பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 523

அடைவதன்றி எதிரில் வரும் மனுக்கள் சீவராசிகளையுந் துன்பத்திற்குள்ளாக்கி விடுகின்றான். மாட்டுவண்டிகள் குதிரைவண்டிகளாலேயே இத்தகையக் கஷ்டமும் விபத்தும் உண்டாயின் சூத்திரக்கருவிகளின் வேகத்தாலோடும் மோட்டார்கார் என்பதை எவ்வகையாய ஜாக்கிரதையில் நடத்த வேண்டுமென்பது சொல்லாமலே விளங்கும்.

அதை ஓட்டுவோனுக்கு தேக பலமும் மனோதிடமும் சமயபுத்தியும் நிதானபார்வையும் இருந்தே தீரவேண்டும். அவ்வகையில்லாவிடின் மோட்டார்காரை ஓட்டுவதற்கவனுதவான். மோட்டார்காரை ஓட்டுவோனுக்கு முக்கியமாக அவ்வியந்திரக்கருவிகளின் நுட்பா நுட்பங்கள் யாவும் நன்றாய்த் தெரிந்திருத்தல் வேண்டும். ஓடவேண்டுமானால் அவ்வகைத் திருப்பவேண்டும், நிற்கவேண்டுமானால் இவ்வகைத் திருப்பவேண்டுமென்று கற்றுக் கொடுத்துவிட்டு இவன்தான் மோட்டார் டிரைவரென நியமித்திடுவதாயின் சாதாரணமாக ஓடவேண்டிய செயல்தவறி வேகமாக ஓட ஆரம்பித்துக் கொள்ளுமாயின் அடக்கும் நிலையறியாது அவனும் மடிவதுடன் எதிரில் வருவோரையு மடித்து வண்டியையும் உடைத்து பாழ்படுத்துவதற் ஆட்சேபமில்லை. ஐரோப்பியருள் ஐந்நூறு ரூபாயில் ஓர் குதிரை வாங்குவாராயின் ஐந்து ரூபா கொடுத்து ஓர் சவுக்கும் வாங்கியே தீர்ப்பார்கள். இத்தேசப்பிரபுக்களோ நூறு ரூபாயில் ஓர் குதிரையை வாங்கிவிடுவார்களாயின் அதைவோட்டுதற்கு இரண்டணா கொடுத்து ஓர் சவுக்கு வாங்குவதற்கு மனமெழாது வேலிகளிலிருக்கும் குச்சிகளை உடைத்துக்கொண்டு வோட்டுவார். அத்தகையோர் நாலாயிரம் ஐயாயிரம் ரூபாய்க்கொடுத்து வாங்கும் மோட்டார்கார் ஓட்டுவோனுக்கு சரியான சம்பளங்கொடாது குறைந்த சம்பளத்திற்கே ஆளைத் தேடுவது சுவாபமாகும். குறைந்த சம்பளத்திற்குத் தக்க யுக்தியும் பலனுமற்றவனே சேருவது நிலையாகும். இத்தகைய ஆட்களாலும் எஜமானர்களாலுமே மனிதர்களுக்கு உயிர்ச்சேதமும் கஷ்டங்களும் உண்டாகி வருகின்றது. சென்ற வாரம் இராயப்பேட்டைகடைவீதியில் ஓர் மனிதன்மீது மோட்டார் கார் ஏறி உடனே உயிர் போய்விட்டது. அம்மனிதனோ கூடியவரையில் சற்று நிதானியும் ஜாக்கிரதையுமுடையவன் அத்தகைய மனிதனே மோட்டார் வண்டிக்கிரையாகி விடுவானாயின் மற்றுமுள்ள பேதை மனுக்களும் அறியா சிறுவர்களும், காது கேளாதவர்களும், கண் தெரியாதவர்களும், அவ்வேகமுடைய வண்டிகளுக்கு எவ்விதந் தப்பித்து நடமாடுவார்களென்னும் அச்சமுண்டாகின்றது. இத்தேசத்து பெருத்த ரோடுகளுக்கே மனிதர்கள் போகும் வசதியான பாதைகள் மிகு கிடையாது. அதிலும் சிறிய வீதிகளுக்கோ அதேனுங்கிடையாது. சொற்ப வீதியாயினும் அவ்வழியே மாட்டுவண்டிகளும் ஓடவேண்டும், குதிரை வண்டிகளும் ஒடவேண்டும், பைசிக்கல் வண்டிகளும் ஓடவேண்டும், மோட்டார்சைக்கல்களும் ஓடவேண்டும், டராம் வண்டியும் ஓடவேண்டும், மோட்டார்காரும் ஓடவேண்டும். அவ்வழியிலேயே மனிதர்களும் நடத்தல்வேண்டும். இத்தியாதி இடுக்கணமைந்த வீதிகளில் இரண்டுபக்கமும் அடர்ந்த வீடுகள் நிறைந்துள்ள வீதிகளுக்கோ உண்டாம் இடுக்கண்கள் சொல்லத்தரமன்று. இத்தகைய இடுக்கமாய வீதிகளில் வேகமாகச் செல்லும் மோட்டார் வண்டியை விடுவதினால் அனந்தப் பிராணசேதங்களும் அபாயங்களும் உண்டாகிக் கொண்டே வருகின்றது. இக்கொடிய விபத்துக்களை நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் விசாரித்து மோட்டார் வண்டிகளை இருபக்கம் வீடுகள் நிறைந்துள்ள வீதிகளில் வேகமாக விடப்படாதென்றும் அவ்வகை விட்டு அபாயமாய விபத்துக்கள் நேர்ந்துவிடுமாயின் வண்டியின் எஜமானனுக்குப் பெருத்த அபராதமும் வண்டிவோட்டுவோனுக்குத் தண்டனையும் விதிக்கும்படியான விதிகளை செய்துவிடுவார்களாயின் மனிதர்கள் ஏதோராபத்துமின்றி வீதியில் நடமாடுவதுடன் மோட்டார் வண்டிகளை வைத்துள்ளோரும் எந்த வீதிகளில்