பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 169

நம்முடைய சங்கத்தின் சத்தியதன்ம போதமோவென்னில், ஒவ்வொரு மனிதனும் நீதிநெறி வாய்மெயில் நிலைத்து மெய்ப்பொருளுணர்ந்து தீவினைகளை ஒழித்து பிறவியின் துக்கத்தை ஜெயிக்கவேண்டும் என்பது கருத்தும் சத்திய சாதனமுமாகும்.

சென்னை மகாபோதி சங்கத்தோர் கருத்தோவென்னில் மெய்ப் பொருளென்பது ஒன்று கிடையாது. மறுபிறவியென்பதுங் கிடையாது. மனிதன் சாகவேண்டியதே முடிபென்றுங் கூறுவார்கள்.

}இத்தகைய சாதி சம்மந்தத்திலும் தன்மசம்மந்தத்திலும் நேர் விரோதமாயுள்ளபடியால் அச்சங்கத்தற்கு வருவதிலும் வந்தும் ஏதேனும் போதிப்பதிலும் யாதொரு பயனும் இல்லாதபடியால் வராமல் நின்றுவிட்டோம். இதுவே நமது கருத்தாகும்.

அவர்கள் பௌத்தர்களென வெளிதோன்றியும் தங்களை உயர்ந்தவகுப்போர்களாக எண்ணிக்கொண்டு தாழ்ந்த வகுப்போர்களுக்கு தன்மஞ் சொல்லப்போகின்றோமென்று கூறி வெளிவந்ததை கனந்தங்கிய தன்மபாலா அவர்கள் வெளியிட்டுவரும் மாதாந்த மகாபோதி ஜர்னலில் தெரிந்துக் கொள்ளுவதுமன்றி அச்சங்கத்தில் வந்துள்ள பிக்க்ஷவின் கையிலிருக்குங் கடிதத்தினாலும் அறிந்துக் கொள்ளலாம். ஈதன்றி அவர்களது புத்தஜயன்தி கொண்டாட்டத்தை 'இந்து' பத்திரிகையில் எவ்வகையாக எழுதியிருக்கின்றார் களென்னில் காட்டுமிராண்டிகளுக் கொப்பானவர்களும். அறிவில்லாதவர்களும், நீதிநெறி ஒழுக்கமற்றவர்களுமாகியக் கூட்டத்தோருக்கு தன்மம் போதிக்கப் போகின்றோம் என்றும் வரைந்திருக்கின்றார்கள். அத்தகையக் கூட்டத்தோர் யாரோ நமக்கு விளங்கவில்லை. இத்தகையக் கூட்டத்தோர் யாவரென்று தாங்களேனுந் தெரிந்துக் கூறுவீராயின் மிக்க உபகாரமாகும்.

தங்களுக்குள் அறிவிலிகளும் அசுத்தர்களும் அசப்பியர்களும் நீதிநெறி ஒழுக்கமற்றவர்களும் இருக்கின்றார்களா இல்லையாயென்று ஆராயந்துணராது அறிவில்லாதார்களும் நீதிநெறியற்றவர்களுமாகிய ஓர் கூட்டத்தோர் இருக்கின்றார்களென்றும் அவர்களை சீர்திருத்த வந்தோமென்றுங் கூறுகிற படியால் அக்கூட்டத்தோர் யாவரென்பதை நாம் தெரிந்துக் கொண்ட பின்னர் அவ்விடம் வரக் கார்த்திருக்கின்றோம்.

திரிக்குறள்

வெண்மெயெனப்படு வதி யாதெனினொண்மெ
யுடையம் யாமென்னுஞ் செருக்கு.

- 4:49; மே 17, 1911 –

74.வேளாண் சடங்குகள்

வினா : தென்னிந்தியாவில் விவசாயம் நடாத்தும் அனந்தமானவர்களும் சங்கராந்திகாலங்களில் மாடுகள் யாவையுங் கழுவி சுத்தஞ்செய்து வேண்டிய ஆபரணங்கள் பூட்டி நல்லவேளை என்னுங் காலவரையை அனுசரித்து பொன்னேறுக்கட்டுகின்றார்களே அவ்வாதாரம் எதை அனுசரித்தது. மறுபடியும் ஏரை விட்டுவிடுங் காலங்களில் வடக்குமுகமாய் சரிவரத் திருப்பி ஏரைவிட்டுவிடும் யாவருங் கையிலேந்துங் கோலையும் பயபக்தியுடன் கரமேந்தி இருகையையும் சிரசின் மேல் வைத்து வடக்குமுகமாய் கும்பிட்டு ஏரைவிட்டு விடுகிறார்களே இது எந்த அனுபவத்தை ஒட்டியது, இதற்கு சாஸ்திரமும் நூலாதாரமுமுண்டா. வடக்கு திக்குநோக்கி கும்பிடும் வழக்கமொன்றிருக்க சிலர் மெய்ப்பொருளில்லை என்று கூறுகின்றார்களே மேல்குறித்தவர்கள் எந்த மெய்யைக்கண்டு கும்பிடுகிறார்கள். அவர்களைக் கேட்டால் பெரியோர்கள் வழக்கத்தை அநுசரித்து கும்பிட்டு வருகிறோமென்கிறார்கள்.

எ. நாராயணசாமி, ஓரத்தூர்,

விடை : பௌத்தருள் வேளாளத்தொழில் செய்வோர் யாவரும் சங்கரர் அந்திய புண்ணியகாலமாகும் மார்கழி மாதக்கடையிலும், தைமீ முதலிலும்