604 / அயோத்திதாசர் சிந்தனைகள்
ஈரங்கோலியர், வண்ணாரென்றும்; கிழிந்த ஆடைகளைச் செட்டைகளைத் தைத்துக் கொடுப்போர்க்குப் பெயர் துன்னர், பொல்லர், தையற்காரரென்றும்; உயிர்வதையாகியக் கொலை புரிவோர்க்குப் பெயர் களைஞர், வங்கர், குணுங்கர், மாதங்கர், புலைஞர், இழிஞரென்றும்; மாடுபூட்டிச் செக்காட்டுவோர்க்குப் பெயர் சக்கிரி, செக்கார், நந்திகளென்றும்; கள் விற்போர்க்குப் பெயர் சவுண்டிகர், துவசர், பிழியர், பிடியரென்றும்;
கடற்கரை வாசிகளுக்குப் பெயர் கரையார், பட்டினவர், மீன்வாணியரென்றும்;
கடற்கரைவாசப் புருஷர்களுக்குப் பெயர் பரதவர், நுளையர், பஃறியர், மிதிலர், சாலர், கடலர், கழியரென்றும்; இஸ்திரீகளுக்குப் பெயர் பறத்தி, நுளத்தி, அளத்தி, கடற்பிணாவென்றும்; மருதநிலவாசப் புருஷர்களின் பெயர் களமர், தொழுவர், வள்ளர், கம்பளர், உழவர், விளைஞரென்றும்; இஸ்திரீகளின் பெயர் கடைச்சியர், ஆட்டுக்காலாட்டியரென்றும்; பாலைநிலவாசப் புருஷர்களின் பெயர் எயினர், புள்ளுவர், மறவர், இறுக்கரென்றும்; இஸ்திரீகளின் பெயர் எயிற்றியர், பேதையர், மறத்தியரென்றும்;
முல்லைநிலவாசப் புருஷர்களின் பெயர் முல்லையர், அண்டர், ஆன்வல்லவர், குடவர், பாலர், கோவலர், அமுதர், ஆயர், தொறுவர், இடையரென்றும்; இஸ்திரீகளின் பெயர் தொறுவி, பொ துவி, ஆய்ச்சி, குடச்சி, இடைச்சியென்றும், குறிஞ்சிநிலவாசப் புருஷர்களின் பெயர் குறவர், கானவர், மள்ளர், குன்றவர், புனிவர், இறவுனரென்றும்; இஸ்திரீகளின் பெயர் குறத்தியர், கொடிச்சியரென்றும்;
மதகரி யாள்வோர்க்குப் பெயர் யானைப்பாகர், ஆதோணரென்றும்; அரண்மனைக் காப்போர்க்குப் பெயர் மெய்க்காப்பாளர், காவலர், கஞ்சுகி என்றும்; மரக்கலம் ஓட்டுவோர்க்குப் பெயர் மாலுமி, மீகாமன், நீகானென்றும்; இரதமோட்டுவோர்க்குப் பெயர் சூதன், வலவன், சாரதி, தேர்ப்பாகனென்றும்; தோல்களைப் பதனிடுவோர்க்குப் பெயர் இயவர், தோற்கருவியாளரென்றும்; நரம்பு முதலியவைகளைக் கொளுத்தித் தோற்பறைக் கொட்டி துளைக்குழலூதுவோர்க்குப் பெயர் குயிலுவரென்றும்; ஓர் சங்கதியை மற்றவர்க்கு அறிவிப்போர்க்குப் பெயர் வழியுரைப்போர், தூதர், பண்புரைப்போர், வினையுரைப்போர், வித்தகரென்றும்; இஸ்திரீபோகத்து அழுந்தினோர்க்குப் பெயர் பல்லவர், படிறர், இடங்கழியாளர், தூர்த்தர், விலங்கர், காமுகரென்றும்; மனம்வருந்த வருத்துவோர்க்குப் பெயர் அறுந்துநர், வேதனை செய்வோரென்றும்; பொறாமெயுடையோர்க்குப் பெயர் நிசாதர், வஞ்சிகரென்றும்; பயமுடையோர்க்குப் பெயர் பீதர், சகிதர், பீறு, அச்சமுள்ளோரென்றும்; அன்னியர் பொருளை அபகரித்து சீவிப்போர்க்குப் பெயர் கரவடர், சோரர், தேவர், பட்டிகர், புறையோர், கள்ளரென்றும்; கொடையாளர்க்குப் பெயர் புரவலர் ஈகையாளர், வேளாளர், ஈசர், தியாகி, வேள்வியாளர், உபகாரரென்றும்; தரித்திரர்க்குப் பெயர் நல்கூர்ந்தோர் அகிஞ்சர், பேதையர், இல்லார், வறியர் ஆதுலர், ஏழை, உறுகணாளர், மிடியரென்றும்;
மாணாக்கர்க்குப் பெயர் கற்போரென்றும்; ஆசாரியர்க்குப் பெயர் ஆசான் தேசிகர், உபாத்தியாயர், பணிக்கரென்றும்; அரசர் முதல் வணிகர், வேளாளர்வரை முக்குலத்தோர்க்குங் கருமக் கிரியைகளை நடத்துவோருக்குப் பெயர் சாக்கையர், வள்ளுவர், நிமித்தகர், கருமத்தலைவரென்றும்; விவேகமிகுத்தோர்க்குப் பெயர் விவேகி, அறிஞர், சான்றோர், மிக்கோர், மேலோர், தகுதியோர், ஆய்ந்தோர், ஆன்றவர், உலக மேதாவியரென்றும்; அவிவேகிகளாம் அறிவிலார்க்குப் பெயர் பொறியிலார், கயவர், நீசர், புள்ளுவர் புல்லர், தீயோர், சிறிய சிந்தையர், கனிட்டர், தீக்குணர், தீம்பர், தேறார், முறையிலார், முசுண்டர், மூர்க்கர், முசுடர், கீழோர், புல்லவரென்றும்;
இவ்வகையாய் பஞ்சபூமிகளின் விளைபேதத்திற்கும், பொருள் பேதத்திற்குத் தக்கப் பெயர்களையும், மனுக்களின் குணபேதங்களுக்கும், தொழில் பேதங்களுக்கும் தக்கப் பெயர்களைக் கொடுத்து புத்ததன்மத்தில் நிலைத்து ஒற்றுமெயுற்ற சுகவாழ்க்கையில் நிலைக்கச் செய்தார்கள்.