பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24 / அயோத்திதாசர் சிந்தனைகள்


இத்தகைய உள் சீர்திருத்தங்களை நோக்காது புற சீர்திருத்தத்தில் நோக்கம் வைப்பார்களாயின் அமிதவாதிகளின் அக்கிரமத்தாலும் மிதவாதிகளின் மூர்க்கத்தாலும் முழுமோசமுண்டாய் சாதியுங் கெட்டு சங்கையுண்டாம்படி நேரிடும். அவ்வகை சங்கைகெட்டு சாதியைத்துலைப்பதைப் பார்க்கினும் அங்கங்குள்ள விவேகிகள் ஒன்றுகூடி ஒற்றுமெய் நாடி உழைப்பார்களாயின் ஊருஞ் சுகம் பெற்று பேரும் பிரபலமாவதுடன் நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தாரும் இத்தேசத்தோருக்கு இப்போதுதான் அறிவுண்டாயதென்று அறிந்து சுதேசியத்தையும் அளித்து சுகமடையச் செய்வார்கள்.

ஆதலின் தாழ்ந்த சாதியோருக்குத் தொழுக்கட்டையும் உயர்ந்த சாதியோருக்கு உழ்க்கார்ந்து தின்னும் பட்சபாத சட்டத்தைப் பறக்கப் போக்குங்கள். தாழ்ந்த சாதியாருக்கோர் சட்டம் என்பது நீதிமான்களுக்கு பொருந்துமோ, கறுப்பர்களுக்கு கறுப்பர்களே சட்டம் மாறுபடுத்திக் கொண்டால் வெள்ளையர்களுக்கும் கறுப்பர்களுக்குஞ் சட்டங்கள் மாறுபடாமற்போமோ.

உட்கார்ந்து தின்னுஞ் சோம்பேரிகளுக்கு ஊரை ஆளும்படியான ஆசையும், ஊராரைத் தாழ்ந்தவர்கள் என்று கூறித்தொழுக்கட்டைப் போடவேண்டும் என்னும் ஓசையுங் கொடுப்பவர்கள் வசம், தங்களுயிரையுந் தங்கள் பந்துமித்திரர்களுயிரையும் பறிகொடுத்து ஊரைக் கைப்பற்றியவர்கள் அவன்சாதி சின்னசாதி, என்சாதி பெரிய சாதி என்னும் அறிவிலார்வசம் தங்கள் கஷ்டார்ஜித சொத்தைக் கைநழுவவிட்டுப் போவர்களோ, கீழ்ச்சாதி மேற்சாதி என்னும் அக்கிரமக்காரர்கள் முன்பு தங்கள் கிராமத்தைக் காட்டுவரோ. உட்கார்ந்துதின்னுஞ் சோம்பேரிகளே, உயர்ந்தசாதி தாழ்ந்த சாதி சட்டங்களை வகுத்துக் கொள்ளும்போது உயிரைக் கொடுத்து ஊரைப்பிடித்தவர்களுக்கு வேறு சட்டம் இருக்காதோ.

இவைகள் யாவற்றையும் சீர்திருத்தக்காரர்கள் நன்காலோசித்து தாழ்ந்தவர்களுக்குத் தொழுக்கட்டையும் உயர்ந்தவர்களுக்கு உழ்க்கார்ந்து தின்னும் பட்சபாதசட்டம் உண்டு செய்வதை விலக்கி அவன் எச்சாதியோனாயிருந்தாலும் துஷ்டசெயலையுடையவனைத் தொழுவில் மாட்டவேண்டும் என்னும் பொதுச் சட்டத்தை நிலைநிறுத்தல் வேண்டும். அங்ஙனமின்றி இவர்கள் சுயப்பிரயோசனங் கருதி தாழ்ந்த சாதியோருக்குத் தொழுக்கட்டை என்னும் சட்டத்தை நிலைக்கச் செய்வார்களாயின் இங்குள்ள நாஷனல் காங்கிரஸ் கமிட்டியார் சுயப்பிரயோசன பெளஷையுஞ் சீர்மையிலுள்ள நாஷனல் காங்கிரஸ் கம்மிட்டியாரின் பெளஷையும் பறக்கத் தீட்டிக்காட்டுவோம்.

- 1:46; ஏப்ரல் 29, 1908 -


11. பதங்கெட்ட சோற்றுக்குப் பஞ்சமன் போவனோ

1908 ஆம் வருஷம் ஏப்பிரல்மீ 17உ சுக்கிரவாரம் வெளிவந்த “'சுதேசமித்திரன்” பத்திரிகையில் சத்தியவாசகனெனக் கையொப்பமிட்டு வரைந்துள்ளக் கடிதத்தைக் கண்டு மிக்க வியப்புற்றோம்.

அதாவது, சாதி ஆசாரங்களென்னும் அநாச்சாரக் கதைகள் யாவும் கட்டுக்கதைகளாம் பொய்யென்று வரைந்திருக்க இவர் சத்தியவாசகனென வெளிவந்து பொய்யைப் பலப்படுத்தும் பரிதாபத்தினாலேயாம். தற்காலத் தோன்றியிருக்குஞ் சுதேச சீர்திருத்தக்காரருள் இவரையே முதற்சீர்திருத்தக்காரராக ஏற்றுக் கொள்ளல் வேண்டும். ஏனென்பீரேல் பஞ்சமர்களுக்குப் பக்கத்து வோட்டல் வைக்க வேண்டும் என்பதினாலேயாம்.

அந்தோ பி.ஏ, எம்.ஏ. வாசித்த மேன்மக்களும் கலைக்ட்டர், ஜட்ஜிகள் முதலிய அந்தஸ்துள்ள உத்தியோகஸ்தர்களும் தங்கள் சுதேசிகளின் சோற்றுக் கடைகளில் சுத்தமில்லாமலும் பதார்த்தங்கள் சுவையில்லாமலும் இருப்பதைக் கண்டு நீக்கிவிட்டு பஞ்சமர்கள் சுத்தமாகவும் சுகமாகவுஞ் சுவையாகவும்