பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தங்கள் தங்கள் வயல்களில் விளைந்த தானியங்களைப் பொங்கலிட்டு இந்திரராம் புத்த பிரானை பூசிப்பதுடன் மாடுகளை சுத்தஞ்செய்து அவைகளையுங் கொண்டாடி மறுநாள் வேளாளத் தொழிலாளர்கள் ஒருவருக்கொருவரை காணும் பொங்கலென வழங்கி சந்தித்துக்கொள்ளுவார்கள்.

காணும் பொங்கலுக்கு மறுநாள் அதிகாலையில் எழுந்து பொன் தகடு வேய்ந்த ஏறினைக்கொண்டுபோய் வெண்ணெறுதுகள் பூட்டி உத்திர முகமென்னும் வடக்குதிக்கு நோக்கி சரணாகதி என்னும் இருகரத்தை சிரமேற்கூப்பி உத்தரகுருவாம் புத்தபிரானை சிந்திப்பதியல்பாம்.

இத்தகைய சிந்தனைக்கும் மூலகாரணர் சமணமுநிவர்களேயாகும். அறப்பள்ளிகளிலுள்ள ஞானசாதனர்கள் புத்தபிரான் அரசமரத்தடியில் வீற்று உத்திரமுகம் நோக்கி சித்தசுத்தி செய்து இந்திரியத்தை வென்று பற்றற்ற நிருவாணம் பெற்றதுபோல் தாங்களும் பெற்று நித்தியானந்தம் அடைவதற்கு உத்திரமுகம் நோக்கி சாதனை புரிந்துவருவதை நாளுக்குநாள் கண்டுவரும் வேளாளத் தொழிலாளர்களும் தங்களது வேளாண்மெய் விருத்தி பெறல் வேண்டி பொன்னேறு பூட்டி போதிநாதனை சிந்தித்து வந்தார்கள்.

அத்தகைய சிந்தனையினாலும், நீதிநெறி ஒழுக்கத்தினாலும் மாதம் மும்மாரி பெய்யவும் வரப்புயரவும், நீர் நிறம்பவும், பயிறு பெருகவும், குடிகள் சுகிக்கவும், கோன் உயரவுமாய செயலுற்றிருந்தது.

அத்தகைய சத்தியசிந்தனையுமற்று நீதிநெறி ஒழுக்கங்களுங் கெட்டு பொய் வேதங்களும், பொய்ச்சாதி வேஷங்களும், பொய்ப்புராணங்களுந் தோன்றி, பொய்ப்பொருள் மலிந்து, மெய்ப்பொருள் விளக்கமற்றுவிட்டபடியால் பஞ்சமும் பெருவாரிக் காச்சலுமுண்டாகி குடிகளை சஞ்சலத்திற்கு உள்ளாக்கிவருகின்றது.

நிட்டானுபூதி

உத்தர முகமாய யாதனத்திருந்தே வுயர்குருபத மலர் தொழுது
முத்திரையெனுஞசாம்பவியினை பொருந்திமோனமா மன்னிலை வழாமல்
சித்திரதீபம்போல் அசைவறவே சிந்தையை நிலைநிறுத்துவனே
அத்தனடியை யடைவனென்றுறைக்கு மண்ணலாகமமெலா மெடுத்தே.

- 5:11, ஆகஸ்டு 23, 1911 –

75.ஏற்பது இகழ்ச்சி என்றால் என்னை

எங்கள் முன்னோர் எழுதிவைத்திருக்கின்றாரென்று கூறுவானாயின் அதன் மெய்யும் பொய்யும் நன்குணராது நம்புவது இகழ்ச்சி. எங்கள் தேவன் அப்பவுமிருக்கின்றார், இப்பவுமிருக்கின்றார், அப்போதும் அப்படி சொன்னார், இப்போதும் இப்படி சொன்னாரென்று கூறுவானாயின் இருந்ததினாலும் சொன்னதினாலும் நீவிரடைந்துள்ளப் பலன் யாதென உசாவாது அவன் வார்த்தையை நம்புவது இகழ்ச்சி. எங்கள் தேவன் கீழிருந்து மேலே போனார் மேலிருந்து கீழேவந்தாரென்பானாயின் மேலேபோயதினாலுண்டாய சுகமென்ன, கீழேவந்ததினாலுண்டாய பயனென்னவென்று உசாவாது அவன் சொல்லியதை நம்புவது இகழ்ச்சி. எங்கள் தேவனே சகலரையுங் காப்பவரென்று கூறுவானாயின் உங்கள் தேவன் எங்களைக் கார்க்காமல் விட்டுவிடுவாரோ வென்று உசாவாது அவன் வார்த்தையை நம்புவது இகழ்ச்சி. எங்கள் தேவன் நம்பினால் கார்ப்பாரென்று கூறுவானாயின், உங்கள் தேவனை நம்பியுள்ளவர்கள் தேசத்தில் எரிமலைகள் பொங்கியும் நீர் பிரவாகமுற்றும் தத்தளித்து மடியுங்கால் நம்பியுள்ளோரைக் கார்க்காத தெய்வம் எங்களைக் கார்க்குமோவென்று உசாவாது அன்னோன் வார்த்தையை நம்புவது இகழ்ச்சி.

ஆதலின் எங்கள் தேவன் எழுதியப் புத்தகமென்று கூறியபோதினும் எங்கள் பெரியபெரிய மனிதர்கள் எழுதிவைத்துள்ளப் புத்தகமென்றபோதினும் அதை தேற வாசித்து அதைக் கைப்பற்றியுள்ளோர் என்ன சுகத்திலிருக் கின்றார்கள், அன்னோர் கூட்டத்தோர் என்ன சுகத்திலிருக்கின்றார்கள், அன்னோர் கூட்டத்தோர் என்ன சுகச்சீர் பெற்றுள்ளாரென்று ஆராய்ந்து அதைநம்புவதே