பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 93

வீச்சினின் மின்போற்சிற்ற / மிகுதியான் முநிவன்விட்ட
மூச்சினிற் பிறந்து ரண்டு / மோகினி மாதராரு
நீச்சினி நிலைத்து நிற்கு / நீலமென் கொடி போல் நின்றார்.

இவ்விரண்டு பெண்களையும் அரசனிடம் கொண்டுபோய் அவர்களை விவாகஞ் செய்துக் கொள்ளும்படிக் கேட்டபோது அவற்றை மறுத்த விவரம்.

அரிச்சந்திரபுராணம் - சூழ்வினைகாண்டம்

கண்ணைவேண்டிலு மீகுவன் காக்கின்ற மண்ணைவேண்டிலும் வாழ்வுடனீகுவன் பண்ணைவேட்லன் செஞ்சொற்பறைக்குலப்
பெண்ணை வேண்டி லன் யானென்று பேசினான்.

என்னுடையக் கண்ணைக் கேட்டாலும் கொடுப்பேன், என் அரசாட்சியுடன் பூமிமுழுதிலுங் கேட்டாலுங் கொடுப்பேன், இப்பறைச்சிகளை வேண்டேனென்று கூறிய அரசனை இவ்விரு பெண்களும் அரசனது வெள்ளைக்குடையை மட்டிலும் கேட்டார்கள். தனது தேசத்தையே கொடுப்பேன் என்று சொன்ன அரசன் அவர்கள் கேட்ட குடையைக் கொடுக்காமல் துறத்திவிட்டான்.

அரிச்சந்திரபுராணம் - சூழ்வினைகாண்டம்

பழவழி யெழுதாநீதிப் / பானுவின் குலத்துவேந்தர்
வழிவழி வந்தகொற்றக் / கவிகையை வழங்கமாட்டேன்
விழிவிழி கண்டவேறு / கவிகையை விளம்பிலுங்கள்
மொழிவழி தருவேனென்று / மொழிந்தனன் மன்னர்கோமான்.

என் கண்ணைக் கேட்டாலும் கொடுப்பேன், என்தேசத்தைக் கேட்டாலும் கொடுப்பேன் என்று கூறிய அரசன் தேசத்தில் நாட்டியுள்ளக் குடையைக் கொடுக்காத விஷயத்தை வாக்குத் தவறு என்றும் பொய்மொழி என்றும் கூறாமல் பாப்பானுக்குக் கொடுப்பேன் என்று சொன்ன இல்லா திரவியத்திற்கு மட்டிலும் அரசன் இணையில்லா பாடுபடுகிறான்.

- 1:50; மே 27, 1908 –

இரண்டு கறுப்புப் பறைச்சிகள் கேட்டக்குடையைக் கொடுக்காத மன்னன் அந்தணனென்னும் விசுவாமித்திரனுக்கு தன்னுடைய தேசங், குடை, கொடி முதலியவையுங் கொடுத்து விட்டான்.

அரிச்சந்திரபுராணம் - சூழ்வினைகாண்டம்

அந்தணாளனை நோக்கிய வண்ணலும்
உந்த மக்களுரு எலன் வேண்டிலேன்
எந்த நாடு மிருநிதி குப்பையும்
தந்தனன் மொழி தப்புவதில்லையே.
குடைதந்தேனீள்கொடி தந்தேனென்குழுவாய்
படைதந்தேன ற்கனகத்திண்டேர் பரிதந்தேன்
தடைதந்தேனின் றடியேனே காத்தவனே நீ
விடை தந்தேகென்றடி மேற் பரவிவீழ்வானை.

அரிச்சந்திரன் தன்னுடைய நாடுநகரங்கள் யாவையும் அந்தணனுக்கு தாரைவார்த்துக்கொடுத்துவிட்டு வேற்று நகரை நாடிச்செல்லுங்கால் அரசாட்சியிலிருக்கும் போது யாகத்திற்குக் கொடுப்பேன் என்று சொன்னப் பொருளை அந்தணன் வந்து கேட்கும்போது நாடு நகரங்-குடை-கொடி தனதான்யம் யாவையும் கொடுத்து மனைவி மகவுடன் வெறுமனே சென்ற அரசன் திரவியங்கொடுப்பேன் என்று சொன்னவாக்கு தவிராமல் அத்திரவியத்தைக் கொடுப்பேன் என்று ஒப்புக்கொண்டானாம்.

யாதொருகாசுங் கையிலில்லாத அரசன் எவ்வளவு திரவியங் கொடுப்பதாக ஒப்புக்கொண்டான் என்றால் ஓர் யானையை நிறுத்தி அதன்மீதோர் மனிதன் நின்று கவண்கல் எறிந்து அக்கல் ஆகாயத்தில் எவ்வளவு உயரம் போகின்றதோ அவ்வளவு திரவியக் குவியல் கொடுப்பதாக ஒப்புக்கொண்டானாம்.

அரிச்சந்திரபுராணம் - நகர்நீங்கிய காண்டம்

உள்ளிய தீவினையனைத்துந் தனித்திருத்தி
வகைவகையே யுரைத்து நீபோய்