பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/772

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

724 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தொழில் பெரியோர்களால் நிந்திக்கப்பட்டத் தொழில் என்றெழுதி விவசாய விருத்தியையே பாழ்படுத்தி விட்டதுபோல வைத்தியன் வீட்டில் அன்னம் புசிக்கப்படாது அவ்வகைப் புசிப்பது கூரைவீட்டிலிருந்து வடியும் நீரை அருந்துவதற்கு ஒக்குமெனத் தாழ்த்தி எழுதி வைத்திருக்கின்றார்கள். அதன் காரணமோ வென்னில் வைத்தியர் வீட்டு அன்னத்தைப் புசிக்கலாகாதென்றபோது அவ்வைத்தியர்களால் செய்யும் மருந்தையும் புசிக்கலாகாது என்பது கருத்தாம். நூதனசாதிவேஷத்தைப் பின்பற்றினோரும் மனுதர்ம சாஸ்திரத்தைக் கைக் கொண்டோரும் பலுகி பெருகிவிட்டார்கள். ஆதியில் பௌத்தர்களால் வைத்தியபாகம் ஆரம்பிக்கும் போதே சீவராசிகள் வியாதிகளால் படுந் துன்பங்களைக் கண்டு மனஞ் சகியாது கருணையும் பரோபகாரமுங் கொண்டே ஆரம்பித்தார்கள். வியாதியஸ்தரோ வைத்தியர்களை தெய்வம்போற் கருதி கண்டுள்ள வியாதியை எவ்வகையாலும் நீக்குவார்களென்னும் அவாவால் தேகத்தையே ஒப்புக்கொடுத்து வந்தார்கள். அதனால் வைத்திய சிறப்பு விருத்தியடையவும் மனுக்கூட்டங்கள் சுகம் பெறவுமாயிருந்தது. அத்தகைய கருணையும் பரோபகாரமாய தொழிலை, மனிதனை மனிதனாக பாவிக்காது மிருகங்களிலுந் தாழ்ச்சியாக நடத்தி வதைக்குங் கருணையற்ற நூதன சாதி வேஷக்காரர்கள் ஆரம்பிக்கும் எத்தனித்துக் கொண்டதால் வியாதியஸ்தனிடம் பணம் பறித்துக்கொண்டால் போதும் வியாதியஸ்தன் தேகம் எக்கேடு கெட்டாலுங் கெடட்டும் என்று வைத்தியஞ் செய்ய ஆரம்பித்துக்கொண்டார்கள். அதனால் உள்ள அரைக்கால்பாக வைத்தியமும் அழிவதற்கு ஏதுண்டாகிவிட்டது. அவை எவ்வகையிலென்னிலோ பூர்வ வைத்தியத் தொழிலை தற்கால நூதன சாதிவேஷக்காரர்கள் எடுத்துக் கொண்டு வைத்தியஞ் செய்ய ஆரம்பித்துக்கொண்டதில் அவர்களுக்கோ பூர்வ வைத்திய சாஸ்திர பாடங்களும் கிடையாது, பரம்பரையாய அநுபவமுங் கிடையாது, மூலிகைகளிலோ எந்தெந்த மூலிகைகள் உள்ளுக்குக் கொடுக்க கூடிய தென்றும் எந்தெந்த மூலிகைகள் மேலுக்குப் பூசுகிறதென்றும், பாஷாண வர்க்கங்களில் எவ்வெவ்வை உள்ளுக்குக் கொடுக்கக் கூடியவையென அவைகளின் முறிவுகளும் சுத்திகளும் எவ்வகையென்றும் உலோகங்களின் போக்குகள் எவையென்றும், உப்பினங்களின் குடோரங்களெவையென்றும், உபாசங்களின் கூட்டுரவு எவை, அவைகளின் சத்துரு மித்துருக்கள் எவையென்றும், மனிதர்களுக்குத் தோன்றும் வியாதிகளிலோ இது சாத்தியரோகம் அது அசாத்தியரோகம் என்றறியாமலும், சுரமென்றால் வாதசுரம் இருபத்திரண்டு, சிலேத்துமசுரம் இருபத்திரண்டு, பித்தசுரம் இருபதுவகையாகத் தோன்றுவதில் அவைகளை எச்சுரமென்றறியாமலும், மாமிஷத்தைபற்றிய வியாதிகளீ தீதென்றும் உதிரத்தைப் பற்றிய வியாதிகளீதீதென்றும், சருமத்தைப்பற்றிய வியாதிகளீதீதென்றும், வாயுவின் குணமெது பித்தத்தின் குணமெது கிலேத்துமத்தின் குணம் யாதென்றறியாமலும், நீர்க்குறி, மலக்குறி, முகக்குறி, நாடிக்குறி முதலியவைகளை தெளிவற கற்காமலும், இரண்டொருயெண்ணெயைக் காய்ச்சக் கற்றுக்கொண்டும், சில மாத்திரைகள் உருட்டக் கற்றுக்கொண்டும் தோற்பைகளில் சிற்சில இங்கிலீஷ் மருந்துகளையும் தமிழ் மருந்துகளையும் வைத்துக்கொண்டு வீடு வீடாகச் சென்று அதிகம் கற்ற வைத்தியர்களைப்போலும் மிக்க அநுபவிகளைப் போலும் பாடம் படித்து பணம் சம்பாதிப்பதற்கிதுவும் ஓர் வித்தையென வெளிதோன்றி கனவான்களுடைய வீடுகளிலும் ஏழைகளுடைய வீடுகளிலும் மருந்துகளைக் கொடுத்து வாயை வேகவைப்பவர்களும் வயிற்றை வேகவைப்பவர்களும் பேதி அதிகரிக்குமாயின் அதை நிறுத்த வழியறியாதவர்களும், மருந்தை கொடுத்து வியாதி அதிகரித்து விட்டால் பணம் வாங்குதற்கு அவசரமாகப் போனவர்கள் பின்பு தலை காட்டாது ஒளிகிறவர்களுமாய போலி வைத்தியர்களே மிக்கப் பெருகிவிட்டபடியால் தமிழ் வைத்தியத்தினால் அனந்த மனுக்களுக்கு சுகக்கேடுண்டாகின்றதென்று எண்ணி சில விவேகிகள் தோன்றி