பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 141

அடித்துக் கொள்ளுகிறதும் மஞ்சள் ஆடைத் தரித்துக் கொள்ளுகிற வழக்கமுண்டா?

தன்மப்பிரியன். பம்பாய்.

விடை: அதாவது தற்காலந்திருப்பதி என்றும் வெங்கடமென்றும் வழங்கும் படியான பீடம் இந்திரவியாரம் என்னும் பௌத்தர்கள் மடமேயாகும். அதன் வாயிற்படியில் நுழையுங் குகையுள்ளிருப்பது புத்தரது தன்மச்சக் கிரமென்னப்படும். வெங்கடவுச்சியில் நின்று நீதிபோதிப்பது போலிருக்குஞ் சிலைக்கு அவலோகீஸ்வரர் என்று பெயர் அதுவும் புத்தருக்குரிய சகஸ்திர நாமங்களில் ஒன்றாகும்.

வீரசோழியம் - ஆயுங்குணத்தவலோகிதன்

பக்கலகத்தியன்கேட், டேயும்புவனிக்கியம்பிய தண்டமிழீங்குரைக்க,
நீயுமுளையோவெனிற் கருடன் சென்ற நீள்விசும்பி,
லீயும் பறக்கு மிதற்கென் கொலோசொல்லு மேந்திழையே,

உலகயிதமாம் இன்பத்தை வெறுத்த அனுபவங்கள் கண்டு அவலோகித ரென்னும் பெயருடன் களங்கமற்ற சுப்பிர தேகியாய் விளங்கியது கண்டு வெங்கடயீச னென்றுங் கொண்டாடிவந்தார்கள்.

சூளாமணி

என்று தங்கதையோடிருநீண்முகிற்,
குன்று சூழ்ந்தகுழுமலர்க்கான கஞ்,
சென்றோர் வேங்கடங் சேர்ந்தனருச்சி மேனின்று
வெய்யவடை நிலங்காய்த்தினான்.}}

இத்தகைய வெங்கடயீசனென்றும் அவலோகித யீசனென்றும் பெயர் பெற்று, குடகம் வேங்கடமென்னும் தமிழ் நாட்டெல்லைக்கு மத்தியமாக விளங்கிய சிறப்புயாதெனில் புத்தபிரான் எண்ணருஞ்சக்கிரவாளமெங்கும் உலாவிவந்த காலத்தில் அம்மலையடிவாரத்தில் ஓர்லோக ஊற்று அதாவது ஜனிக்கும் நீர்சநிநீரிருந்ததை தனது சங்கத்தோருக்குக் காண்பித்து தேகத்திலுள்ள உரோமங்கள் யாவற்றையும் சிறைத்து அந்நீரில் முழுகினால் சிற்சில ரோகங்கள் நீங்குமென்று போதித்தார் அதனை உணர்ந்த சங்கத்தோர்களும் அத்தேசவாசிகளும் அந்நீரின் சுகானுபவங் கண்டு அடிவாரத்திலும் மலையின் உச்சியிலும் புத்தமடங்களைக்கட்டி சங்கத்தோர் ஞானவிசாரிணையில் நிலைத்திருந்ததுமன்றி, கோவென்னும் அரசன் துறவு பூண்டு வித்தையின் பெருமெயால் காண்பித்தலோக ஊற்றைநாடி வரும் உபாசகர்களுக்கு சமண முனிவர்களைப்போல் சிரோமயிர் யாவுங் கழித்து சநிநீரில் முழுகவைத்து மஞ்சளாடை அணிந்து அரசனின் விந்தைவிளங்க கோவிந்தம் கோவிந்தமென்றும் ஆனந்தக் கூச்சலுடன் அவரவர்கள் இல்லஞ்சேருவது வழக்கமாயிருந்தது அன்று முதல் தீர்த்தனென்னும் ஓர் பெயரும் அவருக்குண்டாயிற்று.

சீவக சிந்தாமணி

தீராவினை தீர்க்குந் தீர்த்தந் தெரிந்துய்த்து / வாராக்கதியுரைத்தவா மன்றான்யாரே
வாராக்கதியுரைத்த வாமென் மவர் பதிந்த / கர்ரார்ப்பூம்பிண்டி கடவுணீயன்றே.

அத்தகைய தீர்த்தத்தின் சிறப்பினால் நான்கு எல்லையிலுள்ள மக்களும் அவ்விடஞ்சென்று சநிநீராடி அடிவாரத்துள்ள தன்மச்சக்கிர வியாரங்கடந்து உச்சிமலையிலுள்ள வெங்கடவியாரஞ்சென்று தன்மம் வினவிபஞ்ச சீலம் பெற்று ஆனந்த கோவிந்தநிலையில் இருக்குங்கால் அசத்தியர் குடியேறி, சத்திய சங்கத்தோர்களுக்கு அனந்தயிடுக்கங்கள் செய்து வந்ததுமன்றி மகமதிய கூட்டத் தோருக்கும் இவர்களை சத்துருக்களாக்கி வேங்கடத்திற்றங்கியிருந்த சங்கத்தோர்களை பல இடங்களிலும் விலகிப் போகச்செய்து விட்டார்கள்.

அக்காலம் வடதேசத்தினின்று பிச்சை இரந்தேதின்ன வேண்டுமென்னும் வைராக்கிகளின் கூட்டத்தோரில் சிலர் அவ்விடம் வந்து தங்கிவருந் தட்சணைகளை பெற்று சுகத்தில் உழ்க்கார்ந்து கொண்டபோதிலும் அவ்விடத்தியமடாதிபதிகளைப் பூர்வத்தில் மாகாயிந்திரர்களென்றே வழங்கிவந்தது இயல்பாம். அம்மகா இந்திரரென்னும் மொழிமறுவியே