அரசியல் / 497
தன்மத்தையே சிரமேற்கொண்டு சாதித்து வந்தவர்களாதலால் இந்திய தேச சீர்திருத்தப்பற்று பூர்வக் குடிகளாம் இந்தியர்களுக்கே உரியதாம் என்பது கருத்து.
இந்துக்களென்போர்களோ நூதனமாக இத்தேசத்திற் குடியேறி நூதன சாதிகளையும் நூதன மதங்களையும் நூதன சாமிகளையும் அதற்கு ஆதாரமாய நூதன சாஸ்திரங்களையும் ஏற்படுத்திக்கொண்டு அவைகள் சோர்வுறா நோக்கமும் அவைகள் சோர்வுறா பற்றும் விடாமுயற்சியும் உள்ளவர்களாதலால் பொதுவாய தேச சீர்திருத்தப்பற்றும் தேச மக்கள் சுகமடைய வேண்டிய பற்றும் அவர்கள் கனவினுங் கிடையாவாம். மதப்பற்று சாதிபற்று சாமி பற்றோடுங் கூடவே மற்றும் இருபற்றுக்களில் நிலைத்திருத்திருக்கின்றார்கள். அவைகள் யாதென்னிலோ இரவும் பகலும் ஆங்கிலப்படிப்பிலுருபோட்டு ஆங்கிலங்கற்று இராஜாங்க உத்தியோகத்தில் அமர்ந்துக் கொள்ள வேண்டுமென்பது ஒரு பற்று. அவ்வுத்தியோகத்திலிருந்து கொண்டே ராஜாங்கத்தையே தங்களுடையதாக்கிக்கொள்ள வேண்டுமென்பது ஒரு பற்று. ஆக இரு பற்றுக்களே அவர்கள் இதயத்திற் குடிகொண்டிருக்கின்றதேயன்றி தேச சீர்திருத்தப் பற்றும் தேச மக்கள் சுகமடையும் பற்றுங் கிடையவே கிடையாது என்பது துணிபு.
ஆதலின் நீதியும் நெறியும் கருணையும் அமைந்த பிரிட்டிஷ் ஆட்சியார் தேச சீர்திருத்தக்காரர்களை அறிந்து அவர்களை சீர்திருத்தி முன்னேற்றும்படி வேண்டுகிறோம்.
- 7:23: நவம்பர் 12, 1913 -
309. சௌத் ஆப்பிரிக்கா சாக்கைய புத்த சங்கத்தோருக்கு அறிக்கை
சாக்கைய புத்த சோதிரர்களே சற்று கவனியுங்கள் தாங்கள் அனுப்பியுள்ளப் பத்திரிகைகளாலும் இவ்விடம் நடைபெறும் பத்திரிகைகளாலும் செளத் ஆபிரிக்காவில் அத்தேச வாசிகளுக்கும் இந்தியாவிலிருந்து குடியேறி உள்ளவர்களுக்கும் நடந்தேறிவரும் வாக்கு வாதங்களையும் கஷ்டங்களையும் அறிந்தே வருகின்றோம். ஆயினும் நீங்களும் அவ்விடங் குடியேறி பௌத்தர்களாகிவிட்டபடியால் உங்களுக்கு எக்காலும் ஜகத்தீசனாம் புத்த குருவின் விசுவாமும் இராஜ விசுவாசமும் மனிதர்களை மனிதர்களாக பாவிக்கும் அன்பும் இருந்தே தீர வேண்டும்.
ஏதோ சிலர் இராஜாங்க சட்ட திட்டங்களை எதிர்த்து வாதிடினும் நீங்கள் அவர்களுக்குள் சம்மந்தப்படாது இராஜ விசுவாசத்தில் சீவிப்பதே அழகாம் அவர்களோ ஈட்டி முனைமீது கோபித்து உதைப்பதுபோல் இராஜாங்கத்தோரை எதிர்த்து நிற்கின்றார்கள். அதனால் யாது சுகமுமடையார்கள், துக்கத்தையே அநுபவிக்க நேர்ந்துபோம். நெருப்பால் நெருப்பையவிக்க நோக்குவது மேலும் மேலும் நெருப்பை உண்டு செய்வதாகும். நெருப்பை நிராலவிக்க வேண்டும். கோபத்தால் கோபத்தைத் தணிக்கலாகாது, கோபத்தை சாந்தத்தால் தணிக்கலாம். அவைபோல் இராஜாங்கததோர் சட்ட திட்டங்களுக்கடங்கி அவர்களுக்கு அன்பையும் ஆறுதலையும் உண்டுசெய்து வேணவற்றை அவர்களுக்கு விளக்கி சாந்தத்தோடு பெற்றுக்கொள்ளலாம் அவற்றைவிடுத்து ஒண்டவந்தகுடி ஊர்க்குடியை ஓட்டுவது போல் அவ்விடம் பிழைக்கபோனவர்கள் இராஜாங்கத்தை எதிர்ப்பது அழகாமோ, நீதியாமோ. இராஜாங்கத்தோர் தங்கள் ஆலோசனையில் எந்தெந்தக் குடிக்களை தங்கள் ஊரில் நிலைக்கச் செய்யலாம் எந்தெந்தக் குடிகளை நிலைக்கச் செய்யலாகாது என்பது முடிவாகும். அம்முடிவை நடாத்தத்தக்க சட்ட திட்டங்களையும் வகுப்பது இயல்பாம்.
இத்தகைய ஆலோசனையை இந்திய தேசத்தார் ஆதியில் ஆலோசித்து நடாத்தாததினால் இந்தியா யென்னக் கேட்டிற்கு வந்திருக்கின்றது என்பதும், இந்தியர்களாம் பூர்வ அரசர்களும் ஞானிகளும் பூர்வக் குடிகளும் தாழ்ந்த சாதியார், தாழ்ந்த சாதியாரென வகுக்கப்பட்டு கட்டத் துணிக்கும் குடிக்கக்