அரசியல் / 469
அவர்களிடத்திலும் சென்று, அவர்கள் தாழ்ந்தசாதியார், இவர்களைத் தீண்டப்படாது, அருகில் சேர்க்கப்படாதென்று தமிழ் முநிஷிகளாகப் பாடங் கற்பிக்கும்போதே இவர்களைத் தாழ்த்திக் கெடுக்கத்தக்கப் பாடங்களையே முதலில் கற்பித்துவிட்டு மற்றபாடங் கற்பிப்பது வழக்கம். இத்தகைய இழிகுணத்தால் அவர்கள் போதிக்கும் வார்த்தைகளை நீதியும் நெறியுங் கருணையும் அமைந்த பிரிட்டிஷ் துரைத்தன துரைமக்கள். தங்கள் செவிகளில் ஏற்காது மனிதர்களை மனிதர்களாக பாவிக்கும் மேன்மக்கள் செயலினின்று சகலசாதியோரையும் சமரசமாகப் பாவித்து தங்களது ஆளுகையை நிறைவேற்றி வருகின்றார்கள். அத்தகைய கருணைநிறைந்த ஆளுகையில் நகரவாசங்களில் அவர்களது பொறாமெய்ச் செயல் சற்று தயங்கி நிற்பினும் நாட்டுப்புறங்களில் நல்லத்தண்ணீரை மொண்டு குடிக்கவிடாமலும், வண்ணார்களை வஸ்திரம் தோய்க்கவிடாமலும், அம்மட்டர்களை சவரஞ்செய்ய விடாமலும் அசுத்த நிலையே அடைந்திருக்கச் செய்துவிட்டு துரைமக்கள் அவ்விடஞ் சென்றவுடன் குளிக்கக் குளமின்றியும், சவரஞ் செய்ய வாளின்றியும், வஸ்திரங்தோய்க்க சுத்தசலமும் வண்ணானின்றியும், அசுத்தமுற்றுக் கோலுங் குடுவையுமாய் உள்ளவர்களை சுட்டிக்காட்டி, இவர்கள் தாழ்ந்தசாதியார், இவர்களுக்கு சுத்தங்கிடையாது. நாகரீகங் கிடையாது, அதினாலேயே இவர்களைப் பறம்பாக்கி வைத்திருக்கின்றோம் எனக்கூறி அவர்களாலுந் தாழ்த்தத்தக்க உபாயங்களையே செய்து வருகின்றார்கள். இத்தகைய சாதிபேதமுள்ளோர் மற்றயசாதிகள் எல்லவரையும் சமரசமாகச் சேர்த்துக்கொண்டு இவர்களை மட்டிலும் தலையெடுக்கவிடாமல் தாழ்த்தி வருங்காரணம் யாதென உசாவித் தங்கள் பூர்வ பீடத்தையும், பூர்வ தன்மத்தையும் பின்பற்றி புத்தசங்கங்களை தேசங்களெங்கும் நாட்டி பூர்வசரித்திரங்களையும் ஞானநீதிகளையும் வெளியிட்டு வருவதை அறிந்த வேஷசாதியார் இக்கூட்டத்தோரை அருகில் சேர்க்கவும் போதிக்கவுமான சில தந்திரங்களை செய்து வருகின்றார்கள், அவைகள் யாதெனில்:-
- 6:52; சூன் 4, 1913 -
நூதன சாதிவேஷமிட்டுள்ளக் கூட்டத்தோர் யாவரும் ஒன்றுகூடிக் கொண்டு சாதிபேதமில்லாமல் வாழ்ந்திருந்த பௌத்தகூட்டங்கள் யாவரையுந் தாழ்ந்த சாதியோரென வகுத்து அவர்களைத் தலையெடுக்கவிடாமற் கொல்லாமற்கொன்று அவர்கள் பீடியையே அறுத்துவிடவேண்டுமென்னும் பொறாமெயாற் செய்துவந்தக் கொடூரங்கள் யாவையும் இவற்றில் எழுத வேண்டுமாயின் விரியுமென்றஞ்சி விடுத்துள்ளோம்.
கருணையும் நீதிநெறியுமமைந்த பிரிட்டிஷ் துரைத்தனத்திலே சுத்தநீரை மொண்டு குடிக்கவிடாத பாவிகள் மற்றும் நீதி நெறியற்ற காலங்களில் இன்னும் ஏதேது துன்பங்களைச் செய்து வதைத்திருப்பார்கள் என்பது சொல்லாமலே விளங்கும். இத்தகையாக நூதன சாதிவேஷம் பூண்டுள்ள யாவரும் சாதிபேதமில்லாமல் வாழ்ந்திருந்தப் பூர்வக்குடிகளைத் தாழ்ந்த சாதிகளெனக்கூறித் தாங்கள் தாழ்த்தி தலையெடுக்கவிடாமற் செய்வதுடன், வந்து குடியேறும் அன்னிய தேசத்தோருக்குத் தாழ்ந்தசாதியோர் எனக் கூறி அவர்களாலும் இழிவு கூறச்செய்து மலமெடுக்குத் தோட்டிகளுக்கும் மலோபாதைக்குப் போனால் காலலம்பாது பூனையையும் பெருச்சாளியையும் பிடித்துத்தின்னும் குறவர் வில்லியருக்குங் கற்பித்து இவர்களைத் தாழ்ந்த சாதியோரெனக் கூறச் செய்துவரும் விரோதச்செய்கைகளையும் நாளுக்குநாள் கண்டறிய முயன்ற எமக்கு புத்ததர்மமே இவ்வதன்மச்செயலுக்கு ஆதாரம் என்றறிந்து சாக்கைய புத்தசங்கத்தையே நாட்டி அதனந்தரார்த்தங்கள் யாவையும் விளக்கி விட்டதின்பேரில் இச்சாதி சம்மந்தத்தில் விசாரங்கொண்டிருந்த விவேகபுருஷர்கள் யாவரும் இதுவே நமது பூர்வசரித்திரமென்று ஆனந்தித்து, அங்கங்கு சாக்கைய புத்த சங்கங்களை ஸ்தாபித்து, உள்சீர்திருத்தங்களையும் புற சீர்திருத்தங்களையுஞ் செய்து, கூட்டத்தோரை குருவிசுவாசத்திலும் இராஜவிசுவாசத்திலும் நிலைபெறச்