அரசியல் / 455
களிலிருந்து இன்னுந் தேசத்தையும் தேசமக்களையும் சரிவர சீர்திருத்த வேண்டுமென்னும் சுதேச மக்கள் விசுவாசமும் இராஜ விசுவாசமும் உடைய ஒருவரையுங்காணோம். ஐயாயிரத்தில் ஒருவர் இங்கிலீஸ் பாஷையை நன்கு வாசிக்கக் கற்றுக்கொண்டும் பத்தாயிரத்தில் ஒருவர் அவ்விங்கிலீஷ் பாஷையை சபைகளிற் பேசப் பழகிக்கொண்டும் தேச சீர்திருத்தத்தையும் தேசமக்கள் சகலரது முன்னேற்றத்தையும் நம்மெயும் நமது தேசத்தையும் இவ்வளவு சீருக்கும் சிறப்புக்குக் கொண்டு வந்துள்ளவர்கள் ஐரோப்பியர்களாச்சுதே என்னும் நன்றியையும் மறந்து ஐரோப்பியர் அடையவேண்டிய அந்தஸ்தான உத்தியோகங்களைத் தாங்களடைய வேண்டுமென்று கோறினார்களன்றி நம்மெ இவ்வளவு சுகச்சீர்பெறச் செய்துவைத்த ஐரோப்பியர்களே இன்னும் சுகம் பெற்று இத்தேசத்தை ஆண்டுவரவேண்டுமென்று பேசினார்களில்லை.
தேசக்குடிகளின்மீது அன்பும், ஆண்டுவரும் அரசர்கள்மீது விசுவாசமுமில்லாதவர்களுக்கு அரசவதிகாரமாம் கலைக்ட்டர் உத்தியோகங்களை அளிப்பதாயின், உள்ள ஐரோப்பிய உத்தியோகஸ்தர்களையும் ஓட்டிவிட்டு ஊரையாளும் அதிகாரங்களைத் தேடிக்கொள்ளுவதுடன் உள்ளக் குடிகளையும் பாழ்படுத்திவிடுவார்கள். இவர்களுக்கு ஆதாரபீடமாக நின்றிலகும் நாஷனல் காங்கிரஸ் கமிட்டியாரேனும், மகாஜன சபையாரேனும் தென்னிந்தியாவில் நாளுக்குநாள் பெருகிக்கொண்டேவரும் பொய்யாகிய சாதிவூழல் சமயவூழல்களை அகற்றி சகல மக்களையும் ஒற்றுமெப்பெறச்செய்து தேச விருத்திக்கும் மக்கள் சீர்திருத்தத்திற்குமாய உள் சீர்திருத்தங்களையேனும் செய்து சீர்படுத்திவருகின்றார்களா அதுவுங்கிடையாது. தேசசீர்திருத்ததையும் மக்கள் ககத்தையும் பொதுப்படக் கருதாதவர்களும் ஓர் காருண்ய சீர்திருத்தக்காரர்களாவரோ. நாஷனல் காங்கிரஸ் கமிட்டியாரென்றும் மகாஜனசபையாரென்றும் கூச்சங்களிட்டுக் கூட்டமிடுவதும் தாழ்ந்தசாதியோருக்கு வேறு கிணறும் உயர்ந்த சாதியோனுக்கு வேறு கிணறும் வெட்டுவதும், தாழ்ந்த சாதியோருக்கு வேறு பள்ளிக்கூடங்களும், உயர்ந்த சாதியோர்களுக்கு வேறு பள்ளிக்கூடங்களுங் கட்டுவதுமாகிய இழிவினைச் செயலாம் பிரிவினைச் செயல்களை மற்றுங் கூட்டத்தோர் செய்துவருவதும் அநுபவக்காட்சியாகும். இத்தகையப் பிரிவினைச்செயல்களைக் கண்ணோக்கி அவைகளைத் தடுத்தாளாதவர்களுக்கு நாஷனல்காங்கிரஸ் கமிட்டியார் என்றும், மகாஜன சபையார் என்றும் அழைத்துக்கொள்ளும்படியான பெயர்கள் பொருந்துமோ ஒருக்காலும் பொருந்தாவாம். யாதுக்கென்னில் நாஷனல்காங்கிரஸ் கமிட்டியாரென்றும், மகாஜன சபையோரென்றும் பொதுப்பெயர்களை வைத்துக்கொண்டு மனிதவகுப்போரை மனிதவகுப்போராக பாவிக்காது சாதிக்கேற்ற சீரும் சமயத்திற்கேற்ற திருத்தமும் செய்துவருகின்றதினாலேயாம்.
இத்தகைய மித்திரபேத சீர்திருத்தக்காரர்களுக்கும் சாதித்தலைமெய் வேஷதாரிகளுக்கும் அரசாங்கத்துக்குரிய கலைக்ட்டர்கள் வேலைகள் பொருந்தவே பொருந்தாவாம்.
பர்மியருக்குரிய நீதிநெறியையும் அவர்களது ராஜவிசுவாசத்தையும் சற்றுநோக்கவேண்டியது அழகேயாம். அதாவது பர்மியர்களுக்குள் சாதிபேதமென்னும் சாதிநாற்றமுங்கிடையாது, சமய பேதமென்னும் படுமோசமுங் கிடையாது. அத்தகைய ஒற்றுமெயுற்றக் கூட்டத்தோர் மத்தியில் சிவில்செர்விஸ் கமிஷன் விசாரிணை நடக்கும்போது அவர்களுக்குள் ஆங்கிலம் நன்கு கற்றவர்களும் மிக்க தனகனவான்களும் என்ன மறுப்பு கூறியுள்ளார்களென்னில் தங்கள் தேசவாசிகளாகும் பர்மியர்களனைவரும் ஆங்கில பாஷையில் நன்கு தேர்ச்சியில்லாதபடியால் தற்கால கலைக்ட்டர் பரிட்சையை இங்கு வைக்கலாகாதென்றும் தற்காலந் தேசத்தைக் கைப்பற்றி ஆண்டுவரும் ஐரோப்பியர்களே அக்கலைக்ட்டர் உத்தியோகங்களுக்குத்