உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

556 / அயோத்திதாசர் சிந்தனைகள்

இரு பிறப்பாளர் என்று வழங்கிவந்தார்கள்.

இதுவே புத்தசங்க அறஹத்துக்களிடம் பெற்ற உபநயனத்தின் பயனும், சுருதி முடிவின் பயனும், வேத அந்தத்தின் பயனுமாகும்.

பட்டினத்தார்

நீற்றைப்புனைந்தென்ன நீராடப்போயென்ன நீ மனமே
மாற்றிப்பிறக்க வகையறிந்தாயில்லை மாமறைநூல்
ஏற்றிக்கிடக்குது யெழுகோடி மந்திரம் என்னகண்டாய்
ஆற்றிற்கிடந்துந் துறைதெரியாமலலைகின்றயே.

நெஞ்சறி விளக்கம்

காட்டினில் மேவுகின்ற / கனபுழுவெல்லாம் பார்த்து
வேட்டுவ கெடுத்துவந்து / விரும்பிய கிருமிதன்னை
கூட்டினி லடைத்துவைத்து / குளவிதன் னுருவாய்செய்யும்
நாட்டினி நீதா நாகை / நாதரை வணங்கு நெஞ்சே.

இத்தகைய தேகத்திலிருப்பதை அறுவெறுத்து புறமெய் வேறு, அகமெய் வேறாகக் கழட்டிக் கொள்ளுவோர்களை ஜீவன் முத்தர்கள் என்று கூறப்படும். இஃதை அநுசரித்தே பட்டினத்தார் தனது சற்குருவாகும் புத்தபிரான் அரசனாகவிருந்து குருவாகத் தோன்றி விளக்கிய மகத்துவத்தைப் போதிக்கின்றார்.

பட்டினத்தார்

மானார் விழியைக் கடந்தேறி வந்தனன் வான் குருவும்
கோனாகி யென்னை குடியேற்றுக்கொண்டனன் குற்றமில்லை
போனாலும் பேரிருந்தாலு நற் பேரிது பொய்ன்றுகா
ணானாலு மிந்த வுடம்போ டிருப்பதறுவெறுப்பே.

இத்தகைய அறஹத்துக்கள் ஆதியாகிய குருநாதனுக்கு சமதையாய் சம - ஆதி, சமாதியாகிப் புறமெய் அகற்றி உண்மெயொளியாய் அகண்டத்துலாவி நட்சேத்திரம் பெற்றிருக்கின்றார்கள்.

அகஸ்தியர் மாணாக்கனை சுழிமுனையாம் வேத அந்தத்தில் நிறுத்தி சாதனத்தை போதித்த பாடல்

பண்ணினால் ஜடம்போக தெத்தனைநாளாய்
பலவாகமெளனத்தை விரித்துச்செல்வேன்
ஒண்ணினால் மௌனத்தில் ரவியைப்பாரு
உறுகியுல்லோவகண்டத்தின் வெளியைக்காட்டும்
கண்ணினால் ஜடங்காணும் பிடிக்கப்பொய்யாம்
கற்பூர தீபம்போல் ஒளியாய் நிற்கும்
தண்ணினால் சாய்கையில்லை யகண்டமாவாய்
சச்சிதானந்தமென்ற தேகமாமே.

தேய்வக்கதி - இதுவே தெய்வகதி யென்னப்படும்.

சீவகசிந்தாமணி

திருவிற் பொற்குலாய தேர்ந்தார் / தேவர் தன் தண்மெய் செப்பிற்
சுருவத்துசென்று தோன்றார் / கானிலந் தோய்தல் செல்லா
குருவமே லெழுதலாகா / வொளியுமிழ்ந் திலங்குமேனி
பரிதியி னியன்றதொக்கும் / பன்மலர் கண்வாடா.

மச்சமுனியார் ஞானம்

கேட்டறிந்துக்கொள் வீடென்ன காடென்ன
கெட்டிப்பட்ட மெளனத்திலே நின்று
மாட்டறிந்துக்கொள் வஸ்துவை யுண்டுநீ
மனதைத்தாண்டி யறிவுக்குள்ளேச் செல்லப்
பூட்டறிந்துக்கொள் பொன்போலதேகமாம்
புத்தியோடு மகண்டத் துலாவலாம்
ஆட்டறிந்துக்கொள் கற்பூர தேகமாம்
அகண்ட சோதியும் சித்தியுமாச்சுமே.

ஒளவையார் ஞானக்குறள்

வெள்ளி பொன் மேனியதொக்கும் வினையகன் / உள்ளுடம்பினாய வொளி.

- 2:19; அக்டோபர் 21, 1908 -

புத்தசங்கத்தோருள் சமணநிலை கடந்து அறஹத்துக்கள் என்னும் அந்தணநிலை அடைந்து இருபிறப்புண்டாய் சுயம்பிரகாசமாய் அந்தரத்தில்