பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160 / அயோத்திதாசர் சிந்தனைகள்

நீங்கள் பௌத்தர்களாகுங்கோளென்று கூறுவது மக்கள் சீர்திருத்த முதன்மொழி யாதலின் விவேகிகளும், சீர்திருத்தக்காரர்களும் அவற்றை சிரமேந்தி ஆனந்திப்பார்கள். பஞ்சபாதகத்தோர் அம்மொழியை பழித்தும் புறங்கூறியும் அவலம்பிப்பார்கள். ஆதலின் பௌத்த போதனாசிரியர்களும், பௌத்ததன்மப் பிரியர்களும், பௌத்த உபாசகர்களும் பஞ்சபாதகர்களின் புகழ்வையும், இகழ்வையும் நோக்காது சத்தியதன் மத்தைப் பரவச்செய்யும்படி வேண்டுகிறோம்.

- 4:23; நவம்பர் 16, 1910 –


65. சுடலைச்சடங்குகள்

வினா : இத்தேசத்தோர்களாகிய நம்மவரில் யாரேனும் இறந்து வீட்டிலிருந்து சுடலைக்கெடுத்துச்செல்லும்போது அரிச்சந்திரன் கோவில் வரைக்கும் பிணம் வீட்டுப்பக்கம் பார்க்கும்படியாகவும், அரிச்சந்திரன் கோவிலண்டை இறக்கியவுடன் வெட்டியான் வந்து நின்று சில வசனங்களைச் சொல்லி கடைசியாக காளியம்மா கதவைத்திற அரிச்சந்திரா வழிவிடு என்பதின் மூல காரணத்தையும் அப்புறம் பிணம் சுடுகாட்டைப் பார்க்கும்படி எடுத்துச்செல்கிறார்களே அதின் மூல காரணங்களையும் விளக்கிக்காட்ட வேணுமாய்த் தங்கள் மேலான கனத்தைக் கோருகிறேன்.

வி.டாம். பட்லர், K.G.F. ஆஸ்பிட்டல்

விடை : தாம் வினவியுள்ள அரிச்சந்திரன் சங்கை அடியோடு பொய்யாதலின் அவன் சுடலையில் வழி விடுவதும், காளி கதவைத்திரப்பதும் கட்டுக்கதையேயாகும்.

அத்தகையக் கதை தோன்றியக் காரணமோவென்னில், விசுவாமித்திரன் மூச்சியினின்று இரண்டு பறைச்சிகள் பிறந்தார்களென்றும், சுடலை காக்கும் வீரவாகு பறையன் ஒருவன் இருந்தானென்றும் ஓர் கட்டுக்கதையை ஏற்படுத்தி பறையர்களென்னும் சாதியோர் பூர்வத்திலிருந்தே வருகின்றார்களென்று பூர்வ பௌத்தர்களை சீரழிப்பதற்காக சுடலையில் அரிச்சந்திரன் என்னுமோர் உருவு செய்து வழியில் வைப்பதுமன்றி குழி வெட்டவும், பிணஞ் சுடவுங் கார்த்திருக்கும் வெட்டியானுக்கும் ஓர்வகைப் பாடலைக் கற்பித்து பிணத்தை எடுத்து அவ்விடஞ் சென்றவுடன் வெட்டியானப்பாடலைப் பாடி காளியம்மா கதவைத்திர, அரிச்சந்திரா வழிவிடுமென்னும் அப்பிரயோசன மொழியை வழங்கி வருகின்றார்கள். மோட்சத்திற்கு வழிவிடவும், கதவைத்திரக்கவுமுள்ள அதிகாரம் வெட்டியானிடம் இருக்கின்றதென்று எண்ணி பிணத்தை எடுத்துச் சென்று அரிச்சந்திரனிடம் வைக்கவும் வெட்டியானை வழி திரக்கச் சொல்லவும் உள்ளவர்களின் கல்வியும், விசாரிணையும், யோக ஞானங்களும் எத்தகையத் தென்பதைத் தாங்களே உணர்ந்துக்கொள்ள வேண்டியதுதான். ஆங்கிலேயர்ப் பிணங்களைப் புதைக்கும் செப்பிடு துரைக்குச் சென்று அவ்விடமுள்ள வெட்டியானைக் கதவைத் திரக்கவும், வழிவிடவுங் கூறுவதாயின் அனுபவத்திற்குங் காட்சிக்கும் அம்மொழி பொருந்தும். ஏதுமற்ற வெட்ட வெளியாம் சுடலைக்குச்சென்று கதவைத் திரக்கவும், வழிவிடவும் சொல்லுவதும் அச்சொல்லுக்காகப் பிணத்தை வைத்துக் கார்ப்பதுமாகியச் செயல்கள் யாவும் பறையனென்னும் ஓர் சாதியோன் இருக்கின்றானென்று பழிக்கவும் அவனது பேதை நிலை இவ்வளவென்று கழிக்கவுமேயன்றி வேறில்லையாகும்.

சாதித்தலைவர்கள் சுடலைக்கும், மகமதியர்கள் மயாணத்துக்கும், கிறிஸ்தவர்கள் கல்லறைகளுக்கும் கதவைத் திரக்கவேண்டிய காளியம்மாளும், வழிவிடவேண்டிய அரிச்சந்திரனும் இல்லாமல் சிலக்கூட்டத்தோருக்கு மட்டிலும் இருப்பது அவர்களைத் தாழ்த்தி அலக்கழிப்பதற்கேயாம்.

காளியம்மாளென்பவள் வங்காளத்தைச் சேர்ந்த ஓர் பெண்ணரசி. அவளது வல்லபத்திற்கும் நீதிநெறி வழுவா ஆட்சிக்கும், அத்தேசத்தோர் அவளை