பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வீரசோழியம்

ஆவியனைத்துங் கசத நப மவ்வரியும்வவ்வி
லேவிய வெட்டும் யவ்வாறு ஞந்நான்கு மெல்லா வுலகு
மேவிய வெண்குடைச் செம்பியன் வீரராசேந்திரன்றன்
நாவியல் செந்தமிட் சொல்லின் மொழிமுத னன்னுதலே.

சிலப்பதிகாரம்

திங்கண் மாலை வெண்குடையான் சென்னி செங்கோலது வோச்சிக்
கங்கைதன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி.

சூளாமணி

கயந்தனைக் களிற்றினா யோர்க்கனாக்கண்டதுளதுகங்கு
னயந்தது தெரியினம்பி நளிகடல் வண்ணன் றன்னை
வியம்பகத் திழுந்துவந்தோர் வேழம்வெண் போது சேர்ந்த
தயங்கொளி மாலைசூட்டி தன்னிட மடைந்ததன்றே.
எல்லா விருது மீனும் பொழிலின
தெல்லா நிதியு மியன்ற விடத்தின
தெல்லா வமரர் கணமு மிராப்பக
லெல்லாப்புலமு நுகர்தற் கினிதே.

- 3:36; பிப்ரவரி 16, 1910 –


ஆர்த்த பல்லியக்குழா மதிர்ந்த குஞ்சரக்குழாந்
தேர்த்தவீரர் தேர்க்குழாம் திசைத்தபல் சனக்குழாம்
போர்த்த சாமரைக்குழாம் புதைத்த வெண் கொடிக்குழாம்
வேர்த்த வேந்தர் பல்குழாம் விரைந்த கூந்தன் மாக்குழாம்.

பூர்வ அரசர்கள் கொண்டாடிவந்த விருதுகளாகும் சின்னங்களை விடாது அவர்கள் வம்மிச வரிசையோர்கள் பராயமதஸ்தர்களால் நசுங்குண்டு எழிய நிலமையிலிருந்த போதிலும் தங்கள் விவாககாலங்களில் பூர்வ சின்னங்களை மறவாது, வெள்ளைக் குதிரை, வெள்ளைக் குடை, வெண்ணங்கி, வெண்பிறைமுடி, வெண்சாமரை கொடை, செடி, வாகுவலயம் முதலிய பதினெட்டு விருதுகளுடன் ஊர்வலம் வந்து முகூர்த்தம் நடத்துகின்றார்கள். இவர்களுக்குள்ள பூர்வசுதந்திரம் மாறாமல் பராய மதஸ்தர்கள் திருவாளுரிற் செய்யும் உற்சவத்தில் இக்குலத்தோருள் பெரிய தனக்காரன் ஒருவனை யானையின்பேரிலேற்றி ஊர்வலங் கொண்டு வருகின்றார்கள். இஃது குருபரம்பரை ஒழுக்கம்.

புத்தமார்க்க அரசர்கள் மழலைபருவமாகும் சிறுவயதில் பெண்களுக்கு விவாகஞ்செய்யாமல் மங்கைபருவமடைந்த பெண்களுக்கே விவாகஞ் செய்து வந்தார்கள்.

சூளாமணி

நங்கைதான் வளர்ந்து காம நறுமுகை துணரவைத்து
மங்கையாம் பிராயமெய்தி வளரிய நின்ற நாளுட்
பைங்கண்மால் யானையார்க்கும் பருவம்வந் திருத்ததென்றாள்
வங்கவாய்ப் பவழச்செவ்வாய் வயந்தமாதிலகையென்பாள்

மேற்கூறிய அரசர்கள் வம்மிசவரிசையைச் சார்ந்த பூர்வக்குடிகளும் அச்சேர்க்கை மாறாது நாளதுவரையில் மங்கைபருவமடைந்த பெண்களையே விவாகஞ் செய்துவருகின்றார்கள்.

குமரப்பருவமுற்ற அரசர்களுக்கும் மங்கைப்பருவமடைந்த பெண்களுக்கும் வதுவை நியமிக்குங்கால் தன்மகன்ம குருக்களாகும் வள்ளுவர்களை வருவித்து பெண்பிறந்தநாள், பருவமடைந்தநாள் தெரிந்துகொள்ளுவதுடன் பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்னுந் தேகலட்சணமும் அறிந்து புருஷருக்குரிய குதிரை, ரிடபம், மான், முயல் எனுந் தேகபொருத்தமும் அறிந்து விவாகம் நடத்திவந்தார்கள்.

மங்கலத்திரட்டு

பருவமங்கை பலுத்தநாள் முகநாளையு மிடைபாரமும்
உருவில் மன்னனுதித்தநாள் குரியோதமுமுயைாழமும்
வருவிலங்க குணக்கடற் சுகவாட்கையு மணசேர்க்கையுங்
கருவிலோங்கு களத்திரத்திரள் காணுமே கனமூணுமே.