அரசியல் / 519
கூட்டங்கள் கூடுவதும் படாடம்பங் காட்டுவதும் படித்த இங்கிலீஷை பரக்கப் பரக்கப் பேசுவதுமாய முயற்சிகளேனோ, விளங்கவில்லை. வீடுகள்தோருங் கைம்பெண்களாய சிறுமிகள் கண்கலங்கி கவலையுற்றிடிய அவர்க்காய ஆனந்த நிலையைத் தேட முயலாதவர்கள் இராஜாங்க சுகத்தை நாடுவது வீணேயாம். சீர்திருத்தக் கூட்டத்தோர் வேண்டிய முயற்சி செய்து விதவா விவாகத்தை முடிக்கும் வழிகளைத் தேடியும் குடிகள் யாவரும் ஒத்து வருவதில்லை என்பாராயின் குடிகள் பெருந்தொகையினரும் இக்கூட்டத்தோர் சிறுந்தொகையினரும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குகின்றது. அவரவர்கள் உள் சீர்திருத்தங்களுக்கே உட்படாத பெருந்தொகையாயக் குடிகள் இச்சிறுந் தொகைக் கூட்டத்தோருக்கு இராஜாங்க சட்ட சீர்திருத்தங்களைச் செய்யுங்கோளென்னும் அதிகாரங்களைக் கொடுத்திருப்பரோ, இல்லை. நாலைந்து வாசித்தவர்கள் முயன்று நானூறு வைந்நூறு பெயரைச் சேர்த்துக் கொண்டு வீண்பிரளி செய்து வருவதாக விளக்குகின்றதேயன்றி பல குடிகளின் சம்மந்தமல்லவென்பது இவர்கள் உள்சீர்திருத்த ஊழல்களாலேயே விளங்குகின்றதன்றோ. கலியாணஞ் செய்து விதைவைகளாயுள்ள இலட்சக் கணக்கானப் பெண்களின் கண்ணீர்வடியும் கனக்குறைவு ஒருபுறமிருக்க கலியாணஞ் செய்யாப் பெண்களின் பரிதாப மரணங்களை என்னென்று கூறுவாம். அந்தோ ஒரு பொண்ணைக் கலியாணஞ் செய்யவேண்டுமானால் பெற்றோர் பெண்ணையுங் கொடுத்து பணத்தையும் வெகுவாகக் கொடுக்க வேண்டுமென்று விதியுண்டாமே, ஈதென்ன மதியோ, அன்று பேராசை சதியோ விளங்கவில்லை. உலகத்தில் பெண்ணைப் பெற்றோரும் பிள்ளையைப் பெற்றோரும் அவர்கள் சுகவாழ்க்கையைக் கருதுவதே அழகன்றி பெண்ணைக் கொடுத்து பணத்தையுங் கொடுக்க வேண்டுமென்பது அழகாமோ. உள்ளவன் கொடுத்து விடுகிறான் இல்லாதவனோ அவன் பெண்கள் யாவரையும் பரிதவிக்க விடுவதுடன் நியமிக்கப்பட்டவன் அக்கினிக்கிரையாவது அநுபவமுங் காட்சியன்றோ. இத்தகைய உள் சீர்திருத்தக் கேடுபாடுகளை அகற்றி சுகவழிக்குக் கொண்டுவரவேண்டியது வாசித்துள்ளக் கனவான்களின் செயலன்றோ. தேசத்துப் பெண்மக்களின் பெருங் கேடுபாடுகளை அகற்றி மனைகள் தோரும் மகிழ்வாழ்க்கையாம் உள் சீர்திருத்தஞ் செய்ய வழிற்றவர்களும் வகையற்றவர்களும் ஒற்றுமெற்றவர்களும் செயலற்ற வருமாவோர் இராஜாங்க சீர்திருத்தங்களைச் செய்ய அருகராரோ, ஒருக்காலு மாகாரென்பதே திண்ணம்.
இத்தேசத்துப் பெரும்பாலோரின் வித்தியாவிருத்தியும் புத்தியின் விருத்தியும் யாதென்னிலோ பெருஞ்சோம்பேறிகளாய் டாலருக்கும் இடுக்கண் புரிந்து பிச்சையிரந்துண்போரைப் பெரியசாதிகளென்றும் பூமியை உழுது பண்படுத்தி தானிய விருத்திச்செய்து சகலருக்கும் உபகாரிகளாக விளங்குவோரை சிறிய சாதிகளென்று வகுத்துக்கூறி வல்லபம் பேசித்திரிவதே வித்தியாவிருத்தியும் விவேக விருத்தியுமாதலின் அவர்களுக்கு உள் சீர்திருத்தமீதீதென்றும், இராஜாங்க சீர்திருத்த மீதீதென்றும் விளங்குமோ, ஏதும் விளங்காவாம். ஆகலின் உள் சீர்திருத்தங்களை சரிவர நோக்காதோர் இராஜாங்க சீர்திருத்தங்களை நாடி நிற்பது அழகன்று என்றே துணிந்து கூறுவோம்.
- 7:43; ஏப்ரல் 1, 1914 -
322. மதங்களால் மநுக்கள் கேடடைவதுபோக மதங்களால் தேசமும் கேடடையும் போலும்
நமது அயர்லாண்ட் தேசமானது கருணையும் நீதியுமமைந்த பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டதேயாம். அத்தேசத்தோர் ஒரே சாதியினரும் ஒரே பாஷையினருமாவார். மதத்திலோ கிறீஸ்துவையே தொழும்படியான ஒரே மதத்தினராயினும் பிரிவினையால் கத்தோலிக்குமதத்தினரென்றும் புரோட்டிஸ்டான்ட் மதத்தினரென்றும் இருவகுப்புண்டு. அப்பிரிவினைச் செயலோ கத்தோலிக்க குருக்கள் விவாகஞ் செய்துக்கொள்ளலாகாது, விக்கிர