பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158 / அயோத்திதாசர் சிந்தனைகள்


64. பௌத்த தன்ம போதமும் அவற்றைக் கேட்போர்கள் நாதமும்

ஓர் போதகர் ஐரோப்பா கண்டத்தைப்பற்றி போதிப்போமெனக்கூறி அவை முடிந்தபின்னர் காலமிருக்குமாயின் அமேரிக்கா கண்டத்தைப்பற்றியும், ஆசியா கண்டத்தைப்பற்றியுங் கூறுவர். அவ்வகைக்கூற்றால் கேட்போருக்கு லாபமும் போதிப்போருக்கு நஷ்டமுமேயன்றி வேறில்லை. அத்தகைய போதத்தைக் கேட்போர் போதகருக்கு நன்றியறிந்த வந்தனஞ் செய்ய வேண்டியதை விடுத்து அவரைப் புறங்கூறி நாதமிடுவது பொறாமெய்க் கூற்றேயாம்.

அதாவது ஓர் பிரசங்கியார் போதத்தைக் கேட்கப்புகுவோர் சுத்த இதயத்துடன் சென்று போதத்தை கிரகிப்பாராயின் அன்னம்போல் நீரென்னும் வீண்போதத்தை அகற்றி பாலென்னும் பிரயோசனத்தைக் கிரகித்து சுகானந்தம் பெறுவர். அங்ஙனமின்றி போதங் கேட்கப் போம்போதே விரோத சிந்தைகொண்டு கேட்பதாயின் சேருநீரும்போல் கலக்குற்று அவிரோதமற்று சகோதரவாஞ்சையாம் அன்புஞ் செற்று தனக்குத்தானே துவேஷத்தைப் பெருக்கிக்கொள்ளுகின்றார்கள். இத்தகைய துவேஷநிலை தன்னைத்தானே துக்கத்திற்கு ஆளாக்கிவிடுமன்றி போதகருக்கு அத்துக்கம் அணுகாதென்பது துணிபு.

பௌத்த சங்கத்தோராம் சமண முநிவர்கள் வரைந்துள்ள நூற்கள் யாவிலும் கடவுளென்றும், தெய்வமென்றும், சாமியென்றும் வரைந்திருக்க அம்மொழியை சிரமேற்கொண்டு ஆண்டுவரும் பௌத்தர்கள் தெய்வமில்லையென்றும், கடவுளில்லையென்றுங் கூறுவரோ. ஆதியங் கடவுளும், ஆதி தெய்வமும் புத்தராகவேயிருக்க அவரை இல்லையென்று துணிந்துங்கூறுவரோ. ஒருக்காலுங் கூறார்கள். கடவுளென்னு மொழியும், தெய்வமென்னு மொழியும் பௌத்தர்களாலேயே தோன்றி பௌத்தர்களாலேயே வரைந்து, பௌத்தர்களாலேயே மொழிந்தும் வருபவற்றை ஏனைய மதத்தோர் ஏற்று அதன் பொருள் விளங்காது வீணேநிந்திப்பதில் யாது பயன்.

மக்களது நற்செயலைப்பற்றிய மொழிகளை வேறுருசெய்து மனோபிராந்தியால் சிந்திக்கினும் மனுவுருவாய சிந்தனையாமன்றி வேறுருவேண்டாரென்பது திண்ணம். அதற்குமோர் தாட்டாந்தங் கூறுவாம். அதாவது லண்டன் பார்லிமெண்டு மெம்பராயிருந்து காலஞ்சென்ற சர்சார்ளஸ் பிராட்ளா என்பவர் அவருடைய மிக்க நேயரான ஓர் கத்தோலிக்குப் பாதிரியார் வீட்டிற்குச் சென்று வார்த்தையாடிக்கொண்டிருக்கும்போது அவருடைய நேயகூட மத்தியில் ஓர் விருத்தாப்பியக் கிழவனைப்போல் ஒருபடமும் அவரருகில் ஓர் சிறு குழந்தையும் இருப்பதுபோன்ற உருவம் அமைக்கப்பெற்றிருந்ததாம். அப்படத்தைக் கண்ட பிராட்ளா என்பவர் பாதிரியாரைநோக்கி ஐயா இப் படம் யாருடையதென்றாராம். பாதிரியார் சற்று நிதானித்து இப்பெரியவர் பிதா, இக்குழந்தை, கிறிஸ்துவென்று கூறினாராம். அதற்கு பிராட்ளா மறுதலித்துப் பிதாவென்றால் உங்கள் (காடோ) என்றாராம். அதற்குப் பாதிரியார் ஆமென்று கூறியபோது பிராட்ளா பாதிரியாரைநோக்கிக் கிறிஸ்துவானவர்க் குழந்தையாய் இருக்கும் போதே உங்கள் பிதாவென்னுங் (காடானவர்) இவ்வளவு விருத்தாப்பியக் கிழவனாயிருந்தபடியால் இதுவரையில் அவர் இறந்துபோயிருப்பாரல்லோவென்று கூறினாராம். அதை வினவிய பாதிரியார் நகைத்து எனது பிரியமான நேயரே, மனித உருவத்தைக்காட்டி மனிதர்களுக்கு மதி கூறவேண்டுமேயன்றி மனிதனையன்றி வேறுருகொண்ட பிதா இல்லையென்று கூறினராம். இதன் சரித்திர வாக்குவாதத்தை அவரது நாஷனல் ரீபார்மரென்னும் பத்திரிகையிற் காணலாம்.

இத்தகைய திருட்டாந்த தாட்டாந்தங்களைக் கொண்டே மனிதவுருவத்தைச் சுட்டி அதன் செயலால் கடவுளென்னு மொழியும், தெய்வமென்னு மொழியுந் தோன்றியுள்ளதென்பதைத் தெள்ளறத் தெளிந்துக்கொள்ளலாம். அவற்றினந்தரார்த்தங்களை விசாரித்துணராது பௌத்தர்களால் வகித்துள்ளக்