களோ விளங்கவில்லை. இவ்விராஜ துரோகப்படும்பாவச்செயலும் எண்ணமும் ஏழை எளியோர்களுக்குத் தோன்றியிருக்க