பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 123

சுபகாரியங்களென்னும் விவாக காலங்களில் நிறைவேற்றி வரும் தன் மகன்மக் கிரியைகள் யாவும் எந்த சரித்திரத்திற் கூறியுள்ளவை களென்றும், அக்கிரியைகளின் அந்தரார்த்தம் யாதென்றும் விசாரித்துணராமல் புத்ததருமம் நூதனமாகத் தோன்றிய தென்றும் பொய்மதப் போலி ஞானிகளால் அஃது அழிந்து விட்டதென்றும் பிதற்றித் திரியும் அன்பர்களுக்கு நமது விவாக காலங்களிற் செய்து வருங் கிரியைகள் யாவும் 1,500 வருஷங்களுக்குட்படத் தோன்றி நாளுக்குநாள் நசிந்துவரும் சைவமதம் வைணவமதமென்னும் இருமதச்செயல்களைத் தழுவிய தல்லவென்றும் பூர்வ புத்ததருமச் செயல்களைத் தழுவியதென்றும் உணர்வான்வேண்டி புத்ததரும அரசர்கள் செய்துவந்த விவாகக் கிரியைகளையும் தற்காலம் நாம் செய்துவரும் விவாகக் கிரியைகளையும் விளக்கி சாக்கைய புத்த சங்கத்தார் விவாக விளக்க நூலென வெளியிட்டிருக்கின்றோம்.

இவ்வரிய சுருக்கநூலை ஒவ்வோர் அன்பர்களும் பூர்த்தியாக வாசித்துணர்ந்து பூர்வ தன்மகன்மங்களை நிலைபெறச் செய்வதுடன் முடிவுரையிற் கூறுயுள்ளவைகளையும் பின்பற்றுவார்களாக.

பூர்வீக திராவிட புத்தசங்கத்தார்
மங்கல நிலை

மனைக்கு விளக்க மடவார் மடவார் / தமக்குத் தகைசால் புதல்வர் - மணைக்கினிய
காதற் புலவர்க்குக் கல்வியே கல்விக்கு / ஒதிற் புகழ்சா லுணர்வு.

மனைநிலை

மழையின்றி மானிலத்தார்க்கில்லை - மழையும் / தவமிலா னில்வழி யில்லை - தவமும்
அரசிலா னில்வழி யில்லை - அரசனும் / இல்வாழ்வா ளில்வழியில்.

உண்மெய்நிலை

அறிந்தானை ஏத்தி யறிவாங்கறிந்து / செறிந்தார்க்குச் செவ்வனுரைப்ப - சிறந்தார்
சிறந்தமெய் ஆராய்ந்து கொண்டு.

சாக்கைய சங்கத்தார் விவாக விளக்கம்

பூர்வகாலத்தில் வடயிந்தியம் தென்னிந்திய முழுமையும் அரசாண்டுவந்த புத்ததன்ம அரசர்கள் முதல் வணிகர் வேளாள ஈறாகும் முத்தொழிலாளருக்கும் கன்ம குருக்களாக விளங்கி தன்மகன்மக் கிரியைகளை நடத்திவந்தவர்கள் வள்ளுவர், சாக்கையர், நிமித்தகரென்னும் பூர்வக்குடிகளாம்.

முன்கலை நூல் திவாகரம்

வள்ளுவர் சாக்கைய ரெனும் பெயர் / மன்னர்க்குள் படு கருமத்தலைவர்க் கொக்கும்

பின்கலை நூல் நிகண்டு

வருநிமித்தகன் பேர் சாக்கை வள்ளுவனென்று மாகும்.

இத்தகைய தன்மகன்மப் பெயர்களைப் பெற்ற வகுப்பாருள் கலிவாகுச் சக்கிரவர்த்தி, வீரவாகுச் சக்கிரவர்த்தி, குலவாகுச் சக்கிரவர்த்தி , இட்சுவாகு சக்கிரவர்த்தி யெனுந் தலைத்தார் வேந்தர்களும் அரசர்களும் இருந்தார்கள். இத்தகைய சக்கிரவர்த்திகளின் வம்மிச வரிசையில் சித்தார்த்தி என்னுஞ் சக்கிரவர்த்தி திருமகன் தோன்றி நன்மெய் நிலையாகு உண்மெய் உணர்ந்து புத்தரெனும் பெயர்பெற்று உலக ரட்சகன் என்னும் சற்குருவாக விளங்கின படியால் அவர் வம்மிச வரிசையில் தோன்றிய அரசர்கள் யாவரையும் குருகுலத்தரசரென்றும், குருகுலக் கோமான்களென்றும், குருகுல மன்னரென்றும் வழங்கி வந்தார்கள்.

மணிமேகலை

சாக்கையராளுந் தலைத்தார்வேந்தன் / ஆக்கையுற்றுதித்தன னாங்கவன்றானென.

சூளாமணி

இன்னலன துயர் குலமு மிளமையு மிங்கிவன் வடிவுஞ் சொல்லவேண்டா
மன்னவன்றன் மடமகளே மற்றிவனுக் கிடமருங்கின் மஞ்சஞ் சேர்ந்து
பொன்னவிருமணியணைமேற்பொழிகதிரீண்டெழுந்தது போற்பொலிந்து தேன்றி
கொன்னவின்ற வேற்குமான் குரு குலத்தார்கோனிவனே கூறக்கேளாய்.