பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அத்தகைய சிறப்புற்ற கட்டிடம் நானூறு ஐந்நூறு வருடங்களாக சமய சத்துருக்களால் தரைமட்டமாகி யாதுந் தெரியாமல் மறைந்து (சில வரிகள் தெளிவில்லை) வையும் வெட்டிப் பார்வையிட்டுக்கொண்டுவந்ததில் சென்றமாதம் சரியானப் பீடந்தோன்றி பகவனது அஸ்தியும், சாம்பலுங்கிடைக்கப்பெற்றதன்றி அவரைப்போன்ற சிலாரூபமும், கானிஷ்கா அரசனின் சிலாரூபமுங் கிடைக்கப்பெற்று சீனயாத்திரைக்காரர் சிலாசாசன வாக்கு சத்தியவாக் கென்றேற்பட்டது.

சத்திய சிலாசாசன ஆதரவால் புத்தரென்னும் ஓர் மனிதபுத்திரன் இருந்ததும் மெய், அவரால் போதித்துள்ள சத்திய தன்மங்களும் மெய் அவற்றை அநுஷ்டித்துவரும் சங்கங்களும் மெய்யென்று சகல விவேகிகளுக்கும் வெள்ளென விளங்கிற்று.

இத்தகைய சத்தியவிளக்கத்தால் உலகெங்குமுள்ள சத்திய தன்மப் பிரியர்கள் யாவரும் அவலோகிதர் அஸ்தி தோன்றிற்றென்றவுடன் அவரன்பார்ந்த தேகமே தோன்றிற்றென்றும் ஆனந்தத்தில் இருக்கின்றார்கள்.

ஏனென்பீரேல் தற்காலந்தோன்றியுள்ள மதஸ்தர்களின் கடவுளர் இட்சணமோ அவருக்கு உருவில்லை தோட்டத்தில் உலாவுவார், நாவில்லை பேசுவார், கண்ணில்லை, பார்ப்பாரென்று கூறுவோரும், தங்கள் மதம் அழிந்து போகின்றபடியால் அவதாரங்கள் எடுத்துவந்து அன்னியர் மதத்தையும், அன்னியரையும் அழித்து எங்கள் மதத்தை நிலைநிறுத்தினாரென்று கூறுவோரும், உங்கள் மதங்களைக் காப்பதற்கே உங்கள் கடவுள் அவதரிப்பது யதார்த்தமாயின் தற்காலந்தோன்றியுள்ள மகமதுமதம், கிறீஸ்து மத முதலிய நூதன மதங்களை அழிப்பதற்கு உங்கள் கடவுள் அவதாரம் எடுக்காமலிருக்குங் காரணம் என்னவெனில்:- மௌனஞ் சாதிப்பவர் களுமாகிய பொய்மதக் கற்பனா கதைகளினால் சகலமக்களைப்போல உலகத்திற் பிறந்து வளர்ந்து விவேக விருத்திப்பெற்று சகலதேச மக்களுக்கும் விவேகப் பெருக்கத்தின் வழிகாட்டிய ஜகத்தீசன் சரிதையையும் முன்போன்ற கற்பனா கதைகளென்றே சிலர் எண்ணியிருந்தார்கள். அத்தகைய சந்தேகிகள் யாவருக்கும் சித்தார்த்தி என்னும் மனுபுத்திரன் பிறந்து உலகத்தில் உலாவி மக்களை சீர்திருத்தியதும் மெய். அவரது தேகத்தை தகனஞ்செய்ததும் மெய்யென்னும் அவரது பூர்வ சரித்திரத்திற்கும், ஆயிரத்தி முன்னூறு வருடங்களுக்குமுன் சீன யாத்திரைக்காரர் வரைந்துள்ள சிலாசாசனத்திற்கும் பொருந்த பகவனது அஸ்தியும், சாம்பலுங்கிடைத்துள்ளபடியால் சகல பௌத்தசிகாமணிகளுந் தங்களது தன்மசரித்திரம் மெய் மெய் எக்காலும் மெய்யென்னுங் குதூகலத்தில் இருப்பதுடன் பிரம்மதேசவாசியாம் ஸ்ரீமதி தன்மத்தாயாகும் ஓரம்பாள் இலட்ச ரூபாய் உதவிபுரிந்து அவ்வஸ்தியையும், சாம்பலையும் தகுந்த கட்டிடங் கட்டி வைக்கவேண்டுமென்று கூறியிருக்கின்றாள் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோரும் அவற்றிற் கிணங்கி மற்றும் ஆலோசினைகளுக்கு எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

இத்தகைய மெய்க்காட்சி குதூகலத்தில் இத்தேசவாசிகளிற் சிலர் தங்களது பொய்க்காட்சியைப் போர்த்து மெய்யை முற்றும் மறைக்கப் பார்க்கின்றார்கள். அதாவது, பகவனது அஸ்தியையும், சாம்பலையும் வேறு தேசத்தோருக்கு அளிக்கப்போகாது அவர் விஷ்ணுவே அவதாரமாக வந்தவராதலின் இத் தேசத்துள் அவற்றை வைக்கவேண்டுமென்று கூச்சலிடுகின்றார்கள்.

பௌத்த கூட்டங்களை அழிப்பதற்கு விஷ்ணுவும், சிவனும் அவதாரம் எடுத்து வந்துள்ளாரென்று வரைந்து வைத்திருப்பதுடன் உத்திர மீ மாம்சை, தட்சண மீமாம்சை என்னுங் கற்பனைகளை வரைந்து வைத்துள்ளவர்கள் புத்தரை விஷ்ணு அவதாரமென்று கூறவந்த தென்னவிந்தையோ விளங்கவில்லை.

மெய் மெய்யென விளங்கும் சத்தியப் பெருஞ்சரித்திரத்துடன் தங்களது பொய்க் கதைகளையுஞ் சேர்த்து மெய்ப்பித்துக்கொள்ள வேண்டுமென்னும் நோக்கம் போலும்.

அத்தகைய விஷ்ணுவின் அவதாரம் உலகெங்குமுள்ள மக்களைக் கார்க்கவந்திருக்குமா அன்றேல் தென்னிந்தியாவில் நாமமிட்ட மக்களை மட்டுங்