301. கலைக்டர்களே ஜர்ஜ்ஜிகளாக வருவதால் நீதி கிடைக்குமா லாயர்களே ஜர்ஜ்ஜிகளே வருவதால் நீதி கிடைக்குமா
இத்தேசத்துள் பல சாதிகளும் பல பாஷைகளும் பல மதங்களுமமைந்த மக்களே மிக்கப் பெருகியுள்ளபடியால் அவர்களது நியாய அநியாயங்களைக் கண்டு நீதியளிப்பதற்குக் கலைக்டர்களே ஜர்ஜ்ஜிகளாக நியமனம் பெறுவார்களாயின் சகல குடிகளுக்கும் சரியான நீதி கிடைக்கும் என்பது திண்ணம்.
எவ்வகையில் என்பரேல் ஓர் சப்கலைக்டராக டிஸ்டிரிக்ட்டுக்கு வருவார்களாயின் அன்றுமுதல் அவ்விடத்தில் வாசஞ்செய்யும் மனுக்களின் குணாகுணங்களையும், அவரவர்கள் சாதிசம்மந்த பேதங்களையும், மதசம்பந்த மாறுபாடுகளையும், சமய ஆசார கேடுபாடுகளையும் நன்காராய்ந்து தங்கள் காரியாதிகளை நடத்திவருவதுடன் தாங்கள் நிறைந்த கலைக்டராயப் பின்னும் நீர்வசதி விசாரணை, நிலவசதி விசாரணை முதலியவைகளுடன் தங்களுக்குள்ள சிறந்த மாஜிஸ்டிரேட் விசாரணையால் அடி தடி சண்டை சம்பந்தங்களையும் கொலை முதலிய கொறூற சம்பந்தங்களையும் விபச்சார முதலிய துற்கிருத்திய சம்பந்தங்களையும் நேரிற் போய்க் கண்டறிந்தும் விசாரிணையால் ஆய்ந்து தெளிந்தும் அந்தந்த வியாஜியங்களுக்குத் தக்க நீதிளித்து வரும் படியானச் செயல்களே அவர்களுக்கு நீடிய சாதனமும் போதிய அநுபலமுமாயிருக்கின்றது. அதனால் அவர்கள் தங்கள் கலைக்டர் அலுவலை ஒழித்துவிட்டு ஜர்ஜ் அலுவலில் வந்து உழ்க்காருவார்களாயின் தங்களுக்குள்ள முற்சாதனங்களின் பழக்கத்தால் எழுதுவதற்குச் சோம்பலின்றியும் வியாஜியங்களை விசாரிப்பதில் தளர்வின்றியும் நியாய ஊக்க தயிரியத்திற் குறைவின்றியும் அந்தந்த வியாஜியங்களை உடனுக்குடன் விசாரித்துக் காலதாமதமின்றி நீதியளித்து கோர்ட்டின் செலவுக்களை அதிகரிக்கவிடாது நியாயகாரியாதிகளை நடாத்தி வருவார்கள்.
கலைக்டர் அலுவலில் தொன்று தொட்டு வழங்கிவந்த அநுபவத்தாலுங் கண்டு தெளிந்துவந்த காட்சியாலும் அந்தந்த சாதிப்பார்க்குரியச் செயல்களையும் அந்த மதத்தார்க்குரியச் செயல்களையும் அந்தந்த பாஷைக்குரியச் செயல்களையுங்கண்டு உடனுக்குடன் நீதியளிக்கும் விஷயங்களைக் காணும் வாதிப்பிரிதிவாதிகளும் தங்களுக்குக்கிடைத்தத் தீர்ப்பு நியாயமே என்று ஒப்புக்கொண்டேகுவார்கள்.
அதனினும் இத்தேசத்தில் சோம்பலாலையே தேகத்தை வளர்ப்போரும், பொய்யாலையே தேகத்தை வளர்ப்போரும், பொருளாசையாலேயே தேகத்தை வளர்ப்போருமே மிகுதியாயுள்ளபடியால் அவரவர் குணாகுண வியவகாரச் செயல்களைக் கண்டும் பழகியும் வருவோர் கலைக்டர்களேயாகும். ஆதலால் ஜார்ஜ்ஜிகள் அலுவல்களுக்குக் கலைக்டர்களே முக்கியமானவர்களும் அநுபவம் பொருந்தியவர்களுமாவர். கலைக்டர்களே ஜர்ஜ்ஜிகளாக வருவார்களாயின் குடிகளுக்குத் தகுந்த நியாயங்கிடைப்பதுடன் பிரிட்டிஷ் ஆட்சிக்குஞ் சிறந்த பெயருண்டாம்.
இங்ஙனமின்றி ஜர்ஜ்ஜிகள் நியமனத்திற்குக் கலைக்டர்களை நியமிக்காது லாயர்களை நியமிப்பதாயின் அவர்களுக்கு டிஸ்டிரிக்ட்டுகளே முக்கியமாகத் தெரியாது. அவற்றிற்குப் பலமாக சாதிசம்பந்தங்களும், மதசம்பந்தங்களும், பாஷைசம்பந்தங்களும் அதனதன் குணாச்செயல்களும் ஈதென்று அநுபவத்திலும் காட்சியிலும் கண்டறியாதவர்கள். அவர்களுக்கு அநுபவமுங் காட்சியும் யாதெனில் கிரிமினல் பிரசீஜர் புத்தகங்களையும் சிவில் பிரசீஜர் புத்தங்களையும் வாரிப்போர்ட்டுகளையுங் கண்ணினாற் காண்பதே காட்சியும் அவைகளுள் வேண்டியவற்றை உருபோடுவதே அநுபவமுமாகும். மற்றுமோர் அநுபவமோ வென்னில் வாதி கட்சியிலோ பிரிதிவாதியின் கட்சியிலோ நிலைத்து வாதிடுவதாகும். இத்தகையாய ஒருகட்சியின் வாத அநுபவமே