உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

486/ அயோத்திதாசர் சிந்தனைகள்

ஜர்ஜ்ஜிகளின் நியாய நிலையில் இருகட்சிகளின் நியாய அந்நியாயங்களைக் கண்டறிவதற்கே கஷ்டமாகிப்போம்.

ஈதன்றி லாயர்களாக ஒருகட்சியினின்றே பேசுங்கால் அவைகளை எழுதிக் கொள்ளுவதற்கு ஒரு ரையிட்டரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசித் துலைவது லாயர் கடனும் எழுதித் துலைவது ரைட்டர் கடனுமாயிருத்தலால், லாயர்களுக்குக் கிஞ்சித்து சோம்பலநுபவமும் உண்டாம். இத்தகைய அநுபவத்தோர் ஜர்ஜ்ஜியின் நியமனம் பெறுவார்களாயின் நியாய அந்நியாயம் மனதிற்தோன்றினும் எழுதுகோல் அசையுஞ் சுறுசுறுப்பற்று தீர்ப்பளிப்பதற்குங் காலதாமதமுற்று வியாஜியங்களுங் கிடையில் கிடப்பதற்கு ஏதுவாகி ஒவ்வோர் வியாஜிபாயங்கள் ஒருவருடம் இரண்டு வருடந் தீர்ப்பளிக்காமலிருப்பதும் வேறு உதவி ஜர்ஜ்ஜிகளை நியமிப்பதுமாகிய காரியாதிகள் அதிகரித்துப்போம்.

லாயர்களாயுள்ளோர் புத்தகங்களை வாசிப்பதும் பேசுவதுமே காட்சியும், ஒரு கட்சியார் சார்பினின்று வாதிடுவதே பேரனுபவமாதலின் நடுநிலையாயத் தீர்ப்பளிக்கும் ஜர்ஜ்ஜிய நியமனம் அவர்களுக்குப் பொருந்தவே பொருந்தாவாம் சட்டதிட்டங்களை நன்று வாசித்தும் லாரிப்போர்ட்டுகளை வாசித்தும் ஜர்ஜ்ஜிகளுக்குத் தங்கள் கட்சியோர் நியாய அந்நியாயங்களைத் தேரவெடுத்துக் காட்டக்கூடிய வல்லவர்களாயிருப்பினும் ஒருதலை நியாய சாதனமாதலால் எடுத்த சாதனத்தையும் பொய்யேயாயினும் முடிக்கும் சாமர்த்தியமேயன்றி இருகட்சிக்கும் பொருந்தும் நியாயம் கலைக்கட்டர்களைப் போல் அநுபவத்திற்குங் காட்சிக்கும் பொருந்திய நடுநிலை நியாயம் ஏற்படாவாம். ஆதலின் கருணை தங்கிய ராஜாங்கத்தார் குடிகளின் சுகத்தை நாடி காரியாதிகளை நடாத்துவதே நலமாம். லாயர்கள் பெருத்துவிட்டார்கள், அவர்களுக்கு ஜர்ஜ் உத்தியோகங் கொடுக்கவேண்டுமென்று யோசிப்பது குடிகளுக்கு சுகம் இன்மெயேயாம், சுகம் இன்மெயேயாம்.

- 7:15; செப்டம்பர் 17, 1913 -


302. கலைக்டர்களுக்கு மாஜிஸ்டிரேட் அதிகாரம் வேண்டாமோ

வேண்டும், வேண்டும், அஃதிருந்தே தீரவேண்டும். காரணமோவென்னில் இந்திய தேசச் சக்கிரவர்த்தியாயிருந்து செங்கோல் நடாத்திவருவோர் ஐரோப்பியதுரை மன்னரேயாகும். அவ்வதிகாரத்தைக் கொண்டு இந்தியாவில் வந்து கலைக்டர் அலுவலை நடத்துவோர் சக்கிரவர்த்தியின் அம்சங்களேயாவர். அதுகொண்டே அவர்கள் நடாத்தும் செயல்கள் யாவற்றின் முகப்பிலும் (இஸ்மாஜஸ்படிசர்விஸ்) என்னுங் குறிப்பிட்டே நடத்திவருகின்றார்கள்.

அத்தகைய அதிகாரத்தை கலைக்டர்களுக்கு இல்லாமல் எடுத்து விடுவதாயின் சக்கிரவர்த்தியின் அதிகாரம் இந்தியாவில் இல்லையென்பதற்கே ஒப்பாகும். அரசர்களுக்கு தெண்டிக்கும் அதிகாரமில்லாமற்போமாயின் வஞ்சக துஷ்டர்களுக்குக் கொண்டாட்டமும், ஆளுகை திண்டாட்டமாகவே முடியும். இஃதேது காரணத்தைக் கொண்டு இத்தேசத்திலுள்ள சிலர் கலைக்டர்களுக்குள்ள மாஜிஸ்டிரேட் அதிகாரத்தை எடுத்துவிட வேண்டுமென்னும் முயற்சியிலிருக்கின்றார்களோவென்பது விளங்கவில்லை. சில காலங்களுக்குமுன் (டிஸ்டிரிக்ட் மாஜிஸ்டிரேட்டா) இருந்தவர்கள் யாவரும் மிலிட்டேரி உத்தியோகக்கர்னல்களும் மேஜர்களுமாகவே இருந்து தங்கள் தங்கள் அதிகாரங்களை செலுத்தி வந்தார்கள் அதனால் அவர்களுடைய நீதியானது தன்னவர் அன்னியரென்னும் பட்சபாதமின்றியும் தயவு தாட்சண்யமின்றியும் மதசம்பந்தக்கோட்பாடுகளின்றியும் நடுநிலையில் நிறைவேற்றி வந்தபடியால் துஷ்டர்கள் கூட்டம் அடங்கியும் வஞ்சகர்கள் கூட்டம் ஒடிங்கியும் மற்றய தேசக்குடிகள் சுகவாழ்க்கையிலிருந்தார்கள். தற்காலமோ அவ்வகை மிலிட்டேரி உத்தியோகஸ்தர்களை நியமிக்காது இத்தேசக் குடிகளில் ஒவ்வொருவரை நியமிக்க ஆரம்பித்தது முதல் தன்மக்கள் தாட்சண்யம், இலாயர்கள் தாட்சண்யம், சாதி தாட்சண்யம், மத தாட்சண்யங்களால் துஷ்டர்கள் ஒடுங்காமலும், வஞ்சகர்கள் அடங்காமலும் பெருகி, கிராமங்கிராமங்களுக்கு மாஜிஸ்டிரேட்டு