சமூகம் / 667
பற்றற்ற நிலையாம் அநித்திய, அனாத்துமன், நிருவாணமடையும் வரையில் வழங்கிவந்திருக்கின்றார்கள். பஞ்சஸ்கந்தங்க ளமைந்த புருஷனே ஆன்மன், ஆன்மனே புருஷனென்றுணராதும் அதனந்தரார்த்தம் அறியாதும் தேகத்தினுள் பரமாத்துமனென்றும், சீவாத்துமனென்றும், இரண்டிருக்கின்றதாகவும், அவைகளே தேகத்தை ஆட்டிவைக்கின்றதென்றும் தாங்கள் மங்கிக்கெடுவதுடன் அவற்றை வாசிப்பவர்களுங் கெட்டு மயக்குறும்படி எழுதிவைத்துள்ளதுமன்றி அவற்றை எழுதியவர் யாவரென வரைந்துள்ளாரென்னில் உலகெங்கும் சுற்றி சத்தியதன்மத்தை விளக்கிய ஜகத்குருவாம் புத்தபிரானுக்குரிய சங்கமித்தர், சங்கதருமர், சங்க அறரென்னும் பெயரையே பேராதாரமாகக்கொண்டு வேஷப்பிராமணர்களுக்குள் வாட்டஞ்சாட்டமுடைய ஒருவனுக்கு நீண்டகுல்லா சாற்றி இவரே ஜகத்குரு, இவரே சங்கராச்சாரியெனக் கூறி வேண பொருள் பறித்துத் தின்றவர்கள் அக்கதாபுருஷ சங்கராச்சாரி ஒருவன் பிறந்து வளர்ந்து ஆன்ம போதத்தை வரைந்துள்ளானென்னும் ஓர் காரணமற்ற கற்பனாகதையை வரைந்துக் கொண்டு, கற்சிலைகளே சுகச்சீரளிக்கும் கற்சிலைகளே மோட்சமளிக்குமென நம்பாதவர்கள் இவ்வான்மபோதத்தை நம்பி ஜகத்குரு பரம்பரையோருக்குப் பொருளளித்து வரவேண்டுமென்னும் தங்கள் போதத்தை நிலைக்கச்செய்துகொண்டார்கள்.
இவற்றுள் நீலகண்ட சிவாச்சாரி கற்சிலைகளையே சிவமெனத் தொழவேண்டுமென்று ஓர்வகையும் இராமானுடாச்சாரி ஸ்ரீபாதத்தையும், சங்குசக்கிரத்தையுமே விட்டுணுவெனத் தொழவேண்டுமென மற்றோர்வகையும், ஆளில்லா சங்கராச்சாரியின் ஆத்மபோதம் ஓர்வகையும் உள்ளக் கிரீட்டினன் சரித்திர மற்று அவதாரப் புருஷக் கிருஷ்ணன் பகவத்கீதை ஓர் வகையுமாகப் பரவி புத்தபிரான் சத்தியதன்மம் மாறுபட்டுக்கொண்டேவந்துவிட்டது.
சத்தியதன்மம் மாறுபட்டு நிலைகுலையவும் அசத்தியதன்மம் பரவி நிலைநிற்கவுமாயக் காரணம் யாதெனில், பெளத்ததன்மம் கன்மத்தையே பீடமாக கொண்டதாதலின் தன்னை மற்றொருவன் பொய்யைச் சொல்லி வஞ்சிக்காதிருக்கப் பிரியமுள்ளவன் மற்றொருவனைப் பொய்யைச்சொல்லி வஞ்சிக்காதிருக்கவேண்டியது. தன்தேகத்தை மற்றொருவன் வருத்தி துன்பஞ் செய்யாதிருக்க எண்ணுகிறவன் அன்னியப்பிராணிகளைத் தான் துன்பஞ் செய்யாமலிருக்கவேண்டியது. தன்தாரத்தை அன்னியர் இச்சிக்காதிருக்க விரும்புகிறவன் அன்னியர் தாரத்தை தானிச்சிக்காதிருக்க வேண்டியது. தன் பொருளை அன்னியர் அபகரிக்காதிருக்க விரும்புகிறவன் அன்னியர் பொருளை தானபகரிக்காதிருத்தல் வேண்டும். எக்காலும் ஜாக்கிரத்திலும் நிதானத்திலுமிருக்கப் பிரியமுடையவன் மதியை மயக்கும் மதுவை அருந்தலாகாதென்று கூறி பெளத்தர் யாவரையும் நீதிநெறி ஒழுக்கமாம் நெருக்கபாதையில் நடந்து வாழ்க்கையிலிருக்கும்படி போதித்து வந்தார்கள். வேஷப் பிராமணர்களோவென்னில், தாங்களேற்படுத்திக் கொண்ட தெய்வங்களுக்கு இரண்டு பெண்சாதியென்றும், மூன்று பெண்சாதியென்றும், தங்கள் தெய்வங்களே அன்னியர் தாரங்களை இச்சித்ததென்றும் பொய்க் குருக்களாகிய தாங்களே உயிருடன் மாடுகளைச் சுட்டுத்தின்றவர்களும், உயிருடன் குதிரைகளை சுட்டுத் தின்றவர்களும், மயக்கத்தை உண்டு செய்து மதியைக் கெடுக்கும் சுராபானங்களை அருந்துகிறவர்களும் அன்னியர் பொருளை திருடித்தின்றவர்களுமாய்க் கூட்டத்தோர் நாளுக்குநாள் பெருகிவிட்டபடியால், புத்ததன்மத்தின் கடினமாய நீதிமார்க்க ஒடுக்கவழிகளுக்கு பயந்து தேச சீர்கேட்டிற்கும், மக்கள் சுகக்கேட்டிற்குமாய அநீதியாம் பெருவழியில் பிரவேசிக்க ஆரம்பித்துக் கொண்டார்கள்.
அதனால் புத்ததன்மம் நாளுக்குநாள் குறையவும், அபுத்ததன்மமாகியப் பொய்சமயங்களும், பொய்ச் சாமிகளும், பொய் போதகங்களும் பெருகி பொய்யிற்குப் பொய் மூட்டுக்கொடுத்து பொய்ப்புராணங்களை வரைந்து, பேதை மக்களாம் கல்வியற்றக் குடிகளை மயக்கி, தங்களை தேவிகளுக் கொப்பானவர்க ளென்றும் மற்றவர்கள் மநுமக்களே என்றும் அம்மனுக்களில்