பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172 / அயோத்திதாசர் சிந்தனைகள்


77. மக்களை மக்களாக ஏற்காதோரைத்
தேவரெனப்போமா அன்றேல் நரகரென்னலாமோ

மக்களாம் மனுகுலத்தோரை, மக்களென்றும் மநுக்களென்றும்பாராது மிருகங்களினுந் தாழ்ச்சியாக எண்ணுவோரும், தாழ்ச்சியாக நடத்துவோரும், தேவர்களாவரோ, ஒருக்காலும் ஆக மாட்டார்கள்.

தேவர்களின் இலட்சணங் கூறுமிடத்து சருவசீவர்களையுந் தன்னுயிர்போல் பாதுகாக்குந் தண்மெ உடையவர்களென்றும், இராகத்துவேஷ மோகங்களை அற்றவர்களென்றும், பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை மூன்றையும் சொல்லுவோ ரென்றும், இரவு பகலற்றவர்களென்றுங் கூறுகிறபடியால், மக்களை மக்களாக பாவிக்காத வன்னெஞ்சர்களும், போறாமெக்காரர்கள் ஒருக்காலும் தேவர்களாக மாட்டார்கள்.

மக்களை மக்களாக பாவிக்காதோரை நரர்களென்றே கூறத்தகும். அத்தகைய நரர் கூற்றினும் இவ்வன்னெஞ்சினர் வானரரோ அன்றேல் வாலற்ற நரரோவென் றோசிப்பதாகும்.

இவற்றுள் வானரரும் வாலற்ற நரரும்பகுத்தறிவில்லாக் குறைவால் மக்களைக் கண்டவுடன் ஒதுங்கி ஓடுவதியல்பாம். அவ்வியல்பு மாறாது வானரரும் வாலற்ற நரரும் பூர்வ புண்ணிய வசத்தால் மக்களாகத் தோன்றி நிற்கினும் பூர்வம் நரராயிருக்குங்கால் மக்களைக் கண்டவுடன் ஓடுமியல்பு மாறாது. இம் மக்கள் ஜெனனமெனத்தோன்றினும் பூர்வஜென்மச்செயல்கொண்டு மக்களைக் கண்டவுடன் ஒதிங்கி ஓடுகின்றார்கள். கேட்போருக்கு அவர்களைத் தீண்டப்படாது, இவர்களைத் தீண்டப்படாதென்னும் படாடோபம் காட்டினும் பூர்வ விட்டகுறையின்செயலே சான்றாம். மற்றபடி மக்களை மக்கள் தீண்டக்கூடாதென்போன் மக்களில் மக்களுமாகான், மக்களில் தேவனுமாகான், மக்களில் நரர் நரரென்றே கூறத்தகும். அத்தகைய நரனது வாக்கையும், நரனது செயலையும் நன்கென்று ஏற்காது அவற்றை மநுகுல ஒற்றுமெக்கேடாம் தீது, தீதென்றே விலக்கல் வேண்டும்:

- 5:22; நவம்பர் 8, 1911 –


78. புறக்கருவி ஆராய்ச்சியும் பௌத்தமும்

வினா : தற்காலம் ஆங்கில பாஷையை வாசித்து அதிற் (சைன்ஸ்பிரபஸ) ரென்னும் பெயரெடுத்துள்ளவர்கள் சகலவற்றையும் ஆராய்ந்துள்ளவர்களாம் அதிற் சிலர் புத்தபிரானுக்குச் சமதையான ஆராய்ச்சிப்பெற்றவர்களாம் அவர்கள் புத்ததன்மங் கூறுகிறோமென வெளிதோன்றி மனிதன் மரணமடைவதுதான் முடிவு அதற்குப்பின் அவனுக்கு யாதொரு சுகதுக்கமுங் கிடையாதெனக் கூறுகின்றார்களாம். ஈதென்ன (சைன்சோ) ஈதென்ன ஆராய்ச்சியோ அடியேனுக்கு விளங்கவில்லை.

வே. கோ. பதுமநாபம், சென்னை .

விடை : தாம் விசாரிப்பதும் பிரபஸர்கள் கூறுவதும் புறக்கருவியினது ஆராய்ச்சியேயன்றி உட்கருவியினது ஆராய்ச்சி ஆகாவாம். புறக்கருவியினது ஆராய்ச்சி யாதெனில் கெந்தகமும், வெடியுப்புஞ் சேர்ந்தால் வெடிக்கும். சக்கிக் கல்லும், இரும்புதுண்டுஞ் சேர தட்டினால் நெருப்புண்டாகும். இன்னின்ன வஸ்துக்கள் சேர்ந்தால் இனிப்புண்டாகும், இன்னின்ன வஸ்துக்கள் சேர்ந்தால் துவர்ப்புண்டாகும், இன்ன வஸ்துவை முகர்ந்தால் மனிதன் இஸ்மரணையற்று விடுவான், இன்ன வஸ்துவை உட்கொண்டால் மனிதன் மரணமடைவான், நெருப்பும் நீருங் காற்றுஞ் சேர்ந்தால் ஓர் வஸ்துவை இழுக்கும், புகையுங் காற்றும் பாதரசமும் ஓர் வஸ்துவை ஆகாயத்திற் கிளப்பும் எனக் கைகளாலும் கருவிகளாலும் வஸ்துக்களை ஆராய்வது புறக்கருவி ஆராய்ச்சி என்னப்படும்.