பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 95

அரிச்சந்திரபுராணம் ஏற்பட்ட விதமும் அதிலுள்ளக் கதைகளின் சாராம்சமும் நமதன்பர்கள் ஒவ்வொருவருக்கும் விளங்கிய போதினும் அதினந்தரார்த்தத்தை அவ்விடம் விளக்க வேண்டியவனாய் இருக்கின்றேன்.

அதாவது - இத்தேசத்திருந்த இந்திரவியார அதிபதிகளாகும் பிராமணர், அந்தணரெனக் கூறும் அறஹத்துக்கள் போல் வேஷமிட்டுக் கொண்டு கல்வியற்றக் குடிகளையும் காமியமுற்ற சிற்றரசரையும் அடுத்து தாங்கள் நூதனமாகக் கற்றுக்கொண்ட வடமொழி சுலோகங்களில் சிலதைக்கூறி, நாங்கள்தான் பிராமணர்கள், நாங்கள் தான் அந்தணர்கள் என்று மொழிந்து யாசகசீவனஞ் செய்துவந்தவர்களுக்கும், இத்தேசப் பூர்வக்குடிகளும் சாக்கைய வம்மிஷ வரிசையோரும் குருபரம்பரையோருமாகிய திராவிட பௌத்தர் களுக்கும், நேர்ந்துவந்த விரோதத்தினால் வேஷப்பிராமணர்கள் பூர்வக்குடிகளாம் பௌத்தர்களை பறையர்கள் என்றுத் தாழ்த்தியும் பலவகைத் துன்பங்களைச் செய்துவந்ததும் அல்லாமல் இப் பறையன் என்னும் பெயர் பரவவேண்டிய கட்டுக்கதைகளை ஏற்படுத்திக் கொண்டுவந்ததுமன்றி இவர்களை இழிந்தோர் என்று கூறி பலரும் அருவெறுக்கத்தக்க உபாயங்கள் செய்துவந்தவற்றை முன்பே விளக்கியிருக்கின்றோம். அவைகளைத் தழுவிய ஈதோர் கட்டுக்கதை என்பதை விசுவாமித்திரன் சரித்திரத்தால் வெள்ளென விளங்கிக்கொள்ளலாம்.

விசுவாமித்திரன் என்னும் அரசன் தனது தபோபலத்தால் பிராமணன் நிலையை அடைந்து தனது நாசியின் சுவாசத்தால் இரண்டு பெண்களை உற்பத்திச் செய்தானாம். இங்ஙனம் சுக்கில சுரோணிதமின்றி உற்பத்தியானதென்றால் விவேகிகள் ஏற்பதில்லை. அங்ஙனம் ஞானியாயதால் தனது சித்தினால் ஏற்படுத்தியிருக்கலாம் என்றேற்கினும் சிரேஷ்டமுற்ற ஞானியின் சுவாசத்தில் தோன்றியப் பெண்கள் இழிந்தகுலப் பறைச்சிகளாவரோ, நிறமுங் கறுப்புநிறம் வாய்க்குமோ.

இழிந்தகுலப் பறைச்சிகளாகவும் கறுப்புநிறப் பெண்களாகவுந் தோன்றியது எதார்த்தமாயின் இருபெண்களை ஈன்ற விசுவாமித்திரனும் பறையன் என்றோ. அப்பறையனை குருவாக வணங்கி நாடு நகரம் யாவையுந் தந்த அரிச்சந்திர அரசனும் பறையனன்றோ. அப்பறையனாகும் அரிச்சந்திரன் பின்னே சென்று வெட்டியானுக்கு விற்று அப்பணத்தைப் பறித்துக் கொண்ட வெள்ளியென்னும் அந்தணனும் பறையனன்றோ. இத்தியாதி உற்பவ தோற்றங்களை உணராமல் அற்பமதியால் பறையர்கள் என்னும் பெயரைப் பரவச்செய்தற்கும் அப்பெயரை ஏனையோர் இழிவாக மதித்தற்கும் இக்கட்டுக் கதை எழுதினார்கள் என்பதை எளிதில் அறிந்துக் கொள்ளலாம். அதுவுமின்றி பறைச்சிகள் கேட்டக் குடையைக் கொடுக்காமல் சாக்குபோக்குச் சொன்ன மன்னன் பார்ப்பான் கேட்டவுடன் கொடுத்துவிட்டது பரிசாமோ, பறையனென் போனை இழிவு கூறிவருதற்கும் பார்ப்பான் என்போனை உயர்த்தி தானமீதற்கும் ஈதோர் உபாயமாகும்.

கேட்டதைக் கொடுப்பேன் என்று கூறிய மன்னன் பறைச்சிகள் கேட்டக் குடையைக் கொடுக்காமல் விரட்டியது பொய்யன்று. பார்ப்பானுக்குக் கொடுப்பேன் என்று சொன்ன வாக்குத் தவறாமல் கொடுத்தது மெய்யேயாம். இத்தகைய மெய் பொய் வாக்கியத்தினும் பறைப்பொய்ப் பாப்பாரப்பொய், பறை மெய் பாப்பார மெய் இருக்கின்றாப்போல் தோன்றுகின்றது.

யாதென்பீரேல் இரு பறைச்சிகளுக்குக் கேட்டதைக் கொடுப்பேனென்று கூறி கொடாமல் விரட்டியதை பொய்யென ஏற்காமல் பாப்பானுக்குக் கொடுப்பேன் என்று சொல்லிக் கொடுத்ததை மெய்யென்று ஏற்பதினாலேயாம்.

பறையர்களை இழிந்தோர் என வகுத்துவிட்டபடியால் அவர்கள் மெய் மொழிகளும் இழிவடையும் போலும், வேஷப்பிராமணர்களை உயர்ந்தோரென்று வகுத்துவிட்டபடியால் அவர் மொழிவது பொய்மொழி யாயினும் உயர்ந்து போம்போலும்.

இத்தகைய உயர்வு தாழ்வினால் பறைச்சிகள் கோரிக்கையை மன்னன் ஏற்காமல் பாப்பான் சொல்லை ஏற்றிருக்கின்றான். அதுவுமன்றி தனதுதேசத்தை