பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அதை அநுசரித்தே போதி பண்டிகை விடியர்காலத்தில் வீடுகடோருமுள்ள பெண்கள் துக்கங்கொண்டாடி வருகின்றார்கள்.

வீரசோழியம்

கொண்டன் முழங்கின்வாற் கோடற் பரந்தனவா லென்செய்கோம்யாம்.
வண்டு வரி பாடவார் தளவம் பூந்தனவாலென்செய்கோம்யாம்.
மறுளறுத்த பெரும்போதி மாதவரைக் கண்டிலமா லென்செய்கோம்யாம்
அருளிருந்த திருமொழியா லறவழக்கங் கேட்டிலமா லென்செய்கோம்யாம்
பொருளறிவு மருந்தவத்துப் புலவரைக் கண்டிலமா லென்செய்கோம்யாம்.

போதிபண்டிகை விடியற்காலத்தில் சோதியை வளர்த்திக் கொண்டாடி வந்த வழக்கம் மாறாது நாளதுவரையில் சோதியை வளர்த்திக்கொண்டு வருகின்றார்கள்.

மணிமேகலை

'மதிநாண் முற்றிய மங்கலத்திருநாள் / பொதுவறி விகழ்ந்து புலம்பறுமாதவன்
றிருவற மெய்துதல் சித்தமென்றுணர் நீ.'

சூளாமணி

அருள்புரி யழலஞ் சோதி யாழியா னாதியில்லான்
மருள்புரி வினைகட் கென்று மறுதலை யாயவாம
னிருள்புரி யுலகஞ்சேரா வியனெறி பயந்த பெம்மான்
பொருள் புரி விழவு காண்பார் புண்ணிய வுலகங் காண்பார்.

மார்கழிமாத முழுவதும் வீட்டுவாயலில் கோலமிட்டு முத்தந்தெரித்து வந்ததுபோல் நாளது வரையில் வீதிகளிற் கோலமிட்டு புட்பம் பரப்பி வருகின்றார்கள்.

சூளாமணி

விரையினால் மொழுகிய வீதிவாயெலாந்
திரையினாற் செழுமணி மூத்தஞ் சிந்தினார்
உரையினாலெண்ணயவ் வொளிகொள்மா நகர்
புரையினாற் பொன்னுல கிழிந்த தொத்ததே.
அழல் வளர்த்தனை யன தழையு மவ்வழற்
றழல் வளர்த்தனை யென மலருந் தாமரை
பொழில்வளர் வளையமும் பொதுளி வண்டினங்
குழைவளர் அசோகீன்மேற் குளிருகின்றவே.

விடியற்காலம் சோதியை வளர்க்குங்கால் வாத்தியகோஷம் செய்தவழக்கம் மாறாது நாளதுவரையில் போதிபண்டிகை விடியற்காலம் சிறுவர்கள் மேளவாத்திய கோஷத்துடன் கொண்டாடி வருகின்றார்கள்.

சூளாமணி

பூரண மணிக்குட நிறைத்த பொன்னணி
தோரண மெடுத்தன துதைந்த வெண்கொடி
வாரண முரசொடு வளைகளார்த்தரோ
காரணி கடலொலி கைதவிர்த்ததே.

சோதியை வளர்த்தி விடிந்தவுடன் இஸ்நானஞ்செய்து புதுவஸ்திர மணிந்து பரிநிருவாண சிறப்பைக்கொண்டாடி வந்தார்கள். அதை அநுசரித்தே நாளதுவரையில் இஸ்நானஞ்செய்து புதுவஸ்திரம் அணிந்து வருகின்றார்கள்.

வெண்டு கிலுடுத்து வெண்சாந்து மெய்வழித்
தெண்டிரன் மல்லிகை யொலியல் சூடினார்
வண்டி ரண் மணிமுத்தும் வைரச்சாரியுங்
கொண்டிய லணியோடு கோலந்தாங்கினார்
மாமழைக் கண்ணியர் மருங்குபோல்வன
தூமழை வளர்கொடி துவன்றிப் பத்திகள்
பா மழை யுருவுகள் பலவுந் தோன்றவே
பூமழை பொன்னிரம் புதைய வீழ்ந்தவே

மங்கை பருவமில்லா சிறுபெண்கள் யாவரும் சோதிநாள் கொண்டாடுங் காலத்தில் அரசமரத்தை சுற்றி கும்மியடித்து குருநாதனை சிந்திப்பது வழக்கமாம். அதை அநுசரித்தே இக்காலத்தில் கும்மியடிப்பெண்காள் கும்மியடி குருபாதங்காணவே கும்மியடி நம்மெய் ஆண்ட ஆதிநாதனை நாடிக் கும்மி அடியுமடி அவனைத் தேடிக்கும்மியடியுமடி.