உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 467

குதிரைகளுக்குத் துன்பமுண்டாகாமலுங் கார்த்துரட்சிப்பதுபோல அச்சீவர்களுக்கு மேலாய மனுக்களுக்கு துக்கம் நேராமல் இம்மோட்டார் வண்டியை மனுக்கள் நெருங்கியுலாவும் வீதிகளில் வேகமாக விடப்படாதென்னுங் கண்டிதமான உத்திரவைப் பிறப்பிப்பதுடன் ஏதேனும் மக்களுக்கு பிராணாபத்து நேரிடுமாயின் பெருந்தொகையாம் அபராதத்தையும் விதிக்கத்தக்க வழிவகைகளை விதித்துவிடுவார்களாயின் வீதிகளில் வேகமாக ஓடும் மோட்டார்கார்களைக் கண்டு பயப்படுவோரும் துன்புறுவோரும் ஆறுதலடைவார்கள்.

- 6:49: மே 14, 1913 -


291. பூர்வீக சாதிபேதமற்ற திராவிடர்கள் எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

இந்தியதேசத்தில் பூர்வக் குடிகள் யாவரும் சாதிபேதம் என்னும் ஒற்றுமெக்கேடில்லாமல் வித்தையிலும், விவசாயத்திலும், ஈகையிலும், சன்மார்க்கத்திலும் சுகசீவிகளாக வாழ்ந்து வந்தார்கள். இத்தகைய வாழ்க்கையில் பெரும்பாலும் அவர்கள் அநுசரித்துவந்த நோன்பும் விரதமும் யாதெனில், சற்குருவின் சத்திய தன்மத்தையே சிரமேற்று, கொலையுங், களவும், பொய்யும், விபச்சாரமும், கள்ளும் அகற்றி பஞ்சசீலத்தை வியாபாரத்திலும் நிறுத்தி சோம்பலின்றி உழைத்து தங்கள் தங்கள் குடும்பங்களை ஆதரித்து வந்ததுடன் புத்தசங்கஞ் சேர்ந்து ஞானசாதனங்களிலும் வித்தியா போதகங்களிலும் விவேகவிருத்தி பெற்றுவரும் சமணமுநிவர்களுக்கும் உபகாரிகளாக விளங்கி அவர்கள் ஆசீர்பெற்று ஆனந்த வாழ்க்கையும் நீதிநெறியும் குருபக்தியும் இராஜவிசுவாசமும் ஒருவருக்கொருவர் அன்புடையவர்களாய் மற்ற தேசத்தோர் புகழத்தக்க விவேகவிருத்தியிற் காலங்கழித்து வந்தார்கள்.

அவர்களது நன்முயற்சியின் ஏதுவால் இந்திய தேசம் சீரும் சிறப்பும் பெற்றிருந்தது. அத்தகைய சீரும் சிறப்பும் பெற்றிருந்த தேசத்தில் வஞ்சினமே உருவாகக்கொண்டவர்களும் கருணை என்பதே கனவிலும் இல்லாதவர்களாகிய ஓர் கூட்டத்தோர் புத்தர் பிறந்து ஆயிரத்து எழுநூறு வருடங்களுக்கு பின் குமானிடதேசமென்னும் பதியிற் குடியேறி யாதொரு தொழிலுமின்றி பிச்சையிரந்துண்பதே பெருந்தொழிலாகக்கருதி சீவனஞ்செய்து வந்தார்கள். நாளுக்குநாள் தேசமக்கள் சிறப்பையும் அன்பின் ஒழுக்கங்களையும் ஈகையின் குணங்களையும் கண்டு வந்தவர்கள் காமியமுற்ற அரசர்களையுங் கல்வி அற்றப் பெருங் குடிகளையுந் தங்கள் வசப்படுத்திக்கொண்டு பௌத்தன்மை விவேகிகளால் தொழில்களுக்கென்று வகுத்திருந்தப் பெயர்களை சாதிப் பெயர்களாக மாற்றி வஞ்சத்தாலும் குடிகெடுப்பாலும் சீவித்துவந்ததுடன் மாமிஷ பட்சணி களாயிருந்தபடியால் இத்தேசத்தில் மாமிஷம் புசிக்கப் பயந்து யாகம் யாகமெனக் கல்வியற்றக் குடிகளிடம் மாடுகளையுந் குதிரைகளையும் தியாகமாக வாங்கி சுற்றிலுந் தட்டிகளால் மறைவிட்டு சுட்டுத் தின்றுவந்ததுமன்றி பொய்யுங், கொலையும், விபச்சாரமும், சுராபானமுமே அவர்களிடம் இருந்தபடியால் பொய்யையுங் கொலையையுங் களவையும் விபச்சாரத்தையும் மது அருந்துதலையும் அகற்றி வாழ்ந்திருந்த பௌத்த விவேகக் குடிகளுக்கு இவர்களது செய்கை சயிக்கமுடியாது, இப்படுபாவிகள் நமது வீதிகளில் வந்தாலுங் கிராமங்கள் நாசமடைந்துபோம் என்று வீதிகளில் வருவார்களாயின் அடித்துத் துரத்தி அவர்கள் வந்த வழியில் சாணத்தைக் கரைத்துத் துளிர்த்து அச்சாணச்சட்டியை அவர்கள் மீதே உடைத்து பஞ்சபாதகம் நிறைந்த யீனர் வந்தார்கள், மிலேச்சர் வந்தார்கள், ஆரியர் வந்தார்களெனக் கூச்சலிட்டு ஓட்டுவது வழக்கமாயிற்று. பௌத்தர்கள் இவ்வாறு செய்துவர ஆரியரென்னும் மிலேச்சர்களோ விவேகமிகுத்துள்ள அரசர்களை மித்திர பேதங்களாற் கொல்லுவதும் அதற்குத் தக்கப் பொய்க்கதைகளைப் போதிப்பதும் விவேகமற்ற அரசர்களையும், விவேகமற்ற கனவான்களையும், விவேகமற்றப்