உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 489

வந்துவிட்டது என்றால் கதவையுந் திறந்து வெளிவருவார்களோ, இல்லை. வெள்ளப்பெருக்கால் குடிகள் யாவரும் வீடுவாசலற்று புசிப்பின்றி கலைக்டர் வீட்டை நாடி வந்துவிடுவார்களாயின் அவர்கள் ஆயாசத்தையும் பசியையும் அறிந்து அவர்களுக்கு உதவி புரிவார்களோ, அது ஜெநநத்திலேயே கிடையாது. வந்தவர்களை தன் வீட்டண்டை வெள்ளப் பெருக்கெடுக்காது மண்ணையுங் கல்லையும் வாரி கொட்டுங்கோளென்னும் வேலை வாங்கிக் கொள்ளுவார்கள். வித்தைகளிலோ தாங்கள் கற்றுள்ள குறுக்குபூச்சு வித்தை, நெடுக்குப்பூச்சு வித்தை, கொட்டை கட்டும் வித்தை, பட்டைட்பூசும் வித்தை, அரிமந்திர வித்தை, ஆச்சாரவித்தைகளையே மேலும் மேலும் பெருக்கி நிற்பார்களன்றி தேச சீர்திருத்தத்திற்கும் மக்கள் சுகசீவன விருத்திக்காய வித்தைகளையவர்களறிவே அறியார்கள். நெருப்புப் பற்றிக்கொண்டு வீடுகள் யாவுமெரிந்துக் கொண்டு வருகின்றதென்னில் தங்கள் வீட்டண்டை நெருப்பு வராமற் பார்த்துக் கொள்ளுவார்களன்றி எரியும் வீட்டண்டை சென்று அவைகளை அவித்து குடிகளைக் காக்க முயலுமாட்டார்கள். வெள்ளப் பெருக்கால் விவசாய மக்களை அடித்துப் போகிறதென்றால், அவனென்ன சாதி, இவனென்ன சாதியெனக் கருணையற்று நிற்பார்களன்றி, பரிதவித்து அவர்களை எடுக்கும் முயற்சி செய்யமாட்டார்கள். அதன் அநுபவம் யாதென்னிலோ, விவசாயக் குடிகளை தாழ்ந்த சாதிகளென விடுத்து நல்லத் தண்ணீரை மொண்டு குடிக்க விடடாமலும், வண்ணாரை வஸ்திரமெடுக்க விடாமலும், அம்மட்டர்களை சவரஞ் செய்ய விடாமலும் கொல்லாமற் கொன்று வருகின்றவர்களாதலால் விவசாயிகள் வீடுகளையும் மக்களையும் வெள்ளமடித்துப் போகிறதை கண்ணினாற் காணினும் போகட்டும், போகட்டும் என்றிருப்பார்களன்றி அவர்களை எடுக்க முயலவே மாட்டார்கள். மற்றும் இவர்களது கேடுபாடுகளையும் கருணையற்ற செயல்களையுமுற்றும் வரைவோமாயின் வீணே விரியுமென்றஞ்சி இத்தேசத்தோருக்குக் கலைக்டர் உத்தியோகங் கொடுக்கவுமாகாது, அவர்களுக்கஃது பொருந்தவும் பொருந்தாதென்று துணிந்து கூறினோம். ஏன் கொடுக்கலாகாது ஏனவை பொருந்தாதென்று வித்தேசத்தோர் யாவராயினும் முநிந்து கேட்க வருவாராயின் முற்றும் உரைக்கக் காத்துள்ளோமாக.

- 7:17: அக்டோபர் 1, 1913 -


304. வித்தை புத்தி ஈகை சன்மார்க்கம் நிறைந்த மேலாய பிரிட்டிஷ் ராஜாங்கம் தோன்றியும் நமது தேசத்தோர் கற்றுக் கொண்ட மேலாய வித்தையைப் பார்த்தீர்களா

பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் இத்தேசத்தை ஆளுகைசெய்ய முயன்றது முதல் இத்தேசங் கெட்டழிவதற்கேயிருந்த சாதிபேதக் கேடுபாடுகளையும், மதபேதக் கேடுபாடுகளையும், நீர்வசதிக் கேடுபாடுகளையும், நிலவசதிக் கேடுபாடுகளையும், கல்வியழிவுற்றுவந்த கேடுபாடுகளையும், வீதிவசதிகளற்றிருந்த கேடுபாடுகளையும், நன்குணர்ந்து அவர்களுக்குள்ள வித்தையின் மிகுதியாலும், புத்தியின் மிகுதியாலும், ஈகையின் மிகுதியாலும், சன்மார்க்க மிகுதியாலும் தேசத்தையுந் தேசமக்களையுஞ் சீர்த்திருத்தி சகலசாதியோரும் நாகரீகத்தில் முன்னேறும்படியானக் கல்வி இலாக்காக்களையும், இரயில்வே பாதைகளையும், கடிதப்போக்குவருத்துகளையும் டெல்லகிராப்புகளையும் உண்டுசெய்துவரும் சுகாதார வித்தைகளில் இரயில்வேவித்தை எளிதானதன்று, இஸ்டீமர்வித்தை எளிதான தன்று, டெல்லகிராப் வித்தை எளிதானதன்று. போட்டகிராப் வித்தை எளிதான தன்று. லெத்தகிராப்வித்தை எளிதான தன்று, போன கிராப்வித்தை எளிதான தன்று. தற்காலம் அவர்களால் குடிகளுக்குக் கற்பித்து வரும் விவசாய வித்தைகள் எளிதான தன்று. நெசிவு வித்தைகள் எளிதான தன்று. மற்றும் அனந்தவித்தைகளை விருத்தி செய்து இத்தேசமக்களுக்குக் கற்பித்து அவர்களை சுகசீவனஞ் செய்யும் வாழ்க்கையில், விடுத்திருக்கின்றார்கள். இத்தியாதி மேலாயவித்தைகளில் இத்தேசத்தோர்