உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

506 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பரிந்து பத்திரிக்கைகள் யாவும் பேசுகிறதும் பரிந்து பணங்களை சேகரிக்கிறதும் அவர்களை எதிர்க்காமல் எதிர்த்து நில்லுங்கோளென்னும் உற்சாகங்கொடுக்கின்றதும் பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் அவர்கள் விஷயத்தில் முறிந்து பேசவில்லையே என்று முறுமுறுப்பதுமாய செயல்களை ஆலோசிக்குங்கால் செளத்தாபிரிக்க இந்தியர்களுக்கு மெய்யாகப் பாடுபடுவோர்களாக காணோம். மெய்யாகப் பாடுபடுவோர்களாயின் இந்தியாவிற்குட்பட்ட சகிக்க முடியாது கஷ்டபடுவோர்களை நோக்கியிருப்பார்கள். இங்ஙனமுள்ள பெருங்குடிகளின் கஷ்டங்களை கிஞ்சித் தேனுங் கவனியாது புறதேசத்தோருக்குப் படும் கஷ்டத்தை நோக்குங்கால் ஏதோ ஓர் காரணத்தைக் கொண்டே கூச்சலிடுவதாக விளங்குகின்றது அக்காரணம் கூடிய சீக்கிரம் விளங்கிப்போம்.

- 7:30: டிசம்பர் 31, 1913 -


314. இந்தியன் நாஷனல் காங்கிரஸ் இதுதானோ

இந்தியன் நாஷனல் காங்கிரஸ் என்பது இந்திய தேசத்திலுள்ள சகல சாதியோரையும் சமரசமாக சீர்திருத்துவோர் என்பது கருத்தாம். இப்போதவர்களது நடவடிக்கைகளையும் செயலையும் ஆலோசிக்குங்கால் பெரிய சாதிவேஷக் காங்கிரசாகவே பரக்க விளங்குகிறது. அவை யாதென்னிலோ இந்தியாவின்கண் பெரியசாதி சிறிய சாதியென்னும் பொய்யாய் வேஷங்களை ஏற்படுத்திக் கொண்டு இத்தேசத்தியப் பூர்வக்குடிகளை பலவகையாலும் பாழ்படுத்தி அவர்களைக் கொல்லாமற் கொன்று வருவதுடன் அச்சாதி வேஷச் செயலால் விவசாய விருத்தியும் வித்தியா விருத்தியுங்கெட்டு தேசம் பாழடைந்து வருவது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்க அவைகள் யாவற்றையுங் கண்ணுற்று நோக்காமலும் செய்யவேண்டிய சீர்திருத்தங்களைச் செய்து தேசத்தையும் தேசமக்களையுஞ் சிறப்படையச் செய்யாமலும் இராஜாங்க விஷயத்திலேயே நோக்கம் வைத்திருப்பதைக்காணில் பெரிய சாதி வேஷமும் சிறியசாதி வேஷமும் இவ்வவ்வகையே இருத்தல் வேண்டும், இராஜாங்க உத்தியோகங்கள் யாவும் தங்களுக்கே கிடைத்துவிட்டால் சிறிய சாதியோரென்று வகுத்து வைத்துள்ள ஆறு கோடி மக்களையும் அர்த்தநாசஞ்செய்து விடவேண்டுமென்னும் அபிப்பிராயத்தை வைத்துக்கொண்டே மேலுக்கு நாஷனல் காங்கிரஸ் என்னும் பெயரை வைத்துக் கொண்டு உள்ளுக்குள் பெரியசாதி வேஷக் காங்கிரசாகவே நடாத்தி வருகின்றார்கள்.

அதன் விவரம் யாதென்னிலோ இவ்வருஷக் காங்கிரஸ் கமிட்டியார் கூடியக் கூட்டத்தில் இருபத்தியெழு வருஷமாகப் படித்துவரும் பழைய பாடங்களைப் படித்து விட்டு செளத்தாப்பிரிக்கா இந்தியர் விஷயப் பாடம் ஒன்றை நூதனமாகப் படித்திருக்கின்றார்கள். அதாவது இந்தியர்கள் மனதிற் கொதிப்பை உண்டு செய்திருக்கும் செளத்தாப்பிரிக்கா இந்தியர்களின் நிலையைப்பற்றி முக்கியமாகப் பிரஸ்தாபிக்கப்பட்டதாம். அப்பிரஸ்தாப சுருக்கமோ செளத்தாபிரிக்கா இந்தியர்களை அதிகக் கஷ்டமாக நடத்தப்படுவதும் சாமான்யமான சுதந்தரங்கள் கூட, கொடாமல் தொந்திரவு செய்வதுமேயாம். ஆ, ஆ எத்தகைய கஷ்டத்தை காங்கிரஸ் கமிட்டியார் கண்ணோக்கம் வைத்துவிட்டார்கள், பாருங்கள், கோபாலியை எடுத்துக் தங்களுக்குத் தாங்களே காலிலிட்டுக் கொண்டு குடையுது குடையுதென்பது போல செளத்தாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்கள் தங்களுக்கு தாங்களே கேட்டை விளைவித்துக்கொண்டது போக ஏழைக் கூலிகளையுந் துன்பத்திற்கு ஆளாக்கிவிட்டது சகல இங்கலீஷ் பத்திரிகைகளிலுஞ் சிறக்க விளங்குவதைக் கண்டும் காணாததுபோல் இவ்விடமுள்ள இந்தியர்களுக்கெல்லாம் மனக்கொதிப்பை உண்டாக்கிவிட்டதாயும் அக்கொதிப்புக்குப் பலமாகக் காங்கிரஸ் கமிட்டியும் உழைக்கவேண்டுமென்று முடிவு செய்தவர்கள் இந்தியாவிலேயே ஆறுகோடி மக்கள் அல்லல்படுவதற்கு மனக்கொதிப்பைக்