480 / அயோத்திதாசர் சிந்தனைகள்
இத்தகையாய மேனாடுகள் மதகர்வத்தினால் நாளுக்கு நாள் சீரழியுமாயின் சாதிகர்வம் மதகர்வம் இவ்விரண்டும் பெருகியுள்ள இந்தியதேசமக்கள் எவ்வகையால் சீர்பெருவார்கள். இந்திய தேசம் எவ்வகையால் சிறப்படையும். இந்தியதேசப் பூர்வக்குடிகளை மதகர்வத்தினால் வழியில் நாட்டி வதைத்த வன்னெஞ்சர்களும் கழுவிலேற்றி வதைத்தக்கொடுபாவிகளும், கற்காணங்களில் வதைத்த துற்சாதனர்களே இத்தேசத்திற் பெருகி சாதி கர்வத்தையும் பெருக்கிக்கொண்டு ஆறுகோடி மக்களை அதனால் அழக்களித்து பல வகையாலும் அவர்களைத் துன்பப்படுத்தி தலையெடுக்க விடாத வழிவகைகள் ஏதேதோ அவைகள் யாவற்றையுஞ் செய்துகொண்டே வருகின்றார்கள்.
இத்தகைய சீவகாருண்யமற்ற மதகர்வமும், நீதிநெறியற்ற சாதிகர்வமும் பெருகுவதினாலுண்டாம் துன்பங்களையும் இடுக்கங்களையும் சகித்துக் கொண்டுள்ள ஆறு கோடி மக்களுள் விவேகமிகுத்தோர் யாவரும் அவிவேகிகளால் நடாத்தி வருஞ் சாதி வேஷத் தீங்குகளையும் சமயவேஷத் தீங்குகளையும் பொறுத்துக்கொண்டே தங்கள் சுகக்கேட்டை அநுபவித்து வருகின்றார்கள்.
நீதியும் நெறியுங் கருணையும் அமைத்த பிரிட்டிஷ் அரசாட்சியின் நோக்கமோ சருவ மக்களையும் தன்னவர் அன்னியரென்னும் பட்சபாதமற்ற நோக்குற்று காரியாதிகளை நடாத்திவருகின்றார்கள். இந்திய தேயத்தில் அவர்கள் ஆளுகைக்கு உட்பட்டக் குடிகளோ சாதிபோக்கு, சமயபோக்குகளையே நீதிபோக்கு நெறியின் போக்கென்றெண்ணித் தங்கடங்கள் அதர்மச் செயல்களையே மீண்டும் மீண்டும் அதிகரிக்கச் செய்துவருகின்றார்கள். இப்பொய்யாய சாதிவேஷத்தால் பெருங்குடிகளைத் தாழ்த்தி நசித்துவரும் தீவினையின் பிரதிபலன் ஏதேது செய்யுமோ என்பது இன்னுஞ் சில நாளில் விளங்கும்போலும். ஆட்டுக்கடாக்கள் பிந்துவதும் புலிகள் பதுங்குவதும் தங்கள் பாச்சலுக்கென்பதுபோல ஆறுகோடி மக்களும் சாதிவேஷக்காரர்கள் செய்யும் இடுக்கங்களுக்குங் கஷ்டங்களுக்கும் பின்னடங்கி நிற்பது பெரும்பாய்சசலுக்கென்றே தெரிந்து கொள்ளல் வேண்டும். அவ்வகை தெரிந்தோர் ஆறுகோடி மக்களையும் அன்பார்ந்த சோதரர் என்று எண்ணி தங்களைப் போலவர்களையும் சுகச்செயல் பெற்று நல்வாழ்க்கையில் நிலைக்கச் செய்தல் வேண்டும். அங்ஙனமின்றி தங்கள் சாதிகர்மமே கர்வம் மதகர்வமே கர்வமென மதோன்மத்தால் இருமாப்புற்று இத்தேசப்பூர்வக்குடிகளாம் ஆறுகோடி மக்களை இன்னுந் தாழ்த்தி இடுக்குறச் செய்வரேல் அதற்குப் பிரதிபலனாகட்ட பின்னும் முடிவது ஒற்றுமெக்கே பெருங்கேடாகும் போலும். ஆதலின் விவேகமிகுத்தோர் இராஜாங்கநோக்கையுங் குடிகளின் போக்கையுமறிந்து சீர்திருத்துவார்களென்று நம்புகிறோம்.
- 7:17; ஆகஸ்டு 20, 1913 -
298. முனிசபில் கமிஷனர்கள் நியமனம்
இம்முனிசபில் கூட்டம் என்பதும் பிரிட்டிஷ் ராஜாங்கத்திற்கு உட்பட்டதேயன்றி வேறன்றாம். எவ்வகையாலென்பரேல், இராஜாங்கத்தோரே முனைந்து தங்கள் குடிகளுக்கு சுகாதாரமளிக்க வேண்டுமென்னுங் கருணையால் பிரிட்டிஷ் இராஜாங்க அதிகாரஸ்தர் ஒருவரை முதன்மெயாக நியமித்து அந்தந்த டிவிஷனிலுள்ளப் பெரியோர்களையே கூட்டத்தோராக ஏற்படுத்திக் கொள்ளும்படி செய்து குடிகளது தொகைகளைக்கொண்டே அவர்களுக்கு வேண்டிய வீதிவசதிகளையும், தீபவசதிகளையும், நீர்வசதிகளையும், கள்ளர் பயமில்லாமலும், துஷ்டர் பயமில்லாமலும், வாழும் படியான போலீஸ்காவல் வசதிகளையும், வியாதிகள் அணுகா சுகாதார வசதிகளையும், வியாதிகளுக்கு உட்பட்டோரை காத்து ரட்சிக்கும் வைத்திய சாலை, வசதிகளையும் அவ்வைத்தியசாலை வசதிகளிலும் புருஷர்களுக்கு வேறு இஸ்திரிகளுக்கு வேறு வசதிகளை வகுத்து தங்களைப்போல் குடிகளும்