பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 109

கார்க்க வந்திருக்குமா. உலகெங்குமுள்ள மக்களைக் கார்க்கவந்திருக்குமாயின் சகலதேச மக்களும் அவ்வஸ்தியைபாகித்துக் கொள்ளுவதுடன் தாங்களுஞ் சிறிது பாகம் பெற்று சிறப்பு செய்யலாகாதோ. புத்தரவர்கள் விஷ்ணுவின் அவதாரமாதலின் அவரது அஸ்தியை இந்துதேசத்துள்ளாகவே வைக்கவேண்டுமென்று கூறுவது கொண்டு விஷ்ணுவினவதாரம் தென்னிந்தியா வாசிகளுக்கென்றே தெளிவாக விளங்குகின்றது.

ஆனால் புத்தபிரானோ உலகெங்குமுள்ள மக்களுக்கு ஜகத்தீசனாகவும், ஜகத்குருவாகவும் விளங்கியுள்ள அநுபவக் காட்சியானது உலகெங்குமுள்ள மக்கள் ஜனத்தொகையில் அவரையே அரைக்கால்பாக மனுக்கள் பௌத்தர்களாக இருப்பதால் புத்தபிரானை விஷ்ணு வினவதாரமென்று கூறுவது வீண் வார்த்தையேயாம்.

மெய்யாகிய சரித்திர சாட்சியோடு பொய்யாகியப் பொடிகளைக் கலப்பது நமது தேசத்தையும், தேசத்தோரையும் பொய்யர்களாக்கிவிடும். ஆதலின் நமது அன்பர்கள் ஒவ்வொருவரும் பொய்சரித்திரங்கள் ஈதென்றும், மெய்சரித்திரங்கள் ஈதென்றும் ஆராய்ந்து பேசும்படி வேண்டுகிறோம்.

- 3:14; ஆகஸ்டு 15, 1909 –

34. மஞ்சள் உடுத்தி கரகம்

வினா: விவாஹ மாகுமுன் மணமகனுக்காகிலும், மணமகளுக்காகிலும் மஞ்சளாடை உடுத்திக் கரகம் ஜோடித்து சிரமேற்றி 7-ஊர் விளையாடுவதற்குப் பதிலாய் 7-தெருவாகிலுஞ் சுற்றும் வழக்கமிருக்கிறதே அதின் விஷயங்கள் இன்னதென்ன விளங்கவில்லை.

பி. கோவிந்தசாமி, சாம்பியன் ரீப்ஸ்.

விடை: பூர்வபௌத்தர்கள் தங்களுடையப் பிள்ளைகளில் யாதாமொருவர் கொடு வியாதியால் பீடிக்கப்படுங்கால் ஆண்பிள்ளைகளாயின் அவ்வியாதி நீங்கியவுடன் சிரமொட்டை அடித்து மஞ்சளாடை அணைந்து புருஷர் மடத்திற் சேர்ந்துவிடுவதும், பெண்பிள்ளையாயின் வியாதி நீங்கியவுடன் சிரமொட்டை அடித்து தாய்மாமனால் மஞ்சள் நூல்சரடு கழுத்தில் அணைந்து மஞ்சளாடை உடுத்தி இஸ்திரீகள் மடத்திற் சேர்த்துவிடுவதும் வழக்கமாகும்.

மடத்திற் சேர்க்க பிரியமில்லாத சிலர் தங்கட் பிள்ளைகள் வியாதி நீங்கி விவாக காரியம் நடத்துங்கால் பௌத்த பிக்ஷணி அம்பிகாதேவியை சிந்தித்து ஆண்பிள்ளையையேனும், பெண்பிள்ளையையேனும் மஞ்சளாடை உடுத்தி பூவாடைக்காரியாம் பிக்ஷணியின் கமலபாதத்தையே பூங்கரகமாக சிரசிலேந்தி புத்தபிரானது அஸ்தியை ஏழுவரசர்கள் கொண்டுபோய்க் கட்டிவைத்திருக்கும் ஏழு கோபுரங்களாகும் ஏழு மலையான் (டாகோபாக்) களை சுற்றி தெரிசித்து வருவதற்கு பதிலாய், ஏழு எல்லைகளையேனும், ஏழு வீதிகளையேனும் வலம் வந்து முகூர்த்தச்செயலை நடத்துவது வழக்கமாகும்.

- 3:16; செப்டம்பர் 29, 1909 -

35. ஆயுதபூசை

வினா: ஆயுதபூசை என்பதின் பொருளென்னை, அதனை நடாத்தும் விவரமென்னை, அதன் சரித்திரம் யாது

பாஷியம் நாயுடு, காஞ்சிபுரம்.

ஆயுதம் என்பதின் பொருள் மக்கள் ஆயுளை அதஞ்செய்யுங் கருவிகளுக்கு ஆட்கொல்லியென்றும், ஆயுதமென்றும் அவற்றை அணிந்த அரயனை ஆயுதபாணியென்றும், அஃதில்லா அரயனை நிராயுதபாணியென்றும் கூறுவது வழக்கமாம். ஆயுவை அதஞ்செய்யும் ஆயுதங்கள் வில், வாள், வேல், வாகு, பிண்டிபாலம், கதாயுதம், கோல், தடி, ஈட்டி முதலியவைகளேயாம். இத்தகைய ஆயுதங்களைப் பூசிக்குங் காரணம் பூர்வம் இப்பரதகண்டத்தில் கொண்டாடிவந்த மூன்று இஸ்திரீ தேவதைகளில் இருவரை துஷ்டதேவதை களாகவும், ஒருவளை சாந்ததேவதையாகவுங் கொண்டாடி வந்தார்கள்.