608 / அயோத்திதாசர் சிந்தனைகள்
புத்த வியாரங்களைக் கட்டிவைத்து சமணமுநிவர்களை நிறப்பி சகடபாஷையாம் சமஸ்கிருத பாஷையை மிக்கப் பரவச்செய்யாமல் திராவிட பாஷையாம் தமிழ் பாஷையிலேயே அனந்தங் கலைநூற்களை வகுக்கச்செய்து தென்னாடு எங்குமமைத்துள்ள அறப்பள்ளிகளாம் வியாரங்களுள் சிறுவர்களுக்குக் கலாசாலைகளை அமைத்து சமணமுநிவர்களால் இலக்கிய நூல், இலக்கண நூல், கணித நூல், வைத்திய நூல் யாவற்றையுந் தெள்ளறக் கற்பித்துவந்தார்கள்.
இவைகளுள் அரசர்களால் அன்பு பாராட்ட வேண்டியவர்களும், அரசர்களுக்கோர் ஆபத்துவராமல் காக்கத்தக்க அன்புடைய சுற்றத்தோரை ஐந்து வகையாக வகுத்திருந்தார்கள்.
அதாவது, சத்திய சங்கத்துச் சமணமுநிவர்களில் தண்மெய்ப்பெற்ற அந்தணர்கள் 1. வருங்காலம் போங்காலங்களை விளக்கி கருமக்கிரியைகளை நடாத்திவரும் நிமித்தகர்கள். 2. அறுசுவை பதார்த்தங்களை பாகசாஸ்திரக் குறைவின்றிச் செய்து அன்புடன் அளித்துப் புசிப்பூட்டிவரும் மடைத் தொழிலாளரென்னும் சுயம்பாகிகள், 3. தேகலட்சணங்களையும் வியாதிகளின் உற்பவங்களையும், ஒடதிகளின் குணாகுணங்களையும் நன்காராய்ந்து பரிகரிக்கும் மாமாத்திரராம் வைத்தியர்கள் 4. அரசரது சுகதுக்கங்களை தங்கள் சுகதுக்கம்போற் கருதி அவரது நட்பை நாடிநிற்கும் சுற்றத்தார். 5. காலதேச வர்த்தமானங்களை ஆராய்ந்து மதிகூறும் மந்திரவாதிகளாம் அமாத்தியர். 6. கணிதவழிகளை ஆராய்ந்து வேள்விக்கு உறுதி கூறும் புரோகிதர், 7. சருவ சேனைகளுக்கும் சேநாபதியர். 8. அரசர்களுக்கு இல்லறப்பற்றின் கேடுகளையும், துறவறப்பற்றின் சுகங்களையும் விளக்கக்கூடிய தவற்றொழிற்றூதர். 9. வேள்வி யாகங்களுக்கு மதி யூகிகளாகும் சித்தர்களாம் சாரணர்கள். 10. நெருங்கியக் குடும்பத்தோர். 11. மேலாலோசனைக்குரிய கன்மவிதிக்காரர். 12. ஆடையாபரண அலங்கிரத சுற்றத்தாராகும் கனக சுற்றம் 13. அரண்மனைவாயல் காக்கும் கடைக்காப்பாளர். 14. தனது நகரத்தில் வாழும் விவேகக் குடிகளாம் நகரமாக்கள். 15. வீரர்களுக்கு அதிபதியாகும் படைத்தலைவர். 16. எதிரிகளுக்கு அஞ்சாத வீரர்களாம் மறவர்கள். 17. யானை பாகரும் சுத்தவீரருமான யானைவீரர். 18. இத்தியாதி அரச அங்கத்தினர் சூழ வாழும் வாழ்க்கையே அரசர்கட்கு இனியதென்று வகுத்து அரச ஆட்சிகளை நிலைக்கச்செய்தார்கள்.
அரச அங்கத்தினரது வல்லபத்தாலும் சமண முநிவர்களின் சாதுரியத்தாலும், மகட்பாஷை, சகடபாஷை, திராவிடபாஷை, அங்க பாஷை, வங்கபாஷை, கலிங்கபாஷை, கௌசிகபாஷை, சிந்துபாஷை, சோனகபாஷை, சிங்களபாஷை, கோசலபாஷை, மராடபாஷை, கொங்கணபாஷை, துளுவ பாஷை, சாவக பாஷை, சீனபாஷை, காம்போஜபாஷை, அருணபாஷை, பப்பிரபாஷை, முதலிய வரிவடிவங்களை இயற்றியும் விருத்தி செய்து வந்தவற்றுள் நவகண்டங்களுள் எங்கணும் புத்ததன்மமாம் சத்தியதன்மமே பரவி சிறுவர் முதல் பெரியோர்வரை வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கமென்னும் நீதிநெறி வழுவா நிலையில் நின்று ஒற்றுமெயும், அன்பும் பாராட்டி சுகசீவ வாழ்க்கையில் நிலைத்திருந்தார்கள்.
இத்தகையவொழுக்கவிருத்திக்குக் காரணமோவென்னில் ஒவ்வொரு சிறுவர்களையும் அறப்பள்ளிகளாம் சங்கத்திற்கு விடியர்காலம் அனுப்பி சமண முநிவர்கள்பால் கலை நூற்களைக் கற்று அறிவின் விருத்தி பெற்றும் நீதி நூற்களைக் கற்று ஒழுக்க நெறியில் நின்றும் ஐந்துவயது முதல் பதினாறு வயதளவும் பள்ளிக்குச் செல்லுவதும், சமணமுநிவர்களை வணங்கி கல்வி கற்பதும், இல்லம் செல்வதும், தாய்தந்தையரை வணங்கி இனிதிருப்பதுமாகியச் செயலன்றி துர்சனர் சாவகாசமும் பேராசையுள்ளோர் பிறர் சிநேகமும் வஞ்சினத்தோர் சேர்க்கை வழிபாடுகளுமாகிய கேட்டுரவினராகும் கலப்பின் மெயே காரணமாகும்.
இத்தகைய நல்லொழுக்கக் காரணகாரிய விருத்தியிலிருந்தும் பகவனால் போதித்துள்ள சத்தியதருமமாம் மெய்யறத்தின் ஆதியும் அந்தமுங் கண்டடை