சமூகம் / 625
பெற்றவர்களாதலின் அவர்களை அடுத்த இத்தேசக்குடிகளும் மதுமாமிஷம் அருந்தி மதோன்மத்தராகும் வழிகளுக்குள்ளாகிவிட்டார்கள். ஆரியர்களின் பிராமணவேஷங்கண்டு இத்தேசத்து ஆந்திரர்கள் பிராமணவேஷங்கொள்ளவும் ஆந்திரர்களைக்கண்டு மராஷ்டகர்கள் பிராமணவேஷங்கொள்ளவும், கன்னடர்களைக்கண்டு திராவிடர்கள் பிராமண வேஷங்கொள்ளவும் ஆகிய மாறுபாடுகளால் ஒருவருக்கொருவர் ஒற்றுமெயற்றும், கொள்ளல் கொடுக்கலற்றும், உண்பினம் உடுப்பினமற்றும், ஒருவரைக்கண்டால் ஒருவர் சீறும் வேஷப்பிராமணப் பிரிவினை விரோதங்கள் போதாது, தொழிற்பெயர்கள் யாவையும் சாதிப்பெயர்களாக மாற்றி வித்தியா விரோதங்களாலும், விவசாய விரோதங்களினாலும் ஒன்றுக்கொன்று சேராததினாலும், ஒருவர் வித்தையை மற்றவர்களுக்குக் கற்பிக்காததினாலும் பலவகைப் பிரிவினைகளும் ஒற்றுமெய்க் கேடுகளும் உண்டாகி பௌத்தசங்கங்கள் அழியவும், பௌத்த தன்மங்கள் மாறுபடவும், பௌத்ததன்மத்தை சிரமேற்கொண்டு நீதிநெறி ஒழுக்கத்தினின்ற மேன்மக்கள் இழிந்த சாதியோர்களென்று தாழ்த்தப்படவும், நாணமற்ற வாழ்க்கையிலும், ஒழுக்கமற்றச் செயலிலும், காருண்யமற்றபுசிப்பிலும், பேராசை மிக்க விருப்பிலும் மிகுத்த மிலேச்சக் கீழ்மக்கள் உயர்ந்த சாதிகளென்று ஏற்படவுமாகிவிட்டபடியால் இந்திரரது தேசசிறப்புங் குன்றி ஒற்றுமெய்க் கெட்டு வித்தைகளும் பாழடைந்துவருங்கால் இத்தேசக் குடிகள் இன்னுங் கெட்டுப் பாழடைவதற்கும் வேஷப்பிராமணர்கள் விருத்தி பெருவதற்கும் கல்லுகளைக் கடவுளெனத் தொழுது கற்ற வித்தைகள் யாவையும் மறந்து கற்சிலைகளே தங்களுக்கு மோட்சம் கொடுக்கும், கற்சிலைகளே தங்களுக்கு சீவனங்கொடுக்கும், கற்சிலைகளே தங்கள் பிணிகளைப் போக்குமென்னும் அவிவேக நம்பிக்கையில் நிலைத்து இன்னும் அவிவேகிகளாவதற்கு மற்றுமோர் தந்திரஞ் செய்ததாக அஸ்வகோஷரே வரைந்திருக்கின்றார்.
அவை யாவெனில், சோணாட்டில் ஓர் சிலாலயங் கட்டி குழவிபோற் கல்லிலடித்து மத்தியரந்தனமிட்டு கட்டிடமேற்பரப்பில் தொளாந்திரங்கட்டி அதனுள் நீர்வார்த்தால் குழவி போன்ற கல்லிலுள்ள ரந்திரத்தின் வழியாக வெளி தோன்றும்படி செய்து இனிப்பும், வாசனையும், பொருந்திய ரசங்கூட்டி தொளாந்திரத்தில் வார்த்து குடிகளை நோக்கி, இதோபாருங்கள் சுவாமியின் சிரசினின்று அமுதம் வடிகின்றது. அவற்றைப் புசிப்பீர்களாயின் உங்கள் தேகத்தில் வியாதியற்று வாழ்வதுடன் சகல வசிகரமுண்டாகி எங்கு சென்றாலும் சுகம்பெற்று வாழ்வீர்கள். நீங்கள் கேட்ட யாவுங் கிட்டும், சுருக்கத்தில் மோட்சமும் பெறுவீர்களென்று கூறியவுடன் கல்வியற்றக் குடிகளுக்கு தளத்தின்மீதே தொளாந்திரத்தினின்று இனிய நீர் வரும் உபாயந்தெரியாது அவ்வுருசியாய நீரை அருந்தினோர் யாவரும் அதன் இனிப்பான ருசியைக் கண்டும் அவையெக்காலும் வடிந்துக்கொண்டேயிருக்கும் ஆட்சரியத்தைக் கொண்டும் அங்குள்ளக் குடிகள் யாவரும் மயங்கி கற்சிலைகளில் யாவோ சிரேஷ்டமுள்ளதென்று கருதி மேலும் மேலுங் கல்லை பூசிக்கவும், விழுந்து விழுந்து தொழுவதற்கு ஆரம்பிக்கவுமாகிய அசத்தியச்செயலும், மூட பக்தியும் பெருகி தாங்களே கற்சிலைகளை உண்டு செய்ததுமல்லாமல் தாங்களே அதை மெய்க் கடவுளென்றும் நம்பி தொழுவதற்கும் ஆரம்பித்துக்கொண்டார்கள். ஆரியர்களோ காமியமுற்ற சிற்றரசர்களை தங்கள் வசமாக்கிக்கொண்டு தங்கள் வேஷப்பிராமணத்தை விருத்திசெய்துகொண்டதுபோல் நந்தனென்னும் அரசனையும் வஞ்சிக்க அவன் தேசத்தை நாடி, புருஷர்கள் பூணு நூலும் காவியுமுள்ள பிராமணவேஷ மணிந்தும், இஸ்திரீகள் தங்கள் சுயதேயத்தில் கால்செட்டையணிந்தவர்கள் இத்தேசத்தில் வந்து குடியேறி இத்தேசத்துப் பெண்கள் கட்டும் பிடவைகளைப் போல் கட்டிக்கொண்ட போதினும் அதைக் காற்செட்டைக்குப் பதிலாக கீழ்ப்பாச்சிட்டுக் கட்டிக்கொண்டு பெண்டுகளுடன் செல்லுங்கால் தங்களில் ஓர் மூப்பனைப் பல்லக்கிலேற்றிக்கொண்டு புனநாட்டிற்குக் கிழக்கே வாதவூரென்னும் தேசத்தை அரசாண்டுவந்த