சமூகம் / 631
தோரின் செயலும் எமக்கு விளங்காததினால் அவற்றை விளக்கவேண்டுமென்று வேண்டினான்.
உடனே நத்தனார் எழுந்து இராஜேந்திரா, அவைகள் யாவும் வடமொழியில் தெளிவாக வரைந்து வைத்திருக்கின்றார்கள். யாங்கள் யாவரும் தென்மொழிற் பழகிவிட்டபடியால் வடமொழியிலுள்ள பிராமணனென்னும் மொழிக்குத் தென்மொழியில் அந்தணனென்று வகுத்திருக்கின்றார்கள். அவ் வந்தணனென்னும் மொழியின் பெயரோவென்னில் காமக்குரோத லோபமற்று சாந்தம் நிறைந்து, தண்மெயுண்டாகி, சருவசீவர்கள்மீதும் கருணை கொண்டு, காக்கும் அறமிகுத்தோர்களையே அந்தணர்களென்று வகுத்திருக்கின்றார்கள். அத்தகையகுணசாதனன்கோடியில் ஒருவன் தோன்றுவதே மிக்க அரிதாம். இதுவே தென்புலத்தாராம் அந்தணர்களின் செயலென்னப்படும். ஆனால் வடமொழியிலுள்ள பிராமணனென்னும் பெயர் பெண் பிள்ளைகளென்னும் பெரும் பற்றற்று இருபிறப்பாளர்களாகி மறுபிறப்பற்று பிரமமணம் வீசும் பெரியோர்களுக்கே பிராமணர்களென்னும் பெயர் பொருந்துமேயன்றி ஜீவகாருண்ய மற்று சகல பற்றுக்களும் பெற்று, அன்பென்பதற்று தீராவஞ்ஞானமுற்று, வஞ்சகம் வெளிவீகம் பஞ்சைகள் யாவரையும் பிராமணர்களென்று சொல்லுவதற்காகாது. இவர்களோ பெண்டு பிள்ளைகளுடன் பிராமண வேஷமிட்டு பேதைமக்களைவஞ்சித்து பொருள்பறித்துத் தின்றுவருகின்றார்கள். இவர்களது கூட்டுறவையும் இவர்கள் இத்தேசத்திற் குடியேறிய காரணங்களையும், வங்கரால் முறியடிப்பட்டு, சிந்தூரல் நதிக்கரையோரமாக வந்துக் குடியேறி, குமானிடர்தேசம் வந்தடைந்து, யாசகசீவனத்தால் ஆரியக் கூத்தாடி பிச்சையேற்றுண்டு பிராமணவேஷமடைந்த வரலாறுகளையும் தெள்ளறத் தெளிந்துக்கொள்ளவேண்டுமாயின் பாண்டிமடத்தின் பூர்வமடாதிபர்களில் அஸ்வகோஷர் என்பவரும், வஜ்ஜிரசூதரென்பவரும் பொதியைச் சாரலிலிருக்கின்றார்கள் அவர்களுக்குப் பல்லக்கையும் வேவுகர்களையும் அனுப்பி வரவழைத்து இப்புருசீக தேசத்தோராம் ஆரியர்களின் பூர்வங்களை விசாரிப்பீர்களாயின் சருவ சங்கதிகளும் தெரிந்துக்கொள்ளுவீர்களென்று கூறியவுடன் அரசன் சந்தோஷித்து வேவுகர்களுக்கு வேண்டிய பொருளளித்து பல்லக்கு எடுத்து போய் பொதியைச்சாரலிலுள்ள பெரியோர்களை அழைத்துவரும்படி ஓலைச்சுருள் அளித்தான்.
வேவுகர்கள் ஓலைச்சுருளையும், பல்லக்கையும் எடுத்து பொதியைச் சாரலைச் சார்ந்து உத்தரமடத்தின் முகப்பில் வீற்றிருந்த பெரியோனாம் அஸ்வகோஷரைக் கண்டு வணங்கித் தாங்கள் கொண்டுசென்ற ஓலைச்சுருளை அவரிடங் கொடுத்தார்கள். அச்சுருளை வாங்கி வாசித்த அஸ்வகோஷர் எழுந்து அவ்விடமுள்ள தனது மாணாக்கர்களுக்குப் போதிக்கவேண்டிய போதனைகளை பூட்டிவிட்டு பல்லக்கிலேறி நந்தனது சபாமண்டபத்திற்கு வந்துசேர்ந்தார். அதனை உணர்ந்த அரசனும் அமைச்சர்களும் எதிர்நோக்கி வந்து அஸ்வகோஷரை வணங்கி அரசாசனம் ஈய்ந்து ஆயாசஞ்தீரச்செய்து சங்கதி யாவற்றையும் விளக்கி மறுநாள் காலையில் புருசீகர்களாம் ஆரியர்கள் யாவரையும் சபாமண்டபத்திற்கு வரும்படி யாக்கியாபித்தான். அரசன் உத்திரவின்படி மறுநாட் காலையில் ஆரியர்கள் யாவரும் வந்து கூடினார்கள். அஸ்வகோஷரும் சபாநாயகம் ஏற்றுக்கொண்டார். அப்பால் நந்தன் எழுந்து ஆரியர்களை நோக்கி ஐயா பெரியோர்களே, தாங்களும் தங்களுடன் வந்த பெண்களும் பிள்ளைகளுமாகிய தாங்கள் யாவரும் பிரமணர்களா, உங்களுக்கு பிராமணர்களென்னும் பெயர்வந்த காரணமென்னை, நீங்கள் எத்தேசத்தோர், இவ்விடம்வந்த காலமெவை, அவற்றை அநுபவக் காட்சியுட் பட விளக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டான்.
அதனைக் கேட்டிருந்த புருசீகர்கள் தங்களுக்கு பிராமணர்களென்னும் பெயர்வந்த காரணமறியாது பலருங்ககூடி வடமொழியை சரிவரப்பேசத் தெரியாமலும், தென்மொழியை சரிவரப் பேசத்தெரியாமலும் உளறுவதைக் கண்ட அஸ்வகோஷர் கையமர்த்தி ஆரியர்களே தங்களிவ்விடம் எப்போது