பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/672

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

624 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பூர்வ கன்ம வியாதியாயினுந் தங்களாலேயே தாங்கள் தேடிக்கொண்ட வியாதியாயினும் அவற்றின் செயல்களையுந் தோற்றங்களையும் உணர்ந்து தங்களுக்குள் ஒடுங்கித் தாங்களே அப்பிணிகளை ஒடதிகளால் நீக்கிக்கொள்ள வேண்டுமேயன்றி எந்த தேவனும் பிணிகளை நீக்கமாட்டார். துக்கமென்னும் நரகத்தை ஒழித்து சுகமென்னும் மோட்சமடைய வேண்டியவர்கள் தங்களுக்குள்ள இராகத் துவேஷமோகமென்னும் காம வெகுளி மயக்கங்களை ஒழித்து மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் முப்பற்றுக்களை அறுத்து சாந்தம், அன்பு, யீகை என்னும் பற்றற்றான் பற்றுக்களில் நிலைத்தவர்களுக்கே மோட்ச சுகமாம் நித்திய வாழ்க்கைக் கிடைக்குமேயன்றி எந்ததேவனும் மோட்சங் கொடுக்கமாட்டார். இஃது பௌத்ததர்மப்பிரியர்கள் ஒவ்வொருவர் உள்ளத்தும் நிறைந்துள்ள தன்மமாதலின் வேஷப்பிராமணர்கள் நூதனமாக வெவ்வேறு சிலைகளமைத்துள்ள சிலாலயங்களில் பூர்வக்குடிகளை வந்து பூசைநெய்வேத்தியம் செய்யும்படியாகவும், தொழும்படியாகவும் போதிக்குங்கால் எக்காலும் அவ்வகை பூசை நெய்வேத்தியஞ் செய்யாதவர்களாதலின் திகைத்து நிற்பதும், வேஷப்பிராமணர்கள் கூறிய வண்ணம் தேங்காய் பழம் தட்சணைக் கொண்டுவராதிருப்பதுமாகியக் குடிகளின் குணானுபவங்களை அறிந்த ஆரியர்கள் தாங்கள் நூதனமாக வகுத்துக்கொண்ட சிலாலயங்களுள் பூர்வகாலத்தில் புண்டரீக பூரியென்றும், தற்காலம் பூரியென்றும் வழங்கும்படியான வியாரத்துள் தங்கியிருந்த சமணமுநிவர்களை தங்கள் வலைக்குட்பட்ட சிற்றரசர்களைக்கொண்டு விலக்கிவிட்டு அவற்றுள் தங்களுக்குப் பிரியமான சிலைகளை அடித்து கூடமத்தியிலமைத்து அதனடியிற் காந்தக்கற்களைப் புதைத்து இரும்பு தகடுகளினால் தட்டுகள் செய்து குடிகளை தேங்காயும் கனிவர்க்கங்களும் தட்சணை தாம்பூல புட்பமும் கொண்டுவரச் செய்து தாங்கள் செய்துவைத்துள்ள இரும்புத்தட்டில் வைத்து குடிகளின் கைகளிற்கொடுத்து நீங்கள் இத்தேவனை நோக்கி வேண்டியவற்றைக் கேளுங்கள், உங்கள்மீது பிரியமில்லாவிடின் இழுத்துக்கொள்ள மாட்டாரென்று வேஷப் பிராமணர்கள் கூறவும் அவற்றைக் கேட்டுக்கொண்ட குடிகள் இருப்புத் தட்டில் வைத்துள்ள தேங்காய்ப் பழம் முதலியவைகளை எடுத்து காந்தம் புதைத்து வைத்துள்ள சிலாரூபங்களின் அருகிற் செல்லுவதற்குமுன் காந்தக்கல் இரும்புத் தட்டுகளை இழுத்துக் கொள்ளும்போது கல்வியற்றப் பேதைக் குடிகள் பயந்து வேஷப்பிராமணர்கள் வாக்கை தெய்வவாக்கென்று எண்ணி பூர்வ சத்தியச் செயல்களை மறந்து அசத்தியச்செயல்களில் ஆழ்ந்து,

ஆடுகளையும் மாடுகளையும் உயிருடன் நெருப்பிலிட்டு சுட்டுத் தின்னும் படுபாவிகளின் சேர்க்கையால் கொலைத்தொழிலைக் கூசாமற் செய்யவும், அகிம்சாதன்மத்தை மறக்கவும் ஆரம்பித்துக்கொண்டார்கள். ஆரியர்கள் வரைந்துவைத்துக்கொண்டுள்ள கட்டுக்கதைகளில் அவர்களுடைய ரிஷிகள் திருடுவதற்குப் போம்போது நாய்குலைக்குமானால் அதன் நாவைக் கட்டுவதற்கு மந்திரஞ்செய்வதாகக் குறிப்பிட்டு வழங்கிவந்தவர்களாதலால் அவர்களை யடுத்த இத்தேசக் குடிகளுங் கூசாமல்திருட ஆரம்பித்துக் கொண்டார்கள். அவர்கள் ஏற்படுத்திக்கொண்டுள்ள தேவதாக் கதைகளில் தேவர்களே அன்னியர் தாரங்களை ஆனந்தமாக இச்சித்தக் கதைகளை எழுதிவைத்துக் கொண்டுள்ளவர்களாதலின் அவர்களை அடுத்த இத்தேசத்தோரும் அன்னியர் தாரமென்னும் அச்சமின்றி துற்செய்கையிற் பிரவேசிக்க ஆரம்பித்துக் கொண்டார்கள். பொய்யைச் சொல்லியே வஞ்சிப்பதும் பொருள் பறிப்பதுமாகிய சோம்பேறி சீவனத்தையே மேலாகக் கருதி செய்துவந்தவர்களாதலின் அவர்களை அடுத்த இத்தேசக் குடிகளும் தங்களுக்குள்ளிருந்த யாவையும் மறந்து வஞ்சினத்தாலும், சூதினாலும், பொய்யாலும், கஷ்டப்படா சோம்பலாலும் பொருளைச் சம்பாதித்து சீவிக்கும்படி ஆரம்பித்துக் கொண்டார்கள்.

ஆரியர்கள் சுறாபானமென்னும் மயக்கவஸ்துவை அருந்தி மாமிஷங்களைச் சுட்டுத்தின்று பௌத்தர்களால் மிலேச்சரென்னும் பெயரும்