சமூகம் / 609
சிறப்பும், கல்வியில் இலக்கிய நூற்களின் சிறப்பும், கலை நூற்களின் சிறப்பும், வைத்திய நூற்களின் சிறப்பும், சோதிடநூற்களின் சிறப்பும் எங்கும் பிரகாசிக்கத் தக்க நிலையிலிருந்ததுடன் சகலபாஷைக் குடிகளும் வித்தியா விருத்தியிலும், விவசாயவிருத்தியிலும், அறிவின் விருத்தியிலுமிருந்து சுகவாழ்க்கைப் பெற்றிருந்தார்கள்,
இத்தேசத்தோர் யாவருக்கும் புத்த தன்ம நல்லொழுக்கங்களாம் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கங்கள் நிறைந்து வருங்காலத்தில் வித்தைக்கு சத்துரு விசனம் தாரித்திரம் என்பதுபோல் இத்தேசத்தின் சத்தியதன்மத்திற்கே சத்துருவாக அசத்தியர்களாம் மிலைச்சர் மிலேச்சரென்னும் ஓர் சாதியார் வந்து தோன்றினார்கள். அவர்கள் வந்த காலவரையோ புத்தபிரான் பரிநிருவாணத்திற்கு ஆயிரத்தி எழுநூறு வருடங்களுக்குப் பின்னர் தோன்றிய பெளத்தமன்னர்களாம் சீவகன், மணிவண்ணன் இவர்கள் காலமேயாகும். அவர்களுடைய சுயதேசம் புருசீகதேசமென்றும், அவர்கள் வந்து குடியேறிய விடம் சிந்தூரல்நதிக் கரையோரமென்று அஸ்வகோஷர் அவர்கள் எழுதியுள்ள நாராதிய புராணசங்கைத் தெளிவிலும், குமானிடர் தேசத்தில் மண்ணை துளைத்து அதனுள் வாசஞ்செய்திருந்தார்களென்று தோலாமொழிதேவரியற்றிய சூளாமணியிலும் வரைந்திருக்கின்றார்கள். இவர்களது நாணமற்ற ஒழுக்கத்தையும், கொடூரச் செயலையும், மிலேச்ச குணத்தையும் உணர்ந்த சேந்தன் திவாகரதேவர், தனது முன்கலை நூலிலும், மண்டல புருடன் தனது பின்கலை நூலிலும் மிலைச்சரென்றும், மிலேச்சரென்றும், ஆரியரென்றும் இவர்களை அழைத்திருக்கின்றார்கள்.
இத்தகையாய் அழைக்கப்பெற்ற மிலேச்சர்கள் செய்தொழில் யாதுமின்றி இத்தேசத்தோரிடம் பிச்சையிரந்துண்பதே அவர்களது முதற்கிருத்தியமா இருந்தது. அவ்வகை யிரந்துண்ணுங்கால் இத்தேசக் குடிகள் பலபாஷைக்காரர்களாயிருப்பினும் சத்தியத்தில் ஒற்றுமெயுற்று வாழ்தலையும், அவர்களன்பின் பெருக்கத்தையும், மகடபாஷையில் அறஹத்தென்றும், சகடபாஷையில் பிராமணரென்றும், திராவிட பாஷையில் அந்தணரென்றும் அழைக்கப்பெற்ற புத்தசங்கத்தலைவர்களை அரசர், வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளர்கள் கண்டவுடன் அவர்களடிபணிந்து வேண வுதவிபுரிந்து வருவதையுங் கண்ணுற்றுவந்த மிலேச்சர்கள் சத்தியசங்க நூற்களுக்கு உறுதிபாஷையாகும் வடமொழியையும் தென்மொழியையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
பாஷைகளைக் கற்றுக்கொண்ட போதிலும் சமணமுநிவர்களின் சாதனங்கள் விளங்காமலும், அச்செயலிற் பழகாமலும் அவர்களது நடையுடை பாவனைகளையும் மகடபாஷை, சகட பாஷை, திராவிட பாஷைகளில் அவர்கள் ஏதேது மொழிகின்றார்களோ அம்மொழிகளைக் கற்றுக்கொண்டும் தங்கடங்கள் பெண்பிள்ளைகளுடன் பிச்சையிரந்துண்டு சிந்தூரல் நதியின் கரையோரம் போய் தங்கிக்கொள்ளுவதுமாகியச் செயலிலிருக்குங்கால் இத் தேசக்குடிகளின் பார்வைக்கு அவர்களுடையப் பெண்கள் கால்செட்டை அணிந்துகொண்டும், புருஷர் பெரும்வஸ்திரமும் செட்டையும் அணிந்து நீண்டவுருவும் வெண்மெ நிறமும் உள்ளவர்களாய்த் தோற்றுங்கால், நீங்கள் யாவரென்று கேட்க, யாங்கள் நதியின் அக்கரையோரத்தார், அக்கரை ஓரத்தாரென விடை பகர்ந்துக்கொண்டே வந்தவர்கள், கல்வியற்றப்பெருங் குடிகளையடுத்து மகடபாஷையில் யாங்களே அறஹத்துக்களென்றும், சகடபாஷையில் யாங்களே பிராமணர்களென்றும், திராவிட பாஷையில் யாங்களே அந்தணர்களென்றுங்கூறி தங்களுக்கே சகல தானங்களும் கொடுக்கும்படி வேதம் கூறுகிறதென்று மொழிந்து பயத்துடன் பிச்சையிரந் துண்டவர்கள் சில சகடபாஷை சுலோகங்களைச் சொல்லிக் கொண்டு அதிகாரத்துடன் பிச்சையிரக்க ஆரம்பித்துக்கொண்டார்கள்.
இவர்கள் இத்தேசத்தோர்களிலும் மிக்க வெண்மெய் நிறமுடையவர்களாயிருந்து சமணமுநிவர்களைப்போன்ற பொன்னிற ஆடையுடுத்திய வேஷமானது