பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134 / அயோத்திதாசர் சிந்தனைகள்

எக்காலும் லயம்பெறச் செய்வதே அதன் பயனாம். இதையே தந்தைதாய்ப் பேண் என வற்புறுத்திக் கூறியுள்ளார்.

புருடர்களையும், ஸ்தீரிகளையும், புத்திரர்களையும் நீதி நூல் ஒழுக்கங்களில் நிறுத்தி அவர்கள் சுகசீவிகளாக வாழ்வதற்கு தன்மகன்ம குருக்களாகிய வள்ளுவர்கள் முன்னின்று நற்கிரியைகளை விளக்கி வந்தார்கள். அவ்வகை தன்மகன்மங்களை நிறைவேற்றிவந்த வள்ளுவர்கள் தற்காலத்தில் தாராபலன், சந்திரபலனைக்கொண்டு இராசிபொருத்தம், கணபொருத்த மட்டிலும் பார்த்து பூர்வகாலத்தில் ஏழு செறுப்புத் தேயுமளவும் சுற்றி பெண்பார்க்கும் தேகபொருத்தத்தை மறந்து விவாககாரியங்களை நடத்தி வருகின்றனர். தாய்தந்தையர் பிள்ளைக்குப் பெண்பார்க்கும்போது வள்ளுவர்களை அழைத்துப் போவதையும் நாளுக்குநாள் மறந்துவிட்டார்கள். வள்ளுவர்களும் தேகபொருத்த சாஸ்திரங்களை மறந்து காரிய பொருத்தங்களை கைக்கொண்டார்கள்.

தேகபெருத்த லக்ஷணங்களாவன

ஆண்பால்பெண்பால்
குதிரை சாதி16அத்தினி16
இரிடப சாதி12சங்கினி12
மான் சாதி6சித்தினி6
முயல் சாதி6பத்மினி6

ஆகிய தேகபொருத்தந் தழுவிய குணம், குறி, நடை, நகை, தொனி, விழி முதலியவைகளை உணராது கறுப்பு சிவப்பென்னும் அழகு பொருத்தமும், தனவான் வீட்டின் பெண், பெரியவீட்டுப் பெண்ணென்றும், ஏழையின் வீட்டின்பெண் சிறியவீட்டுப் பெண்ணென்றும் அந்தஸ்து பொருத்தமும் பார்த்து விவாகஞ் செய்வதில் குறிபேதத்தால் புத்திரப்பேரற்றும் மேகரோக முற்றும் தேகங்கள் நாளுக்குநாள் ஈனதிசை அடைவதுமன்றி விவாகம் முடிந்த நாலு நாளுள் சிலர் நற்குறி காணவில்லை என்னும் ஒர் கவலையினால் பெண்ணை வியபசாரியெனத் தூற்றுவதும், பிள்ளையை துக்கத்தில் ஆழ்த்துவதும், பணத்தைப் பாழாக்குவதுமாகிய பாரத்தில் ஆழ்ந்து விடுகின்றார்கள். தேகபொருத்தங்களை நன்குணர்ந்து விவாகம் செய்வார்களாயின் பெண்ணும் பிள்ளையும் வியாதியின்றி சுகதேகிகளாய் சுற்புத்திரரைப் பெற்று நீடு வாழ்வார்கள். பெண்களும் தங்கட் புருடர்களை தெய்வமாகப் பாவித்துக் கனமடையச் செய்வார்கள்.

கூர்மபுராணம்

கற்பிற் கினியவ ருந்ததியார் கண்ணு மனமுந் தனிக்கவரும்
பெற்பிற் குயர்வா னுருப்பசியாப் புனித
வொழுக்க முடையாளாய்
வெற்போ ரணுவா மெனப்புடைத்துச் செம்மாந்தெழுந்து வீங்கு முலை
அற்போருருவு கொண்டனைய வணங்கை விழைவின் மணம்புரிக. .

வீடுமர்வாக்கு

தன்கணவனைக் கடவுளென்று பலதன்மெய்
மன்முறை திருத்திவழி பாடு கணிரைப்பேன்
நன்முறை யவர்க்கினிய நாடியவை தேடி
யன்பொடு சமைத்தடி சினல்குவனடுத்தே.

தலைவனுந் தலைவியன்பார் தங்களிற் பக்கமன்பு
நிலைமன மொருமெயோடு நீணிலந்தன்னில் வாழ்தல்
பலனெவை யென்னில் வானிற் பரமமெய் யருள்பேரின்ப
நலனு நீ டூழிகால நன்கொடு வாழுவாரே. .

முடிவுரை

ஒரு மனிதன் தன் தகப்பனுக்கு நூறு ரூபாய் சம்பாத்தியமுள்ள காலத்தில் புசிப்பிலும் உடையிலும் இல்லத்திலும் சுகபோகங்களை அனுபவித்து வருவான். தன் தகப்பன் இறந்தவுடன் தனக்கு சொத்துக்கள் யாதுமின்றி பத்து ரூபா சம்பாத்தியம் உண்டானபோது முன் சுகங்கள் யாவையும் மறந்து தன் சம்பாதனைக்குத் தக்க சுகத்திலிருப்பான்.