பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பகரமாக தருமராஜன் கோவிலினுள்ளும், அம்மன் கோவிலினுளளும் அரசமரம் வேப்பமரம் நாட்டி இருப்பதை நாளதுவரையிலுங் காணலாம்.

தருமராஜனென்று தொழுவது புத்தபிரானையும், துரோபதையென்று தொழுவது அம்பிகா தேவி என்னும் சிந்தாதேவியையேயாம்.

பின்கலை நிகண்டு

தருமராசன் முந்நிந்திரன் சினன் பஞ்சதாரைவிட்டே
அருள்சுரந் தவுணர்க்கூட்டுந் ததாகதன் ஆதிதேவன்
விரவு சாக்கையனே சைனன் விநாயகன் சினந் தவிர்ந்தோன்
அரசு நீழலி ருந்தோன் அறியறன் பகவன் செல்வன்.
மரகத வல்லிபூக மரநிழ லுற்ற வஞ்சி
பரம சுந்தரி யியக்கி பகவதி யம்மெ யெங்க
ளருகனை முடி தரித்தாளம்பிகை யறத்தின் செல்வி
தருமதேவதை பேரம்பாலிகை யென்றுஞ் சாற்றலாமே.

மணிமேகலை

சங்கதருமன்றாமெனக் கருளிய / சிந்தாவிளக்கே செழுங்கலைபாவாய்.

- 4:27; டிசம்பர் 14, 1910 –

67. பௌத்தர்களும் இந்துக்களும்

இந்திய தேச பௌத்தர்கள் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம் சோதிரர்களே, நமது தேசத்தில் பௌத்தர்களென்றும், இந்துக்களென்றும் இரு வகுப்பாருண்டு. அவர்களுக்குள் இந்துக்கள் என்பவருக்குள் சாதியாசாரம் என்னும் பிரிவினைகளுண்டு. பௌத்தர்களுக்குள் அத்தகையப் பிரிவினைபேதங் கிடையாது.

இந்துக்களென்போர் அவரவர்கள் ஏற்படுத்திக்கொண்டுள்ள அவரவர்கள் தேவதைகளைத் தொழுது அவர்களுக்குப் பூசை நெய் வேத்தியஞ் செய்துவந்தால் மோட்சமும் சுகமும் உண்டென்பார்கள். பௌத்தர்களோ நன்மார்க்க நடையில் சீலத்தைப் பின்பற்றி ஒழுக்கத்தில் நிலைப்போர்க்கு முத்திய சுகமுண்டென்பார்கள்.

இந்துக்கள் என்போர் அவர்கள் ஏற்படுத்திக்கொண்டுள்ள வேதத்தை நம்புவதுடன் சாதியாசாரம் சமயாசாரத்தில் லைத்திருக்கவேண்டுமென்பார்கள். பௌத்தர்களோ, தங்களது பெளத்தாகமப் போதத்தின்படி பாவச் செயல்களை அகற்றி நன்மெய்க் கடைபிடித்து இதய சுத்தி உடையவர்களாகி சருவசீவர்கள் மீதும் அன்பு பாராட்ட வேண்டும் என்பார்கள்.

இந்துக்களென்போர்களுக்கு தங்கள் சாதியாசாரங்களுக்குத்தக்க சாதிப்பெயரும் தொடர்மொழியும் இருப்பதுடன் நெற்றியிலும், கழுத்திலும் சமய சின்னங்களாகும் விபூதி, திருமண், உருத்திராட்சம் முதலியன இருத்தல் வேண்டும். பெளத்தர்களோ சகல மநுக்களையும் சகோதிரரென பாவித்து சகலரும் ஒற்றுமெயின் வாழ்க்கைபெற விரும்புதலும் பஞ்சபாதங்களை அகற்றி வாழ்தலே பௌத்த சின்னமென்று எண்ணி பஞ்சசீலத்தையே தியானமாகக் கொண்டு அம்மேறை நடப்பார்கள். அதன் செயல்களைக்கொண்டு சென்னை சாக்கைய பௌத்த சங்கத்தோர்களும், கோலார் சாக்கைய் பௌத்த சங்கத்தோர்களும், பெங்களூர் சாக்கைய பௌத்த சங்கத்தோர்களும், செக்கின்றாபாத் சாக்கைய பௌத்த சங்கத்தோர்களும், திருப்பத்தூர் சாக்கைய பௌத்த சங்கத்தோர்களும் இரங்கூன் சாக்கைய பௌத்த சங்கத்தோர்களும் அங்கங்கு ஒன்றுகூடி தற்காலம் எடுக்க ஆரம்பிக்கும் சென்ஸஸென்னும் குடிமதிப்புக் கணக்கில் பௌத்தர்களை வேறாகவும், இந்துக்களை வேறாகவும் பிரித்துக் கணக்கெடுக்கும்படி நமது கருணைதங்கிய கவர்ன்மெண்டாரை வினவி பௌத்தருக்கென்று வேறுகலமே பிரித்துக்கொள்ளும் ஏதுவைத் தேடுவதற்காக மேற்சொன்னபடி சங்க ஸ்தாபகரும், பொதுக் காரியதரிசியுமாகிய க. அயோத்திதாஸப் பண்டிதருக்குத் தங்கடங்கள் யேகவாக்கின் கையெழுத்துக்கள் அனுப்பி அவர்மூலமாக இராஜாங்கத்தோருக்கு விண்ணப்பம் அனுப்ப இராஜாங்கத்தோரும் அவற்றை நன்காராய்ந்து இந்த சென்ஸஸில்