பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/691

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 643

சீரழிந்துவருவதையுங் கண்டு மனஞ்சகியாது இம்மிலேச்சர்களைக் கண்டயிடங்களிலெல்லாம் அடித்துத் துரத்துவதே பெளத்ததர்மக் கூட்டத்துள் விவேகமிகுத்தவர்களின் செயலாயிருக்கின்றது.

இவ்வாரியரென்னும் மிலேச்சர்களோ தங்களை உயர்ந்த சாதி பிராமணர்களென வேஷமிட்டு தங்களது பொய்ப்போதகங்களுக்குட்பட்ட கல்வியற்றக் குடிகளையும் காமியமுற்ற சிற்றரசர்களையும் வசப்படுத்திக்கொண்டு தங்களது பொய்ப் போதகங்களுக்குப் பராயரானவர்களும், எதிரடையானவர்களும், பொய் வேஷங்களை சகலருக்கும் பறைகிறவர்களுமான பெளத்ததன்ம விவேகிகளைத்தாழ்ந்த சாதிப் பறையர்களெனக் கூறி தங்களை அடுத்தவர்களுக்குங் கற்பித்து அவர்களைத் தலையெடுக்கவிடாமல் நசிக்கத்தக்க ஏதுக்களைத் தேடிக்கொண்டு தங்களது பொய்பிராமணவேஷங்களையும், பொய்ப் போதகங்களையும் கல்வியற்றக் குடிகளிடம் வலுபெறச் செய்துவருகின்றவர்கள் உம்மெயும் உமது அரசாட்சியையும், உமது தேசக் குடிகளையுந் தங்களது பொய்வேஷங்களால் வசப்படுத்திக்கொண்டு பெளத்த தன்மங்களை அழிப்பதுடன் பௌத்தர்களைத் தாழ்ந்த சாதிப் பறையர்களெனத் தாழ்த்திப் பாழ்ப்படுத்துவதற்கு வந்திருக்கின்றார்கள்.

நீவிர் இவர்களது பொய்வேஷங்களுக்கும், பொய்ப்போதகங்களுக்கும் உட்படாது விசாரிணையில் ஏற்பட்டதுபோல் மற்றய இத்தேச அரசர்களும் விசாரிணையால் தெளிந்திருப்பார்களாயின் நெடுங்காலங்களுக்கு முன்பே இப்பிராமண வேஷத்தை விடுத்து தங்கள் சுயதேசத்திற்போய் சேர்ந்திருப்பார்கள். தங்களைப்போன்ற இத்தகைய விசாரிணை யிராது மற்றுமுள்ள அரசர்கள் இப்புருசீகரது ஆரியக் கூத்திற்கும் பிராமண வேஷத்திற்கும் உட்பட்டு அவர்களது போதனைகளை நம்பி மோசம் போனபடியால் பலதேசங்களிலுமுள்ள பெளத்த தன்மங்களும் அழிந்து பௌத்தர்களுந் தாழ்ந்த சாதிப் பறையர்களென நிலைகுலைந்து வருகின்றார்கள்.

தாங்கள் இவர்களது பொய்ப்பிராமண வேஷங்களையும், பொய்ப் போதகங்களையும் நம்பாது அவர்களையும் விரோதித்துக் கொள்ளாது யாசகமாகக் கேழ்க்கும் பொருட்களை ஏதேனு மீய்ந்து உமது தேசத்தைவிட்டு அப்புறப்படுத்தும்படியான ஏதுவைத்தேட வேண்டியது. அங்ஙனமின்றி விஷப்பூச்சுகளை அடிமடியிற் கட்டிவைத்திருப்பது போல் இம்மிலேச்சர்களை உமது நாட்டிற் குடிக்கொள்ளவைத்து விடுவீராயின் அவர்கள் பொய்யைச் சொல்லி வஞ்சிக்கும் செயல்கள் யாவற்றிற்கும் நீர் பொருளளித்து போஷித்துவருவீராயின் தங்களையுத் தங்களரசையும் மிக்கக் கொண்டாடி பொருள் சம்பாதிக்கும் ஏதுவில் நிற்பார்கள். அவ்வகைப் பொருளளிக்காமலும் அவர்களை மதியாமலும் அவர்கள் வார்த்தைகளை நம்பாமலும் இருந்து விடுவீராயின் எவ்விதத் தந்திரத்தினாலும் உமதரசைப் பாழ்படுத்தி உம்மெயுங்கெடுத்து ஊரைவிட்டோட்டும் வழியைத் தேடிவிடுவார்கள்.

இவ்வகையாகவே சிற்சில அரசர்களைக் கொன்றும் பௌத்ததன்மப் பள்ளிகளில் சிலதை அழித்தும், சில அறப்பள்ளிகளை மாறுபடுத்தியும் அவ்விடமிருந்த சமணமுநிவர்களையும் அகலவைத்து பொருள்வரவுள்ள இடங்களில் தாங்கள் நிலைத்தும் பொருள்வரவில்லாப் பள்ளிகளை நாசப்படுத்தியும் வந்திருக்கின்றார்களென மிலேச்சர்களின் பொய்க்குரு வேஷங்களையும், வஞ்சகக்கூத்துகளையும், கருணையற்ற செயல்களையும், நாணமற்ற உலாவலையும் நந்தனுக்கு விளக்கிக்காட்டிவிட்டு அஸ்வகோஷர் பெளத்தபீட பொதியையைச் சேர்ந்தவுடன் நந்தன் தனது வேவுகர்களைத் தருவித்து சிந்தூரல் நதியின் குறிப்பும், புருசீக நாட்டின் எல்லையும் எவ்விடம் இருக்கின்றதென்றும், எவ்வழியேகில் சுருக்கமாகக் கண்டுபிடிக்கலாமென்றும் தெரிந்துவரும் படி ஆக்கியாபித்ததின்பேரில் வேவுகர்கள் சென்றிருப்பதை மிலேச்சர்களாம் ஆரியர்களறிந்து ஒ, ஓ, ஏது நம்முடையதேசத்திற்குச் சென்று அவ்விடமுள்ளவர்களால் நமது மித்திரபேதங்களை அறிந்து இவ்விடமுள்ள சிற்றரசர்களெல்லோருக்கும் தெரிவித்து விடுவார்களானால் நம்முடைய பிராமண