பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 / அயோத்திதாசர் சிந்தனைகள்

மணமக்கள் வீற்றிருக்கும் மணவரைமுகப்பில் அரசமரத்தடியில் வீற்றிருந்து உலகநீதி ஒளி பரப்பிய நமது ஒப்பிலா அப்பன் குருசாட்சியாகுகைக்கு அரசிலைக்கால் நாட்டியும்,

- 3:37; பிப்ரவரி 23, 1910

வேம்புமரத்தடியில் வீற்றிருந்து குருநாதனை சிரசில் தாங்கி உலகுக்கு நீதி விளக்காக விளங்கி அம்பிகையென்றும், அவ்வையென்றும் பெயர் பெற்ற நமதம்மனை சாட்சியாகுகைக்கு குடிவிளக்கு அமைத்தும், பஞ்சதாரை சோதி நிலையைப் பரப்புவதற்கு பஞ்சகூறு சால்களென்னும் இந்திர வருண பானைகள் அமைத்து ஓமகுண்டத்தில் அகிற்புகை சோதி வளர்த்தி மணமகளை தாய்மாமன் பாத சேவை செய்ய வைத்து மண்டபத்திற் கொண்டுவந்து மணமகள் தந்தை நீரில் தாரைவார்த்து மணமகன் கையில் பிடித்துக் கொடுப்பது வழக்கமாய் இருந்தது.

பின்கலை நிகண்டு

தருமராசன் முநீந்திரன் சினன் பஞ்சதாரைவிட்டே
யருள் சுரந்த வுணர்கூட்டுந் ததாகதன் ஆதிதேவன்
விரவு சாக்கையனே சைனன் வினாயகன் சினந் தவிர்ந்தோன்
அரசு நீழலிலிருந்தோன் அறியறன் பகவன் செல்வன்.

சிலப்பதிகாரம்

பணையைந்தோங்கிய பாசிலைப்போதி / யணிதிகழ் நிழலற வோன்றிருமொழி

பின்கலை நிகண்டு

மரகதவல்லி பூக மர நிழலுற்றவஞ்சி
பரமசுந்தரி யியக்கி பகவதி யம்மையெங்க
ளருகனை முடி தரித்தா ளம்பிகையறத்தின் செல்வி
தரும தேவதை பேரம்பாலிகை யென்றுஞ் சாற்றலாமே.

மணிமேகலை

சிந்தாதேவி செழுங்கலை நியமத்து / நந்தாவிளக்கே நாமிசைப்பாவாய்
வானோர் தலைவி மண்ணோர் முதலிவி / யேனோருற்ற விடர்களைவாய்.

சூளாமணி

தூண்டிய சுடர்விளக்கன்ன கன்னியோ / டாண்டகை யழல்வலஞ் செய்யுமாரணி காண்டகையுடைத்தது காண்டு நாமென / வீண்டிய கதிரவ னுதயமேறினான்.

சீவக சிந்தாமணி

அடி மணை பவழமாக வரும்பொனா லலகு சேர்த்தி
முடி மணி யழுத்திச் செய்த மூரிக்காழ் நெற்றி மூழ்கக்
கடி மலர் மலரை நாற்றி கம்பல விதானங் கோலி
யிடும்புகை மஞ்சிற்குழ மணவரை யியற்றினாரே.

ஐந்து மூன்றெடுத்த செல்வத்தமனி மூன்றியற்றிப் பூம்பட்
டெந்திர வெழினிவாங்கி யினிமுக வாசச்செப்புஞ்
சந்தனச் சாந்து செப்புந் தண் மலர் மாலை யெய்தி
யிந்திர நீலச்செப்பு மிளயவ ரேந்தினாரே.
மன்பெரிய மாமனடி மகிழ்ந்து திசை வணங்கி
யன்பி னகலாதவினை விடுத்தலர்ந்த கோதைக்
கின்பநிலத் தியன்றபொரு ளிவையிவை நின் கோமான்
றந்தவெனச் சொல்லி நனி சாமி கொடுத்தானே.

சூளாமணி

மங்கையை வலத்துக் கொண்டு மாலையுங் குழலுந் தோடு
மங்கையாற் றிருத்திமாம னடிகளைப் பணிகவென்று
செங்கயற் கண்ணிதாதை செவ்விரல் குவியப்பற்றி
பங்கயப் பழனன் னாடன் பாத மூலத்து வைத்தான்.
அங்குமுன் வளர்த்த வழலே கடவுளாக
மங்கையை மணக்குழுவின் முன்னைவரவேந்தன்
கொங்குவிரிதாரவற்கு நீரொடு கொடுத்தான்
நங்கையொடு நாண் மலரு ளாளையு மடுத்தான்.

மணவரையில் மணமகளை வலமாகவும், மணமகனை இடமாகவும் வைத்து அரசாணிக்கால் முன்பு வளர்த்திய சோதியை குருசாட்சியாகவும் குடவிளக்கை அம்மன் சாட்சியாகவும் சத்திய குண்டமிட்டு மணமகள் வலப்புறக் கழுத்தில்