பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 177

இத்தகையாக நகரவாசிகள் கொண்டாடிவந்தது வழக்கமாயினும் நாட்டுவாசிகள் இந்திரராகிய புத்தபிரானைப் பொங்கலிட்டுப் பூசித்து ஏழைகளுக்கு அன்னதானஞ்செய்த வழக்கமானது மாறாது நாளது வரையில் பொங்கலிட்டு போதினாதனைப் பூசிப்பதுமன்றி மாடுகளை சுத்தஞ்செய்து பொன்னேரு பூட்டி பூமியை உழுது வடதிசைநோக்கிக் கைகூப்பி வடக்குமலை யானென்னும் வெங்கடபதியாம் இந்திரரை பூசித்து வருகின்றார்கள். இதுவே சங்கராந்தி புண்யகாலமென்பதின் கருத்தும் செயலும் என்னப்படும்.

சிலப்பதிகாரம்

வாரமுடைய திறல் வானவர்கோனுக் கெனவே
ஓரமுடையோ ருயிரிழப்ப - வீங்கு
முழவெடுத்த பேரொலியான் மூவுலகோரேத்த
விழவெடுத்தான் பூம்புகார் வேந்து.

- 5:32, சனவரி 17, 1912 –

80. கடவுளும் சாமியும்

வினா : கடவுளென்னும் பெயரின் உற்பவத்தையும், அதன் காரணத்தையும், சாமியென்னும் பெயரின் உற்பவத்தையும், அதன் காரணத்தையுங்கண்டு அடியேனது சங்கையை விளக்கித் தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.

கோ.வீ. ஜெயசேகரன், கொளம்பு.

விடை : தெய்வப்பெயர் மக்கட்பெயர் விலங்கின் பெயர் என்பவற்றுள் தாம் வினவிய காட்சிப்பொருளையும் - காட்சியற்றப்பொருளையும் தெய்வப்பெயர் தொகுதியிலேயே தெரிந்துக்கொள்ளலாம். தெய்வப் பெயருள் சூரிய, சந்திர குணியாகுங் காட்சிப்பெயரும்; கடவுள், சாமி குணமாகும் செயல்பற்றிய பெயருமேயாம். உலகத்திற்கு உபகாரமாக விளங்கும் சூரியன், சந்திரன், பூமி, நீர் காற்று, நெருப்பு முதலியவைகளை தெய்வப்பெயர்களுள் வகுத்திருப்பினும் ஆறாவது தோற்றமாகிய மக்களெனத் தோன்றி ஞானவிசாரிணையால் தன்னை உணர்ந்து காம வெகுளி மயக்கங்களை ஜெயித்து பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்கையுங்கடந்து நிருவாணமுற்று ஏழாவது தோற்றமாகிய தேவகதியில் நிலைத்திருப்போர்கள், சருவ சீவர்களுக்கும் உபகாரிகளாகும் நன்மெய்ச் செயலில் நிலைத்துள்ளபடியால் கடவுளென்றும் பரிநிருவாணமுற்று ஒளிமயமாக நட்சேத்திரம் பெற்று அகண்டத்தில் உலாவுகின்றபடியால் சாமி என்றும் சமணமுநிவர்கள் வரைந்திருக்கின்றார்கள். !

பின் கலைநிகண்டு ககரவெதுகை

ககனம்விண்படைகாடென்ப கடவுடேமுநி நன்மெப்பேர்.

சீவகசிந்தாமணி - முத்தியிலம்பகம்

தணக்குறப்பறித்தபோதுந் தானளைவிடுத்தல் செல்லா
நிணப்புடையுடம்பினாரை யாதிநீநீக்கலாகு
மணப்புடைமாலை மார்ப னொருசோலேயேதுவாகக்
கணைக்கவினழித்தகண்ணார்த் துறந்து போய் கடவுளானான்.

பான்மிடை யமிர்தம்போன்று பருகலாம் பயத்தவாகி
வானிடை முழக்கிற்கூறி வாலற வமுதமூட்டித்
தேனுடை மலர்கள் சிந்தித் திசைதொழச் சென்றபின்னாட்
டானுடை யுலகங்கொள்ளச் சாமிநாள் சார்ந்ததன்றே.

என்றுங் கூறியச் செய்யுட்களே போதுஞ் சான்றாம். மற்றும் அவரவர்கள் மனப்போக்கின்படி மதக்கடைகளை வைத்து சீவிப்பவர்கள் கிழவனைப்போல் தாடி வைத்திருக்கும் ஓர் கடவுளும், நாலுதலைக்கடவுளும், ஆறுதலைக் கடவுளும், கையே கடவுளும், காலே கடவுளும், தலையே கடவுளுமாக மக்களால் சிருஷ்டித்துக் கொண்ட கடவுளர்கள் அனந்தமுண்டு. இவைகள் யாவும் மதக்கடைபரப்பி சீவிக்கும் பொய்க்குருக்களின் போதனாக் கடவுளர் களும், பொய்க்குருக்கள் பேதை மக்களை வஞ்சித்துப் பொருள் பரிப்பதற்காக சிருஷ்டித்துக்கொண்ட கடவுளர்களென்னும் பொருளற்றப்பெயர்களேயாகும். கடவுள், சாமி என்னும் பெயர்களின் உற்பவங்களையும் அதன் பொருள்களையுந்