644 / அயோத்திதாசர் சிந்தனைகள்
வேஷத்திற்கு பங்கமுண்டாமென்றெண்ணி, நந்தன் அரண்மனைக்கு மேற்கே அரைக்காத வழியிலுள்ள ஓர்க்காட்டில் மண்மேட்டை தகர்த்து அதன் மத்தியில் கற்றூண்கள் அமைத்துப் பழயக் கட்டிடம் உள்ளதுபோற்பரப்பி மத்தியில் சிதம்பச் சூத்திரம் நாட்டிவிட்டு ஒன்றுமறியாதவர்கள்போல் அரசனிடம் ஓடிவந்து அரசே நாங்கள் ஏதோ இத்தேசத்தில் பிராமணவேஷமணிந்து சிலாலயங்களைக் கட்டி குடிகளுக்குப் பொய்யைச் சொல்லி பொருள்பறித்துத் தின்பதாய் ஓர் பெரியவர் சொல்லிக்கொண்டுவந்த வார்த்தைகளைத் தாங்கள் எவ்வளவும் நம்பவேண்டாமென்று கோருகிறோம். காரணம் யாதென்பீரேல் தங்கள் அரண்மனைக்கு மேற்க்கே வோர்க் காட்டிலுள்ள மண்மேட்டை வெட்டி வீடு கட்டுவதற்காக மண்ணெடுக்கும்போது அதனுள் சில கற்றளங்கள் தோற்றப்பட்டன. அதை முற்றிலும் பரித்து சோதிக்குமளவில் பழயக் கட்டிடங்களும் அதனுட் கற்சிலைகளும் அமைக்கப்பெற்றிருப்பதை அறிந்த யாங்கள் அதிசயமுற்று தங்களுக்குத் தெரிவிக்கவந்தோமென்று கூறினார்கள். அவற்றைக் கேட்ட அரசன் திடுக்கிட்டு நம்முடைய தேசத்துள்ளும் சிலாலயங்கள் இருக்கின்றதாவென்று ஆச்சரியமுடையவனாய் வேவுகர்களை அழைத்து பரிக்கு சேணமிட்டு வரச்செய்து அதன்மீதேறி புருசீகர்களையும் அழைத்துக்கொண்டு காட்டிலுள்ள மண்மேட்டை அணுகி கல்லுகள் விழுந்துகிடக்கும் இடத்தில் இறங்கி சற்று நிதானித்து அரசனாகையால் துணிகரமுண்டாகி அருகிற்சென்று சூத்திரப் பாவையிற் கால்களை வைத்தவுடன் திடீலென்று கல்லுக்குக்கல் மோதவும், நந்தனது தலைக் கீழாகவும், கால்மேலாகவும் நசிய சிதம்பித்துக் கொன்றுவிட்டது. உடனே வஞ்சநெஞ்சமிலேச்சர்களாகிய ஆரியர்கள் ஊருக்கு சென்று குடிகளெல்லோரையுங்ககூவி, பார்த்தீர்களா, நந்தன் எவ்வளவு பக்தி உடையவனாயிருந்தான், சுவாமி அவன்மீது மிக்கப் பிரீதியுடையவராகி விழுங்கிவிட்டார்; பாதங்கள்மட்டிலுந் தெரிகிறதென்று காண்பித்தவுடன் ஒவ்வொருவரும் பயந்து தூர விலகிநிற்குங்கால் அறப்பள்ளிகளாம் மடங்களில் தங்கியிருந்த சமணமுநிவர்களும், மற்றுமுள்ளோரும் அவ்விடம் ஓடிவந்து பார்த்து ஆ! ஆ! இம்மிலேச்சர்களாகிய ஆரியர் சிதம்பக்கல்லை நாட்டி நந்தனைக் கொன்றுவிட்டார்களென்றறிந்து துக்கிக்குங்கால், புருசீகர்கள் நந்தனை சுவாமி விழுங்கிவிட்டார், விழுங்கிவிட்டா ரென்று கொண்டாடி குதிப்பதை யறிந்த வுபாசகர்களுக்குக் கோபமீண்டு பலவாரடித்து சிலரைக் கொன்றது போக மீதமுள்ளோர் தங்களுடையப் பொய் வேஷங்களையும் பொய்ப் போதகங்களையும் மெய்யென நம்பி மோசம் போயுள்ள தஞ்சை வாணோவென்னும் அரசனை அணுகி அவனிடம் பெரும் பொய்யைச் சொல்ல ஆரம்பித்துக் கொண்டார்கள்.
அவை யாதெனில், அரசே யாங்கள் சிலகாலத்திற்கு முன்பு தங்களுடைய நாட்டிற்கு வடகிழக்கே அரசாண்டுவந்த நந்தனென்னும் அரசனை யடுத்து அவருடைய பூமியிலுள்ள ஓர் மண்மேட்டை வெட்டும்போது பழய ஆலயமொன்று காணப்பட்டது. அவற்றை முற்றிலுஞ் சோதித்து அரசனிடம் சென்று தெரிவித்ததினால் அவரும் மிகுந்த ஆவலுடன் வந்து ஆலயத்துள் நுழைந்து சுவாமி தெரிசனஞ்செய்து ஆனந்தமாக நிற்குங்கால் சுவாமிக்கு அவர்மீது மிக்க அன்புண்டாகி தாங்களெல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவரை அடுத்து விழுங்கிவிட்டார். அச்சங்கதிகளைக் குடிகளுக்குத் தெரிவித்ததின் பேரில் அவர்களும் ஆனந்தமாக வந்து சுவாமியை தியானித்துக் கொண்டிருக்குஞ் சமயத்தில் பறையர்களென்னுந் தாழ்ந்த சாதி கூட்டத்தோர் நந்தனுடைய தேசத்தை அபகரித்துக்கொள்ள வேண்டுமென்னும் ஆசையால் அரசனை அடுத்திருந்த பிராமணர்களாகிய எங்களை அடித்துத் துரத்திக் கொண்டுவருகின்றார்கள்.
காரணம் யாதெனில், அத்தேசம் நீர்வளம், நிலவளம் நிறைந்த விசேஷித்த நஞ்சைபூமிகளுள்ளதும், சுவாமி ஆவாகனஞ் செய்துகொண்ட நந்தனுக்கு வேறு சந்ததிக ளில்லாததுமே காரணமாகும். அது கண்டு இந்த பறையர்