உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/756

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

708 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தோன்றாது, தனத்திலே எக்காலும் சுகவாழ்க்கைப் பெற்றிருப்பானாயின் தனகர்வம் அவனுக்குத் தோன்றாது, நீதியின் சம்மதத்தையே மதமெனக் கொண்டுள்ளவனாயின் மதகர்வம் அவனுக்குத் தோன்றாது, சகோதிர வொற்றுமெயும் சீவகாருண்யமும் உள்ளவனாயிருப்பானாயின் சாதிகர்வம் அவனுக்குத் தோன்றாது, அறியாவித்தையும் நூதனச்செல்வமும், அநீதிமதமும் தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொண்ட சாதிகளுமானதால் அதனதன் கர்வங்கள் விடாது தேசத்தையும் தேசமக்களையும் சீரழிப்பதுடன் தாங்களும் சீர்கெட்டே வருகின்றார்கள்.

இத்தியாதி கர்வங்கள் நீங்குமளவுந் தென்னிந்தியம் சுகச்சீர் பெறமாட்டாது என்பதே திண்ணம்.

- 6:45; ஏப்ரல் 15, 1913 -


45. மாடுகளால் மனிதர்களுக்குப் பிரயோசனம் உண்டாவதுபோல மனிதர்களால் மனிதர்களுக்குப் பிரயோசனம் உண்டோ

மாடுகளால் மனிதர்களடையும் பயன், ஓர் பசுமாடு வீட்டிலிருக்குமாயின் அதன் சாணத்தாற் பல செடிவகைகளுக்கு எருவாகிறதுடன் எரு வராட்டியுந் தட்டி அடுப்பிற்கு உபயோகப் படுத்துகின்றார்கள். அதன் பாலைக் கறந்து குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரையில் புசித்து சுகமடைகின்றார்கள். மற்றும் அதனால் உண்டாம் தயிர், மோர், நெய் முதலியவற்றால் இன்னுமனந்த சுகமடைந்தேவருகின்றார்கள். மக்கள் அப்பாவுக்குச் செய்யும் பிரதிபயனோ வைக்கோலை முன்னிற் போடுவதேயாம்.

எருதுகளோ ஏர் உழுவதற்கும், கவலை இறைப்பதற்கும், வண்டி இழுப்பதற்கும், மற்றும் மனுக்களுக்கு அனந்த உதவியாயிருப்பதுடன் பசுவும் எருதும் மரித்த போதினும் அதன் தோலின் உபயோகத்தை நாவிட்டு சொல்லுவதற்கில்லை. அத்தோலினால் மனிதர்களுக்கு உண்டாகும் பயன்களை எழுதவேண்டுமாயின் ஓர் புத்தகமாகிப்போம்.

மாடுகளால் மனிதர்கள் பலவகையான சுகச்சீரும் அடைந்து வருகின்றார்கள் என்பதை அநுபவத்திலுங் காட்சியிலுங் காணலாம். இதுபோல் மனிதர்களில் மனிதர்களுக்குப் பிரயோசனமுண்டோ என்பதை ஆராய்வோம். உலகத்திலுள்ள சகல தேசங்களிலும் மனிதர்களுக்கு மனிதர்கள் பிரயோசன முள்ளவர்களாகவே இருந்து சகலமக்களும் சுகவாழ்க்கையும் சுகசீவனமும் பெற்றே வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் தென்னியாவில் மட்டிலுமோ மனிதர்களை மனிதர்களாகப் பாவிக்காது ஒருவன் பிழைக்க நூறுமனிதரைக் கெடுப்பதும், ஒருவன் சீவனஞ்செய்ய நூறுபெயர் சீவனத்தைக் கெடுப்பதும், ஒருகுடி பிழைக்க நூறு குடிகளை பாழ்படுத்தி வருவோருமாகிய பஞ்சமா பாதகங்களே பெருகிக்கொண்டு வருகின்றபடியால் மனிதர்களால் மனிதர்களுக்கு சீர்கேடுகளும் வித்தியா மோசங்களும் விவசாய நாசங்களும் உண்டாகி தேசமும் தேசமக்களும் சீரழிவதற்கே ஏதுவாகிவிட்டது.

தேசத்தை சீர்திருத்தியும், தேசமக்களை நல்வழியிலாண்டும் சகல சுகச்சீரளித்துங் காத்துவரும் கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியின் துரை மக்களையே வெடிகுண்டு எறிந்தும் துப்பாக்கிகளால் சுட்டும் வஞ்சினங்களால் வதைத்துங் கொல்லும்படியான நன்றிகெட்ட படும்பாவிகள் வாசஞ்செய்யுந் தேசத்திலுள்ள மனிதர்களுக்கு மனிதர்கள் பிரயோசனப்படுவார்களோ. இத்தகையக் கடுஞ்சினமுற்று கருணையென்பது அற்றுள்ள ஓர் கூட்டத்தோரை மனித வகுப்போர் என்றும் அழைக்கப்போமோ, யதார்த்தத்தில் மனிதர்களாக இருப்பார்களாயின் தங்களையொத்த மனிதர்களுக்கே உபகாரிகளாக விளங்குவதுடன் மனுபிறவிக்குத் தாழ்ந்த சீவராசிகளுக்கும் உதவியாயிருப்பார்கள்.

அங்ஙனம் மனுவுருவாகத் தோன்றினும் அவர்களுக்குள்ள மிலேச்ச குணமாம் பெறாமெயும் பற்கடிப்பும் வஞ்சினமும் அவர்களை விட்டகலாதுள்ளபடியால் மனிதர்களுக்கு உபகாரிகளாக விளங்காமல் அபகாரிகளாகவேயிருந்து, தம்மெ ஒத்த சகல மனிதர்களையுஞ் சீரழித்து தங்கள் சுகத்தை மட்டிலுமே