உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 11

ஆதியாய் மன்னன் செவ்வியக்கோல் நிற்றலால் அதன் சிறப்பே உலகத்தின் முதல் எனப்படும்.

குடிகளுக்கு நேரிடுந் துன்பங்கள் யாவும் தனக்கு நேரிட்ட துன்பம்போலும், குடிகளுக்கு நேரிடுங் குறைகள் யாவும் தனக்கு நேரிடும் குறைகள்போலும் எண்ணி பாதுகாக்கும் மன்னன் பாதத்தை உலகம் பற்றிநிற்கும்.

இயல்பாகவே நீதியும் நெறியும் நிறைந்து செங்கோலோச்சும் மன்னவனது நாட்டில் காலமழையும் தேதிபயிறும் விளைந்து குடிகள் யாவரும் சுகமுற்று கோனுங் குதூகலிக்கும்.

குடிகளையே படைகளாகக்கொண்ட அரசன் கைக்கோல் செங்கோலாக விளங்குமாயின் எதிரி மன்னன் எறியும் வேற்கோல் என்னும் வேல் ஆயுதமானது விழலே மடிந்துவிழும். உலகத்தோருக்கு அருளறம் ஊட்டி காக்கும் அரசனை அவனது செங்கோலே காக்கப்படும். அறநெறியாம் அஷ்டாங்கமார்க்கமுறை நிலையே செங்கோலாதலின் அம்முறை பிறழா வாழ்க்கை மன்னுசீர் எனப்படும்.

செங்கோலின் அழகானது யாதெனில், குடிகளின் குற்றங்களை ஆராய்ந்து தெண்டித்தலும் பிறரால் தங்குடிகளுக்கு கேடுவராவண்ணம் காத்தலுமேயாம். செங்கோலின் குணமாவது யாதெனில், வேளாளன் பயிறுகளின் மத்தியில் தோன்றுங் களைகளை அப்புறப்படுத்தி பயிறை விருத்தி செய்வது போல் தனது குடிகளுடன் பஞ்சபாதகம் நிறைந்த தீயோரை நெறுங்கவிடாது காத்தலேயாம்.

நீதியும் நெறியும் வாய்மெயும் நிறைந்த செங்கோவின் நிலை யாதெனில் அறஹத்துக்களின் சிறப்பில் பற்றும் குடிகளின் பேரில் காருண்யமும் தன்னவர் அன்னியரென்னும் பட்சபாதமின்மெமேயாம்.

- 1:35; பிப்ரவரி 12, 1908 -

கொடுங்கோல் என்பவை யாதெனில், குடிகள் மீது அன்பு பாராட்டாது சீறிநிற்றலும் பலப்பொருட்களின்பேரில் அவாபற்றி நிற்றலும் கொலையையே தண்டனையாகக் கருதலுமாம்.

கொடுங்கோல் மன்னன் கொள்ளும் இறை எத்தன்மெய்த்தனில், வழிப் போக்கனை அம்பை எய்வேனென்னும் பயமுறுத்தி அவன் கைபொருளைப் பறிப்பதுபோலாம்.

தன்னாட்டில் நிறைவேறிவருந் தீங்குகளைக் கண்டு தெண்டிக்காமலும் தீயோர் மிகுதியை விலக்காமலும் தனக்குண்டாகுந் தீயகுணத்தைத் தானே பெருக்கி நாட்டை விட்டுவிடுவான்.

தன் நாட்டின் சீர்திருத்தத்தை முன் ஆலோசித்துப்பாராமலும், மந்திரவாதிகளைக் கொண்டாலோசியாமலும் முறைதப்பி நடாத்தும் ஆளுகையால் தன் குடிகளையும் வேற்றரசன் நாடோடச் செய்துவிடுவான்.

தனது ஆளுகைக்கு உட்பட்டக் குடிகளுக்கு எப்போதும் பயமும் ஆளுகையால் துக்கமும் பொறுக்காது கண்ணீர் விடுதலுமாகிய குடிகளின் குறையால் செல்வமானது படைகளால் அழிந்து பாழாகிவரும்.

கற்றவர்களாலுங் கல்லாதவர்களாலும் வலியோராலும் மெலியோராலுங் கொண்டாடும் மன்னவன் தன்னவனாகாது வன்னவனாய் வழுமேற்கொண்டு குடிகள் தழுவாது கோனென்று கூறலற்று குடிகளில் ஒருவனாக பாவிப்பர்.

மழையில்லாத காலத்து பயிறுகள் யாவும் மடிந்து மக்களும் வானோக்கி நிற்பதுபோல் கருணையற்ற மன்னவன் கொடுங்கோலைநோக்கிக் குடிகள் முகம் வாடி நிற்பர்.

அந்நாட்டிற் குடிகளுக்கு செல்வம் இருந்தும் இல்லாதவர்களாகவும், உரவினர் இருந்தும் அற்றவர்களாகவும், கற்றிருந்தும் கல்லாதவர் போலவும், சீலமிருந்தும் கோலமற்றவர்களாகவும் உன்மத்தர்போல் திகைத்து நிற்பர்.

குடிகளுக்கு நேரிட்டுள்ள குறைகளை உணர்ந்து அவற்றை நீக்கி ஆதரிக்காத நாட்டில் காலமழை பெய்து அதிதானியம் விளையாதென்பது குறிப்பு.

கோழிகளானது தன் குஞ்சுகளை தனது இருசெட்டைகளில் கார்த்து காலத்திற்குக் காலம் ஆகாரமூட்டி பருந்துக்குக் கொடுக்காது பாதுகாப்பதுபோல் குடிகளைத் தனது செங்கோலென்னுஞ் செட்டையிற் காக்காது