பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 133

சுத்திகரிக்கச்செய்யும் ஏவலை தூபதீபங்களாகவும் பாவித்து நடத்திவருவேன். இவரை தெய்வமாக பாவிப்பதை மறந்து வேறொரு காணாத் தெய்வத்தை சிந்திக்க மாட்டேன். இவரைக் கண்குளிரப் பார்ப்பதை மறந்து அன்னிய புருடர்களை என் தலை நிமிர்ந்து பார்க்கமாட்டேன். என் மனைத்தொழில்களை மறந்து வாசற்படி கடக்கமாட்டேன். அண்டைவீட்டு கலகச்சொல் அயல்வீட்டுக் கலகச்சொற்களாகும் நெறுப்பைக் கொண்டுவந்து என்வீட்டிற் கொளுத்தமாட்டேன். என்வீட்டிலுள்ள கலகச் சொற்களாகும் நெறுப்பை அயல்வீடுகளிற் கொண்டுபோய் எரியவிட மாட்டேன்.

அன்பான எண்ணத்தையும், சாந்தமான வார்த்தைகளையும் ஈகையுள்ள தருமச்செயல்களையும் மனையில் நடத்திவருவேன். மாமன் மாமி மாதுலன் மாதுவி இவர்களை மேன்மெயாக பாவித்து அன்புடன் ஏவல்செய்துவருவேன். அருந்ததி யென்னு மெமதம்மாள் தன் கணவனாகிய வதிட்டரை தெய்வமாக பாவித்து அவருக்குச் செய்யும் மனைத்தொழிலில் சாந்தம், ஈகை அன்பென்னுங் கற்புநிலையைப் பெருக்கிய பதிவிரதத்தினால் நாளதுவரையில் நாம் கொண்டாடும் நீதியொளியாய்ப் பிரகாசிப்பது போல் யானும் என்னாற் கூடியவரையில் பதிவிரதத்செயலால் கற்புநிலை நின்று என் பத்தாவாகிய இவரைக் கனஞ்செய்வேன். இதுவே சத்தியம் சத்தியம் சத்தியம் என ஒவ்வோர் வார்த்தையின் முடிவிலும் தானியத்தை சோதியி லிடும்படிச் செய்து உறுதிமொழிக் கூறவைப்பர்.

இவ்வகையான வாக்கு தத்தங்களை தன்ம கன்ம குருக்கள் ஏன் நிறைவேற்றி வந்தார்ளென்றால், புத்த தருமத்தைச்சார்ந்த புருஷர்கள் யாவரும் சற்குருவை தெய்வமெனசிந்தித்து பாவச்செயல்களை அகற்றி நன்மெக்கடைபிடித்து தங்கள் இதயத்தை சுத்திசெய்து வந்தார்கள்.

வீரசோழியம்

அருள்வீற்றிருந்த திருநிழற்போதி / முழுதுணர் முநிவனிற் பரவுதுந்தொழுதக
வொரு மனமெய்தி யிருவினைப் பிணிவிட / முப்பகை கடந்து நால்வகை பொருளுணர்ந்
தோங்குநீ ருலகிடை யாவரு / நீங்க வின்பமொடு நீடுவாழ்கெனவே.

சூளாமணி

தன்னலாற் றெய்வ பேணார் சார்ந்தவர் தானுஞ் சார்ந்தார்க்
கென்னலா விவருக்குற்றா ரில்லையென்றிரங்கு நீரான்
பொன்னலா நிதிய மாறப் பொழிந்திடு கின்ற பூமி
மன்னலா மவனையன்றி வணங்குவதில்லை மன்னா.

புத்ததருமத்தைச் சார்ந்த இஸ்திரிகள் யாவரும் தங்கள் புருஷர்களை தெய்வமாகச் சிந்தித்து மனைத்தொழில் நடத்தி கற்புநிலை நின்று தங்கள் பத்தாவைக் கனஞ் செய்து வந்தார்கள்.

- 3:40; மார்ச் 16, 1910 –

மணிமேகலை

தெய்வந் தொழா அள் கொழுநற்றொழுமவள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப்

புத்த தருமத்தைச்சார்ந்த புத்திரர்கள் யாவரும் தங்கள் தாய் தந்தையரை தெய்வமென சிந்தித்து கலை நூல்களைக் கற்று சுயக்கியான நிலைனின்று உலகோபகார நித்தியச்செயல்களை செய்துவந்தார்கள்.

அவ்வை நீதி வாசகம்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

தந்தையையும் தாயையும் தெய்வமென சிந்தித்த போதிலும் அவர்கள் பேரில் தங்களன்பை லயஞ்செய்து அவர்களை எக்காலும் தொழுது வருவதே நன்மெயாம். இதையே இரண்டாவது வாசகசீருள்
ஆலயந்தொழுவது சாலவுநன்று எனக் கூறியுள்ளாள்.

இதின் புத்ததரும அந்தரார்த்தம் உணராது கல்லையும் கட்டையையும் செம்பையும் எக்காலுந் தொழுது வருவது காலக்கேடேயாம். தந்தை தாயரைத் தெய்வமென சிந்திப்ப துடன் அவர்கள் மீதுள்ள நன்றியறி தலென்னும் அன்பை