பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/684

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

636 / அயோத்திதாசர் சிந்தனைகள்


புல்லினின்று புழுக்களும், புழுக்களினின்று விட்டிலும் மாறி இரு பிறப்படைவதுபோல் சமணமுநிவர்கள் உபநயனமாம் ஞானக்கண் பெற்று உண்மெ யுணர்ந்து புளியம்பழம் போலும், ஓடுபோலும், உடல்வேறு உண்மெய் ஒளிவேறாகப் பரிநிருவாண மடைவதை ஓர் பிறப்பாகவும், தாயின் வயிற்றிற் பிறந்தபிறப்பை யோர் பிறப்பாகவுங் கொண்டு அவர்களை இருபிறப்பாளரென சமணமுநிவர்கள் கொண்டாடித் துதித்து வந்தார்கள்.

அதனது சிறந்த காட்சியோவெனில் மனிதன் தாய்வயிற்றிநின்று பிறந்து வளர்ந்து பல பற்றுக்களால் தீயச்செயலை வளர்த்து தீயச்செயலில் நிலைத்துவிடுவானாயின் தீராப்பிறவியிற் சுழன்று மாறிமாறி துக்கத்தையனுபவித்து வருபவனாவான்.

மனிதன் தாய்வயிற்றிநின்று பிறந்து வளர்ந்து பாசபந்த பற்றுக்களற்று நியாயச்செயலை வளர்த்து நியாயச்செயலாம் நன்மெய்க்கடைபிடிப்பானாயின் பற்றற்ற பலனால் புளியம்பழம் போலும் ஓடுபோலும் அந்தரங்கம் வேறு பயிரங்கம் வேறாக நிருவாணமடைவான். அத்தகைய நிருவாணமடைந்தோன் தேகத்தினின்று சுயம்பிரகாசமாக மாற்றிப் பிறக்க எண்ணுவானாயின் தன்மகாய ஒளி வுருவாய்ப் பரிநிருவாண மடைவான். அன்றுமுதல் மாறிமாறி பிறக்கும் பிறப்பின் துக்கமற்று சதாவிழிப்பில் நித்தியானந்த சுயம்புவாய் அகண்டத் துலாவுவான்;

இத்தகையாய்த் தாயின் வயிற்றினின்று பிறந்த பிறப்பொன்றும், ரூப காயத்தினின்று தன்மகாய ஒளியுருவாய் மாற்றிப் பிறந்த பிறப்பொன்றும் ஆகிய இருபிறப்படைந்தவர்களையே சமணமுநிவர்களும் உபாசகர்களுந் துதித்துக் கொண்டாடுவது இயல்பாதலின் அதின் அந்தரங்கப் பிறப்பும் பயிரங்கப்பிறப்பும் இவ்வேஷப்பிராமணர்களுக்கு இன்னது இனியதென்றே விளங்கமாட்டாது. அவ்வகை விளங்காதிருப்பினும் கல்வியற்றக் குடிகளுக்கும் காமியமுற்ற சிற்றரசர்களுக்குத் தங்களை இருபிறப்பாளர்களென்றும் கூறி இப்பிறவியென்னும் மொழியையும் ஓராதரவாகக்கொண்டு பொருள் சம்பாதிக்கும் வழியைத் தேடிக்கொண்டார்கள்.

அதாவது, அறஹத்துக்கள் வகுத்துள்ள பிறவியின் ரகசியம் யாதெனில்; ரூபகாயத்தின்படி ஓர் மனிதன் தன்னை மறந்து தூங்கி விழிப்பதே பிறப்பு. தன்மகாயத்தின்படி ஒன்றை எண்ணுவதே பிறப்பு, எண்ணி மறப்பதே இறப்பு இவ்விரண்டின் செயலே கர்மத்துக்கு ஈடாய பற்றினால் பிறப்புண்டாகி சமுத்திரத்தின் அலையானது தோன்றி தோன்றி கெடுவதுபோல கன்மத்தின் செயலே பற்றி மாளா பிறவியில் தோன்றிதோன்றி சுழல்காற்றில் அகப்பட்ட செத்தைபோல் சுற்றி சுற்றி மாளா துக்கத்திற் சுழன்றுதிரிகிறதென்றும் பாசபந்தப் பற்றானது பெருங்கடலுக்கொப்பாயதென்றும் பாசபந்தக் கடலுள் ஆழ்ந்திருக்குமளவும் பிறவியின் பெருந்துக்கமானது விடாது தொடர்ந்தே நிற்குமென்றும்; அவ்வாசாபாச கன்மபந்தப் பற்றுக்களை பற்றாது அறுத்துவிடுதலே நிருவாணமென்றும், அந்நிருவாணமே பிறவியற்ற முத்திப்பேறென்றும், அம்முத்திப்பேறே சதானந்த தன்மகாயமென்றும், அதுவே இரவுபகலற்ற ஒளியென்றும் தங்கள் தங்களனுபவத்திற்குங் காட்சிக்கும் பொருந்த வரைந்து வைத்துள்ளார்கள்.

அத்தகைய பிறவியினாலுண்டாந் துக்கமும் அப்பிறவியை அறுத்தலினால் உண்டாம் சுகமும் இவ்வேஷ பிராமணர்களுக்கு விளங்கவேமாட்டாது. அவ்வகை விளங்காவிடினும் கல்வியற்றக் குடிகள் இவர்களை அடுத்து பிறவியை அறுக்க வேண்டுமென்று பெரியோர்கள் கூறுகின்றார்களே அதன் வழி எவ்வகை என்று கேட்பார்களாயின் உன் தந்தை இறந்த திதியை அறிந்து வைத்துக்கொண்டு அத்திதி வருங்காலங்களில் எல்லாம் எங்களையொத்த பிராமணர்களுக்கு அரிசி பருப்பு, ஐங்காயம், நெய், வேஷ்ட்டி புடவை, குடை, பாதரட்சை , தட்சணை, தாம்பூலங் கொடுத்துவருவீர்களானால் இறந்த உன் தந்தையே வந்து பிண்டப்பிரசாதம் பெற்றுப் போவான். இவ்வகையாக சிலகாலம் பெற்றுப் போவானாயின் திரவிய சம்மந்தனாகப் பிறப்பான். இதுபோல்