உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/768

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

720 / அயோத்திதாசர் சிந்தனைகள்


நூதனமதக் கோவில்களுக்கோ எட்டு நாளைய உற்சவம், பத்துநாளய உற்சவம், யானை ஏற்ற உற்சவம், குதிரை ஏற்ற உற்சவம், ரத உற்சவம், காளஸ்திரி உற்சவமென்னும் போக்குவருத்துக்கும் அதனதன் செலவுகளுக்கும் பீடமாகவும் ஆதரவாகவும் உதவியாகவும் நின்று விளங்குவதும் பிரிட்டிஷ் அருளேயாம். சாமிகளுக்குப் பாலபிஷேகஞ் செய்வதும், அன்னாபிஷேகஞ் செய்வதும், பஞ்சாமுர்தம் பெய்வதும், வடையபிஷேகஞ் செய்வதும், சுண்டலபிஷேகஞ் செய்வதும் இவைகள் யாவையும் சேர்த்துப்பார்த்து உருண்டை பிடித்து பாகம் போட்டுண்பதுமாகிய செயல்கள் யாவற்றின் பணவிருத்திக்கே ஆதாரபீடமாக விளங்குவதும் பிரிட்டிஷ் அருளேயாம்.

ஈதன்றி நூதனமாயப் பெரிய பெரிய சாதிவேஷக்காரராலும் பெரிய பெரிய மதக்கோஷக்காரராலும் இத்தேசத்திற்கு யாதாமோர் சீர்திருத்தமேனும் சுகாதாரமேனுங் கிடையாதென்றே துணிந்து கூறுவோம். நூதன சாதித்தலைவர்களால் இத்தேசத் தோருக்குண்டாய கேடுபாடுகள் யாதென்னிலோ, சகல பாஷைக்காரரும் ஒற்றுமெyற்றும் அன்புபாராட்டியும் சுகசீவிகளாக வாழ்ந்துவந்தவர்கள் யாவரும் ஒருவருக்கொருவர் ஒற்றுமெயற்றும் அன்புகெட்டும் அவன் பெரிய சாதி இவன் சின்ன சாதியென்னும் மானுஷீகச் செயலற்றும் பொறாமெயுற்றும் ஒருவனைக்கண்டால் மற்றொருவன் சீறிச் சினந்துக் கடிக்குஞ் செயலே விருத்தி பெற்று வந்தபடியால் ஒருவர் கற்றுள்ள வித்தைகளை மற்றவருக்குக் கற்பியாமலும் ஒருவர் கற்றுள்ள கல்வியை மற்றவருக்கு கற்பியாமலும் ஒருவர் கற்றுள்ள விவசாயத்தை மற்றவருணர்ந்து செய்யாமலும் பாழடையச்செய்ததே சாதி வேஷங்களின் பயனாம் நூதன மதங்களின் கேடுபாடுகளோ வென்னின் பாரதத்தைப் பரக்கப்படித்து துரோபதைக்கு கலியாணங் கட்டிவிடுவதே கல்வி விருத்தியென்றெண்ணி படிப்போருஞ் சோம்பேறி, கேட்போருஞ் சோம்பேறி யேங்கித்திரிவதோர் பயன். இராமாயணத்தைச் சிறக்கப் படித்து சீதைக்கும் ராமருக்குங் கலியாணங் கட்டிவிடுவதே வித்தியாவிருத்தியென்றெண்ணி படிப்போருஞ் சோம்பேறி கேட்போருஞ் சோம்பேறிக் கெட்டலைவதோர் பயன். பெரிய புராணத்தைப் பெருக்கப்படித்து முள்ளுச்செடிக்கு மோட்சங் கொடுப்பதையும் கழுதைக்கு மோட்சங்கொடுப்பதையும் உறுக்கக் கேட்டு ஆனந்திப்பதே விவசாய விருத்திபோலெண்ணி படிப்போருஞ் சோம்பேறி கேட்போருஞ் சோம்பேறி அறிவே கெட்டழிவதோர் பயன். இத்தகைய அறிவின் குறைவின் பயனாலும் சோம்பாற் செயலாலும் தங்கள் தங்கள் சாமிகள் இருட்டறையில் வெறுமனே வீற்றிருக்கிறார்கள், அவர்களை உற்சாகஞ் செய்யவேண்டுமென்று பத்துநாளய உச்சவஞ் செய்யப்பணம் வேண்டி புராணங்கேட்குஞ் சோம்பேறிகளை வஞ்சித்து பறித்து ஏஜன்ட்டுகள் இடுப்புக் கட்டிக்கொண்டு சாமிகளை வாகனங்களில் இருக்கக்கட்டி, சாத்துபடி செய், சாத்துபடி செய் என்று எடுப்பதற்கு ஆட்களை பிடிபிடி என்றும், தீவட்டி மத்தாப்பு புருசுகளைக் கொளுத்துங்கோள் என்றும், சாமிக்கு சரியான வெளிச்சமில்லை காஸ் லையிட்டுகள் போடுங்களென்று சுற்றி சுற்றி ஓடிவருவதே, டெல்லகிராப் வித்தை, போனகிராப் வித்தை, இரயில்வே வித்தை, டிராம்வே வித்தை, என்று எண்ணி விடிந்து வேலைக்குப் போகாமலும் விவசாயம் பாராமலும் வித்தை விரும்பாமலும் உறங்கிக் கிடப்பதோர் பயன். இத்தியாதி சோம்பலேறி பெரியாச்சாரியே பிச்சையிரந்து உண்பதைக் காணும் அவர்கள் சாதிமதத்தைத் தழுவிய மாணாக்கர்களுக்குஞ் சோம்பலேறி கொட்டை கட்டும் வித்தை, பட்டை பூசும் வித்தை, குடுமியில் பூமுடியும் வித்தை இடுப்பில் பட்டுகுட்டை கட்டும் வித்தை, காலில் கெச்சை கட்டும் வித்தை முதலியவற்றை பெருக்கிக்கொண்டு தம்பூரைக் கையிலேந்தி வீடுவீடாகச் சென்று, “இராமா யென்னைக் கையை விடலாமா” என்று பாடித்திரிவோனும், முருகாவுன்னைத் தேடித் தேடி முழிகளுருளுதே என்று பாடித்திரிவோனும் அவரவர்களுக்கு மேலும் மேலும் சோம்பலை ஊட்டிவிக்கும் பாவலர்களும் நாவலர்களும் சபாபிரசங்கிகளுந் தோன்றி அரோகரா போடுங்கோ, கோவிந்தோம்