அரசியல் / 487
கள் வைக்கவேண்டிய கஷ்டம் மிகுதியாவதோடு நேராயக்குடிகளுக்குங் கஷ்டங்களுண்டாவதாக விளங்குகின்றது.
இவற்றிற்குப் பலமாக கலைக்டர்களுக்குள்ள மாஜிஸ்டிரேட் அதிகாரங்களையும் எடுத்துவிடுவதாயின் சகல குடிகளும் பல வகையாயக் துன்பங்களால் அல்லடைவார்களென்பதற்கு சொல்லத்தரமன்று. சில காலங்களுக்குமுன் தாசில்தாரர்களுக்கு மாஜிஸ்டிரேட் அதிகாரங் கொடுத்திருந்ததினால் கிராமக்குடிகள் யாவரும் பலவகையானத் துன்பங்களை அநுபவித்து சீர்கேடுற்று வந்தார்கள் என்பது சகலமக்களுமறிந்த விஷயமாக்கும். அவ்வகையானக் கேடுபாடுகளைக் கண்ணாறக்கண்டும் செவியாறக்கேட்டும் வந்த இச்சீர்திருத்தக்காரர்கள் தங்கள் கூட்டங்களைக் கூட்டி தாசில்தாரர்களுக்குள்ள மாஜிஸ்டிரேட் அதிகாரத்தை எடுத்து விடவேண்டுமென்று ஏதேனுமோர் வார்த்தைப் பேசியிருப்பார்களா. நீதியுங் கருணையும் நிறைந்த இராஜாங்கத்தோருக்கேனும் விளக்கியிருப்பார்களா. யாதுங்கிடையாவே. குடிகள் யாவரும் எத்தகையானத் துன்பங்களை அநுபவித்தாலும் அநுபவிக்கட்டும், தாசில்தாரர்களாயிருப்பவருள் பெரும்பாலோர் நம்மவர்கள் தானே அவர்கள் மட்டிலும் சுகமுறவாழ்ந்தால் போது மென்னுந் திருப்தியடைந்திருந்தார்கள் போலும். கிராமவாசிகளாகியக் குடிகளுக்கு மாஜிஸ்டிரேட் அதிகாரம் பெற்றுள்ள தாசில்தார்கள் இதுகாரும் அவ்வதிகாரத்திலிருந்திருப்பார்களாயின் கிராமக்குடிகள் யாவரும் அல்லோகல்லமுற்று சிதறி பல தேசங்களுக்கு ஓடிப்போவதுடன் உள்ளக் குடிகளது பெண்களின் கழுத்துகளில் கட்டித் தொங்கும் பொன்னினால் செய்துள்ள தாலிகள் யாவுமற்று மரத்தாலிகளைக் கட்டிக்கொண்டிருப்பார்கள். பிரிட்டிஷ் ராட்சிய பாரம் நீதியையும் கருணையையும் ஆதாரமாகக் கொண்டுளதால் கிராமக்குடிகள் படும் கஷ்டங்கள் அவர்களுக்கே தோன்றி தாசில்தாரர்களுக்குள்ள மாஜிஸ்டிரேட் அதிகாரங்களை அடியோடு எடுத்துவிட்டார்கள். அது கால முதல் கிராமக்குடிகள் சற்று சுகத்திலிருக்கின்றார்கள். இஃது சகலருக்கும் அநுபவமாகும். இக்கூட்டத்தோர் கூச்சலை ஆழ்ந்தாலோசிக்குங்கால் இத்தேசத்தோருக்கே கலைக்டர் உத்தியோகங் கொடுக்கலாமென்னும் உத்திரவு கொடுத்து விடுவார்களாயின், மாஜிஸ்டிரேட் அதிகாரமும் இருக்கவேண்டுமென்பார்கள். ஐரோப்பியர்களே இருக்கின்றபடியால் புலிக்குள்ள பல்லையும் நகங்களையும் பிடிங்கிவிடுவதுபோல கலைக்டர்களுக்குள்ள மாஜிஸ்டிரேட் அதிகாரத்தை எடுத்துவிடப் பார்க்கின்றார்கள். இவைகள் யாவையுங் கருணைதங்கிய ராஜாங்கத்தோர் தேற ஆலோசித்து சகல குடிகளும் முன்னேறி சகல சுகமும் அநுபவிக்கும் படியான வழிகளைக் திறந்து தங்களதிகாரமும் ஆளுகையுமே இத்தேசத்தில் நிலைபெறும் வழிவகைகளை செய்விப்பார்கள் என்று நம்புகிறோம்.
- 7:16; செப்டம்பர் 24, 1913 -
303. இத்தேசத்தில் ஐரோப்பியர்களே கலைக்டர்களாயிருப்பது உத்தமமா? இத்தேசத்தோரே கலைக்டர்களாயிருப்பது உத்தமமா?
இத்தகையாய விசாரிணைகளை நமது பத்திரிகையில் உசாவி, விளக்கிவருங் காரியாதிகளைக் கண்ணுற்றுவரும் சிலர் தமிழன் பத்திரிக்கை இத்தேசத்தோருக்கு விரோதமாகவும் இராஜாங்கத்தோருக்கு சார்பாகவும் பேசுவதாக முறுமுறுக்கின்றார்களாம். அத்தகையோர் சுயநலப் புலிகளாய் இருப்பாரன்றி, பொதுநலப் பசுக்களாயிரார்கள் என்பதே திண்ணம்.
அதாவது யாம் எழுதிவரும் சங்கதிகள் யாவும் தேசக்குடிகளில் நூற்றிற்குத் தொண்ணூற்றியைந்து பேருக்கு சுகமும் ஐந்துபேருக்கு அருவெறுப்பாய அசுகமுமாக விளங்கும். அதனால் எமக்கோர் பங்கம் இன்மெயேயாம் “யதார்த்தவாதி வெகுஜனவிரோதி” என்னும் பழமொழிக் கிணங்க நியாயங்களை விளக்கில் அந்நியாயமுள்ளோர் தூற்றுவதும் நியாயமுள்ளோர் போற்றுவதும் இயல்பாம் ஆதலில் நாம் நியாயத்தையே கருதி சகல குடிகளின் சுகத்தை