614 / அயோத்திதாசர் சிந்தனைகள்
ஆரியக்கூட்டத்தோர்க்கு அம்மொழியின் பொருள் விளங்காதிருப்பினும் பெளத்த சங்கத்தோருள் கேசரி, பைரவி, சாம்பவி என்னும் மூன்று ஞானமுத்திரைகள் வழங்கி வருவதுண்டு. அப்பெயரை மூலமாகக் கொண்டு கேதாரி என்னும் பூதாரி அம்மனிருக்கின்றாள், அவளை சிந்தித்து வீடுகடோருங் கயிறுகளை வைத்து பூசித்து எங்களுக்கு தட்சணை தாம்பூலம் வைப்பீர்களாயின் அக்கயிறுக்கு மந்திர உச்சாடனம் செய்து கொடுப்போம், அதை நீங்கள் கட்டிக்கொள்ளுவீர்களானால் சகல சம்பத்தும் பெற்று சுகம் பெறுவீர்களென்று கூறி பொருள் சம்பாதித்துக் கொள்ளுவதற்கு நோன்பென்னும் மொழியே ஆறாவது ஏதுவாகிவிட்டது.
பௌத்தர்களின் யாகவகைகள் யாதொனில்:- மகடபாஷையாம் பாலியில் யாகமென்றும், சகடபாஷையாம் வடமொழியில் வேள்வியென்றும், திராவிட பாஷையாம் தென்மொழியில் புடமென்றும் வழங்கிவரும் வார்த்தைகளில் பதிநெட்டுவகை யாகங்களைச் செய்துவந்தார்கள்.
அதாவது, குண்டமென்னுங் குழிவெட்டி அக்கினி வளர்த்தி மருந்துகளின் புடமிடுவதும், ஈட்டி, வாகுவல்லயம் இவைகளுக்குத் துவையலேற்றுவதும், அவைகளால் உண்டாம் மூர்ச்சைகளைத் தெளிவித்தலும், வானம் வருஷிக்கச்செய்தலும், ஓடதிகளைக்குடோரித்தலும், பஸ்பித்தலும், அரசர்களுக்கு தாமரைப்புட்ப சுன்னம் முடித்தலும், தேகபல ஓடதிகளமைத்தலும், நரருக்கு சுகபுகையூட்டி நீதிநெறிகளைப் புகட்டி மக்கள் கதிபெறச்செய்தலும், மக்களுக்கு சுகபுகையூட்டி ஞானநெறிபுகட்டி பிரமகதி பெறச்செய்தலுமாகிய சோதிட்டோமயாகம், அக்கினிட்டோமயாகம் மத்தியாகினிட்டோமயாகம், வாசபேயயாகம் மத்திராத்திரயாகம், சேமயாகம், காடக யாகம், சாதுரமாகி யாகம், சாவித்திராமணியாகம், புண்டரீக யாகம், சிவகாமயாகம், மயேந்திர யாகம், மங்கிக்கஷே யாகம், இராசசுக யாகம், அச்சுவதே யாகம், விச்சுவதித்து யாகம், நரமித யாகம், பிரமமித யாகம் என்பவைகளேயாம்.
இவற்றினுள் முக்கியமாக சருவ மக்களுக்கும் அவுல்பிரசாதம் அளித்துவரும் நான்கு யாகங்கள் யாதெனில்:- ஈட்டியாகம், எச்சயாகம், ஓமயாகம், கிருதயாக மென்பவைகளேயாம். ஈட்டியாகமாவது மிருகங்கள்மீது மக்கள் மீதும் பட்டவுடன் மூர்ச்சையுண்டாகச் செய்தல், எச்சயாகமென்பது அம் மூர்ச்சையைத் தெளிவிக்கச்செய்தல், கிருதயாகமென்பது ஆயுதம்பட்ட காயங்கள் ஆறாதிருக்குமாயின் அவற்றை ஆறச்செய்தல், ஓமயாகமென்பது மழையில்லாத காலத்தில் வருவிக்கச்செய்தல் இவற்றை இந்திரயாகமென்றுங் கூறப்படும்.
இந்நான்கு யாகங்களும் சகலகுடிகளுக்கும் அவுல்பிரசாதம் ஈய்ந்து செய்யும் யாகமாதலின் இதனந்தரார்த்தமறியா பெருங்குடிகள் வேஷப்பிராமணர்களை அடுத்து சங்கத்து பிராமணர்கள் யாககுண்டம் வெட்டி திரைகட்டி அவுல்பிரசாதம் அளிப்பார்கள். நீங்களேன் அவ்வகைச் செய்வதில்லையென்று கேட்டபோது யாகமென்னும் பெயர்களையும், அதன் செயல்களையும் வேஷபிராமணர்கள் அறியாதவர்களாய் இருந்தபோதினும் சற்று நிதானித்து திரைட்டி அக்கினி வளர்த்தலில் ஓர் புசிப்பைத்தேடிக்கொண்டார்கள். அதாவது, தங்களுடைய புருசீகதேசத்தில் ஆட்டின்மாமிஷங்களையும், மாட்டின் மாமிஷங்களையும் தினேதினே புசித்து வளர்ந்தவர்கள் இந்திரர்தேசம் வந்து யாகசீவனஞ் செய்து வருங்கால் தங்கள் பிராமண வேஷத்திற்காக மாமிஷப்புசிப்புக்கு ஏதுவிலாமல் சருகு காய் கிழங்கு பட்சணத்தை புசித்து திருப்தியில்லாது இருந்தவர்கள் திரைகட்டி யாகஞ்செய்தல் என்றவுடன் அம்மொழியையே பரீடமாகக்கொண்டு கல்வியற்றப் பெருங்குடிகளையும், காமியமுற்ற சிற்றரசர்களையும் வரவழைத்து யாங்கள் ஓர் பெரும் யாகஞ் செய்யப்போகின்றோம், அந்த யாகத்தின் சாம்பலைக் கொண்டுபோய் உங்கள் வீடுகளிற் கட்டிவைத்துக் கொள்ளுவீர்களானால் சகல சம்பத்தும் பெருகி வாழ்வதுடன் உங்களுக்கு யாதொரு வியாதியும் அணுகமாட்டாது, அதற்காய