பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 / அயோத்திதாசர் சிந்தனைகள்

விசுவாமித்திரனுக்கு தாரைவார்த்துவிட்டு வெளிநகரம் போகும்போது மறுபடியும் இந்நகருள் வரமாட்டேன் என்று உறுதி வாக்களித்த மன்னன் பின்னும் நகருள் வந்து சேர்ந்தான். இம்மொழி பொய்யாமெய்யா என்பதை அறிந்திலர்போலும். காரணம்:- மெய் என்பது இது பொய் என்பது இது என்னும் பேதம் இன்றி குடும்பிகளாகவும் பொருளாசை உள்ளவர்களாகவும் இருந்துக்கொண்டு தங்களைப் பிராமணர், பிராமணர் என்று பொய்சொல்லி கல்வியற்றர்களை வஞ்சித்து பொருள் பறிக்கப் பொய்யை மெய்யாகக் கூறித்திரிபவர்களாதலின் சாக்கையர் வம்மிஷ வரிசையோனும் புத்தபிரான் மூதாதையுமாகிய வீரவாகுச் சக்கிரவர்த்தியை சுடலைகாக்கும் பறையனென்று வகுத்து அப்பெயரைப் பரவச்செய்தற்கும் இழிவு கூறிவருவதற்கும் இவ்வரிச் சந்திரன் கட்டுக்கதையை ஏற்படுத்தினார்களன்றி பொய்மொழி யீதென்றும் மெய்மொழி யீதென்றும் உணர்ந்தியற்றினாரில்லை. மெய்யும் பொய்யு முணர்ந்தியற்றுவாரேல் வையகமுய்யும் நீதிநெறிகளைப் புகட்டி வாழ்வடையச் செய்வார்கள். அங்ஙனமின்றி பொய்யை மெய்யாகக் கூறி பேதையர்பால் பொருள் பறிப்போராதலின் சுவாசத்தால் வந்தபறைச்சிகள் கதையையும் சுடுகாட்டில் வாழும் பறையன் கதையையும் பரக்கத்தீட்டிப் பரவச் செய்யும் பொய் மூட்டையைக் கட்டி விட்டார்கள்.

இப்பொய் மூட்டையாம் அரிச்சந்திர புராணமானது வேஷப்பிராமணர் களுக்கு எதிரிகளாக நின்ற பௌத்தர்களை பறையர்களென்றழைத்து அப்பெயரைப் பரவச்செய்வதற்கும் அவர்களை இழிவடையச் செய்து பாழ்படுத்துவதற்கே இயற்றியுள்ளார் என்பது சத்தியம், சத்தியமேயாம்.

வேஷப்பிராமணர்களால் பறையனென்று தாழ்த்தப்பட்டவன் பதினாயிரம் பொன்படைத்தாலும் சுடுகாட்டில் காவலிருப்பதைவிட்டு நகருள் வரப்படாது என்பது அவர்கள் மநுதன்ம சாஸ்திர விதி.

இவற்றுள் புத்தபிரானுக்கு சங்க அறன் என்றும் சங்க மித்திரன் என்றும் சங்க தருமரென்றும் அனந்தம் பெயர்களுண்டு. இதிற் சங்கறரென்னும் புத்தரை சிந்திக்குஞ் சங்கத்தோர்களை சங்கரசாதிகள் என்று வகுத்து இவர்களே சுடலைக்காப்பவர்கள் என்று மநுநூலில் எழுதி வைத்திருக்கின்றார்கள். இக்கட்டுக்கதைகள் யாவும் பௌத்தர்களைப் பாழ்படுத்தி வேஷப்பிராமணத்தை விருத்தி செய்வதற்கேயாம். யாவரேனும் இவ்வரிச்சந்திரபுராணம் பொய்யன்று மெய் என்றே வெளி வருவாராயின் உள்ளப்பொய்கள் ஒவ்வொன்றையும் தெள்ளற விளக்கித் தீட்டிக்காட்டுவோம்.

- 1:52; சூன் 10, 1908 –

22. பிறவி சந்தேகிகாள் கேண்மின்

வினா : பதினெண்சித்தரில் ஒருவராகிய சிவவாக்கியர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவராகத் தோன்றிடினும் பௌத்தமதம் பிறப்புண்டென்று போதிக்கிறது. மேற்சொன்னபடி வாக்கியமோவெனில் பிறப்பில்லை எனக் கண்டிக்கிறபடியால் அதின் அந்தரார்த்தத்தை விளக்கவேணுமாய் கோறுகிறேன்.

ஜி.எம்., சாம்பியன் ரீப்ஸ்

விடை : பிறவிக்கடலைக்கடந்து நிருவாண சுகமடைவதற்கும் மாறாப்பிறவியில் சுழன்று துக்கமடைவதற்கும் அவரவர்களின் அவாக்களால் உண்டாகும் பற்றுக்களும் பற்றையறுத்தலுமே காரணமாகும்.

இடைக்காட்டு சித்தர்

பற்றேபிறப்புண்டாக்குந் தாண்டவக்கோனே
அதைப்பற்றாதறுத்து விடு தாண்டவக்கோனே.

என்று புத்தசங்கத்தோர் ஒவ்வொருவரும் அவாவாகியப் பற்றுக்களே பிறவிக்குக் காரணம் என்று கூறியிருக்கும் அந்தரார்த்தமும் கன்மச்செயலின் திரட்சியும் அறியா வேஷபிராமண மதச்சார்பினர் ஆத்துமாவென்பது ஒன்றுண்டு. அதுபோய் பிறவி எடுக்கின்றதென்றும் சிலர் அந்தந்த உருவங்கள்